உயர் செயற்திறன் மையத்துக்கான புதிய பயிற்றுவிப்பாளர்கள் நியமனம்

Sri Lanka Cricket

48
New Coaching appointments for Sri Lanka Cricket

இலங்கை கிரிக்கெட் உயர் செயற்திறன் மையத்துக்கான (High Performance Center) புதிய பயிற்றுவிப்பு நியமனங்களை இலங்கை கிரிக்கெட் சபை வழங்கியுள்ளது. 

புதிய பயிற்றுவிப்பாளர்களுக்கான நியமனங்களுக்கு இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகக் குழு அனுமதியை வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

>> ஐபில் தொடரை தவறவிடும் நான்கு இலங்கை வீரர்கள்?

அதன்படி இலங்கை கிரிக்கெட் உயர் செயற்திறன் மையத்தின் வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக அனுஷ சமரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே இலங்கை தேசிய அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக 2008 – 2015 ஆண்டு காலப்பகுதியில்  செயற்பட்டிருந்தார். தற்போது உயர் செயற்தின் மையத்தில் பணியாற்ற இணைந்துள்ளார். 

அதேநேரம் உயர் செயற்திறன் மையத்தின் விளையாட்டு ஊட்டச்சத்து நிபுணராக ஹஷான் அமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிரேஷ்ட ஊட்டச்சத்து பதிவாளராக செயற்பட்டு வந்தார். 

இதேவேளை உயர் செயற்திறன் மையத்தின் புதிய உடல் சிகிச்சை நிபுணராக ஜொனதன் போர்டெர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜொனதன் போர்டெர் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் உடல் சிகிச்சை நிபுணராக செயற்பட்டுள்ளார். 

ஜொனதன் போர்டெர் மார்ச் முதலாம் திகதியிலிருந்து தன்னுடைய பணியை ஆரம்பித்துள்ளார். 19 வயதின் கீழ் அணியிலிருந்து தன்னுடைய பணியை ஆரம்பித்த இவர் அனைத்து தேசிய தரத்திலான அணிகளுடனும் இணைந்து பணியாற்ற தொடங்கியள்ளார். 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<