முக்கோண தொடருக்காக மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள இலங்கை இளையோர்

107

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி அங்கு மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்தின் இளையோர் அணிகளுடன் முக்கோண இளையோர் ஒருநாள் தொடரில் ஆடவுள்ளது.  

அந்தவகையில், இம்மாதம் 6ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த முக்கோண ஒருநாள் தொடரில் ஆடும் இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் 15 பேர் அடங்கிய வீரர்கள் குழாம் நேற்று (06) மேற்கிந்திய தீவுகள் பயணமாகியிருக்கின்றது. 

லங்கன் ப்ரீமியர் லீக் (LPL) அடுத்த ஓகஸ்டில்

அடுத்த ஆண்டின் (2020) ஓகஸ்ட் மாதம் லங்கன் ப்ரீமியர் லீக் (LPL) T20 கிரிக்கெட் தொடர்…

முன்னர் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் பங்குபெறும் இளையோர் முக்கோண தொடருக்கான இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி நவம்பர் மாதம் 28ஆம் திகதி மேற்கிந்திய தீவுகள் பயணமாக இருந்தது. எனினும், சில தவிர்க்க முடியாத காரணங்களினால் இலங்கை இளம் கிரிக்கெட்  அணி குறித்த திகதியில் இந்த சுற்றுப் பயணத்திற்காக மேற்கிந்திய தீவுகள் செல்லவில்லை. அதனால், முக்கோண இளையோர் ஒருநாள் தொடரின் போட்டி அட்டவணை மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் சபையால் பின்னர் மாற்றியமைக்கப்பட்டது.

அதன்படி, நேற்று (06) இந்த முக்கோண தொடருக்காக மேற்கிந்திய தீவுகள் சென்றிருக்கும் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (10) தமது முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகளின் இளையோர் கிரிக்கெட் அணியினை எதிர்கொள்கின்றது.

இந்த சுற்றுப்பயணத்திற்கான இலங்கை 19 இளம் கிரிக்கெட் அணியினை நோக்கும் போது அணியின் தலைவராக தொடர்ந்தும் வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரியின் நிப்புன் தனஞ்சய செயற்படவுள்ளார்.  

இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்காக தயராகி வரும் நிலையில் கமில் மிஷார, அஹான் விக்கிரமசிங்க மற்றும் அஷைன் டேனியல் போன்ற இளம் துடுப்பாட்ட வீரர்களுக்கு இந்த முக்கோண இளையோர் ஒருநாள் தொடரில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. 

இலங்கை இளையோர் அணி கடைசியாக ஆடிய பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தில் இந்த வீரர்கள் இல்லாமல் போயிருந்தது இலங்கைத் தரப்பின் துடுப்பாட்டத்தை வெகுவாக பாதித்து தொடரை இழக்கவும் காரணமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

இவர்கள் தவிர கண்டி புனித அந்தோனியர் கல்லூரியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர் சமிந்து விக்ரமசிங்க மற்றும் புனித ஜோசப் கல்லூரியின் சகலதுறை வீரர் லக்ஷான் கமகே ஆகியோரும் இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்கு பலம் சேர்க்கின்றனர். 

அதேவேளை அம்ஷி டி சில்வா, யசிரு ரொட்ரிகோ ஆகியோர் சமிந்து விஜேசிங்க, லக்ஷான் கமகேயுடன் இணைந்து இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் பந்துவீச்சுத்துறைக்கு வேகப் பந்துவீச்சாளர்களாக இத்தொடரில் பலம் சேர்க்கின்றனர். எனினும், இலங்கைத் தரப்பின் நம்பிக்கைக்குரிய வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவராக அண்மைக்காலத்தில் இருந்த டில்சான் மதுசங்க காயம் காரணமாக முக்கோண இளையோர் ஒருநாள் தொடரில் ஆடும் சந்தர்ப்பத்தினை இழந்திருக்கின்றார். 

இலங்கையில் உள்ள திறமைகளை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது – மிக்கி ஆத்தர்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மிக்கி ஆத்தர் பதவியேற்கும்…

இந்த சுற்றுப்பயணத்தின் போதும் இலங்கை அணி, முன்னாள் துடுப்பாட்ட வீரர் ஹஷான் திலகரட்ன மூலம் பயிற்றுவிக்கப்படவுள்ளதோடு, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பர்வீஸ் மஹருப் அணியின் முகாமையாளராக தொடர்ந்தும் செயற்படவுள்ளார்.

இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி 

நிப்புன் தனஞ்சய, கமில் மிஷார, நவோத் பரணவிதான, அஹான் விக்கிரமசிங்க, ரவிந்து ரசன்த, சோனால் தினுஷ, லக்ஷான் கமகே, சமிந்து விக்ரமசிங்க, சமிந்து விஜேசிங்க, அஷைன் டேனியல், திலும் சுதீர, நவீன் பெர்னாந்து, அம்ஷி டி சில்வா, யசிரு ரொட்ரிகோ, கவிந்து நதீஷன் 

சுற்றுப்பயண அட்டவணை 

  • டிசம்பர் 6 – இங்கிலாந்து எதிர் மேற்கிந்திய தீவுகள்
  • டிசம்பர் 8 – இங்கிலாந்து எதிர் மேற்கிந்திய தீவுகள்
  • டிசம்பர் 10 – இலங்கை எதிர் மேற்கிந்திய தீவுகள்
  • டிசம்பர் 11 – இலங்கை எதிர் இங்கிலாந்து 
  • டிசம்பர் 12 – இங்கிலாந்து எதிர் மேற்கிந்திய தீவுகள்
  • டிசம்பர் 14 – இலங்கை எதிர் மேற்கிந்திய தீவுகள்
  • டிசம்பர் 15 – இலங்கை எதிர் இங்கிலாந்து
  • டிசம்பர் 17 – இலங்கை எதிர் மேற்கிந்திய தீவுகள்
  • டிசம்பர் 19 – இலங்கை எதிர் இங்கிலாந்து 
  • டிசம்பர் 21 – இறுதிப் போட்டி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<