இங்கிலாந்து செல்லும் இலங்கை U19 கிரிக்கெட் அணி அறிவிப்பு

134
 

இங்கிலாந்துக்கு மூன்று இளையோர் ஒருநாள் மற்றும் இரண்டு இளையோர் டெஸ்ட் போட்டிகளுக்காக செல்லவுள்ள இலங்கையின் 19 வயதின் கீழ்ப்பட்ட (U19) கிரிக்கெட் அணிக்குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து செல்லும் இலங்கை U19 கிரிக்கெட் அணி!

அதன்படி மொத்தம் 18 பேர் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை U19 கிரிக்கெட் குழாத்தினை வழிநடாத்துவதற்காக நாலந்த கல்லூரி அணியின் மணிக்கட்டு சுழல்பந்து சகலதுறைவீரரான ரவீன் டி சில்வா நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.

அதேநேரம் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் மருதானை புனித ஜோசப் கல்லூரி வீரரான செவோன் டேனியல் இலங்கை U19 அணியின் பிரதி தலைவராக பெயரிடப்பட்டிருக்கின்றார்.

இதேநேரம் கடைசியாக நடைபெற்ற இளையோர் உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியினை பிரதிநிதித்துவம் செய்திருந்த அஞ்சல பண்டார, பவான் பதிராஜ, சதீஷ ராஜபக்ஷ, வனுஜ சஹான், ரனுத சோமரட்ன, மல்ஷா தருபதி, ட்ரவின் மதிவ், வினுஜ ரன்போல் மற்றும் அபிஷேக் லியனராச்சி ஆகியோர் இங்கிலாந்து தொடரில் தமக்கான வாய்ப்பினை தொடர்ந்து உறுதி செய்திருக்கின்றனர்.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது முன்னாள் அதிரடி துடுப்பாட்டவீரரான ஜெஹான் முபாரக் இலங்கை U19 அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயற்பட, உதவிப் பயிற்சியாளராகவும் பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும் சாமில கமகே பொறுப்பேற்றிருக்கின்றார்.

இவர்கள் தவிர கயான் விஜேகோன் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராகவும், புத்திக ஹேரத் பயிற்சியாளராகவும், பிரியன்த விக்ரமசிங்க அணியின் உடற்பயிற்சியாளராகவும் (Physiotherapist) மற்றும் ஜயன்த செனவிரத்ன முகாமையாளராகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு இராச்சிய T20 லீக்கில் தசுன் ஷானக்க

இதேவேளை இலங்கை – இங்கிலாந்து U19 அணிகள் இடையிலான சுற்றுத்தொடர் ஒகஸ்ட் மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை U19 அணி – ரவீன் டி சில்வா (அணித்தலைவர்), செவோன் டேனியல் (பிரதி தலைவர்), வனுஜ சஹான், லஹிரு தவட்டகே, அஞ்சல பண்டார, வினுஜ ரன்போல், அபிஷேக் லியனராச்சி, சதீஷ ராஜபக்ஷ, ரனுத சோமரட்ன, பவான் பதிராஜ, ட்ரவின் மதீவ், அசித வன்னிநாயக்க, கனிஷ்டன் குணரட்னம், சஹான் மிஹிர, துவின்து ரணதுங்க, துலாஜ் சமுதித, ஹசித அமரசிங்க

சுற்றுத்தொடர் அட்டவணை

திகதி போட்டி எதிரணி மைதானம்
ஆகஸ்ட் 16-18 3 நாள் பயிற்சிப்போட்டி இங்கிலாந்து இளம் லையன்ஸ் பதினொருவர் இங்கிலாந்து உயர் செயற்திறன் மையம்
ஆகஸ்ட் 21-24 முதல் டெஸ்ட் இங்கிலாந்து U19 செல்ம்ஸ்போர்ட்
ஆகஸ்ட் 28-31 இரண்டாவது டெஸ்ட் இங்கிலாந்து U19 டேர்பி
செப்டம்பர் 5 முதல் ஒருநாள் இங்கிலாந்து U19 வோர்கெஸ்டர்ஷையர்
செப்டம்பர் 8 இரண்டாவது ஒருநாள் இங்கிலாந்து U19 வோர்கெஸ்டர்ஷையர்
செப்டம்பர் 10 மூன்றாவது ஒருநாள் இங்கிலாந்து U19 லீசெஸ்டர்ஷையர்

 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<