இலங்கை கிரிக்கெட் சபையின் அனுசரணையில், எதிர்வரும் ICC சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளை இலக்காகக் கொண்டு நடைபெற்று வருகின்ற மாகாண ரீதியிலான ஒருநாள் போட்டித் தொடரின் இரண்டாவது அரையிறுதியில் இளம் வீரர் சதீர சமரவிக்ரம தனது அதிரடி சதத்தைப் பெற்றுள்ளார்.
குறித்த தொடர் இறுதிக் கட்டத்துக்கு வந்துள்ள நிலையில், ஏற்கனவே நடைபெற்று முடிந்த விறுவிறுப்பான முதலாவது அரையிறுதிப் போட்டியில் கண்டி அணியை வெற்றியீட்டிய கொழும்பு அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
சகல துறையிலும் அசத்திய ஷெஹான் ஜயசூரிய; இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ள கொழும்பு அணி
இலங்கை கிரிக்கெட் சபையின் அனுசரணையில், எதிர்வரும் ICC சம்பியன் கிண்ணப் போட்டிகளை..
அந்த வகையில், நேற்றைய தினம் நடைபெற்ற இரண்டாம் அரையிறுதிப் போட்டியில் காலி மற்றும் தம்புள்ள அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய காலி அணி, முதலாவது விக்கெட்டினை 24 ஓட்டங்களுக்கு இழந்தது. அணித் தலைவர் உபுல் தரங்க 17 ஓட்டங்களை பெற்றிருந்தபோது வேகப்பந்து வீச்சாளர் அசித மதுஷங்கவின் பந்து வீச்சில் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதனையடுத்து, களம் வந்த திமுத் கருணாரத்ன, எதிரணியின் சிறந்த களத் தடுப்பின் காரணமாக துரதிஷ்டவசமாக ரன் அவுட் முறையில் 22 ஓட்டங்களுடன் வெளியேறினார். பின்னர் நான்காவது விக்கெட்டுக்காக சதீர சமரவிக்ரமவுடன் இணைந்து கொண்ட சம்மு அஷான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இவ்விருவரும் நான்காவது விக்கெட்டுக்காக 9.5 ஓவர்களில் 70 ஓட்டங்களைப் பெற்று அணியின் ஓட்ட வேகத்தினை அதிகரித்திருந்தனர். சதீர சமரவிக்ரம 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உள்ளடங்கலாக 120 ஓட்டங்களை விளாசிய நிலையில் மிலிந்த சிரிவர்தனவின் பந்து வீச்சில் நேரடியாக போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சம்மு அஷான் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் உள்ளடங்கலாக குறுகிய நேரத்தில் 52 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
அந்த வகையில் 36 ஓவர்களில் நான்கு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 209 ஓட்டங்களை பதிவு செய்திருந்த காலி அணி, இறுதி 14 ஓவர்களுக்குள் சராசரியாக ஓவருக்கு 11 என்ற ஓட்ட வேகத்தில் மூன்று விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 153 ஓட்டங்களை அதிரடியாக குவித்திருந்தது.
அதிரடியை வெளிப்படுத்திய தசுன் ஷானக்க 27 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காமல் 49 ஓட்டங்களையும் அதிரடித் துடுப்பாட்ட வீரர் சீக்குகே பிரசன்ன 17 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் உள்ளடங்கலாக 36 ஓட்டங்களையும் பெற்று வான வேடிக்கை காட்டினர்.
எனவே காலி அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 362 ஓட்டங்களை வெற்றி இலக்காக பதிவு செய்தது. அசித மதுஷங்க 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய போதிலும் 10 ஓவர்களில் 62 ஓட்டங்களை வழங்கியிருந்தார்.
ICC சம்பியன்ஸ் கிண்ண போட்டிகளில் இலங்கை அணியின் சாதனைகள் – ஒரு கண்ணோட்டம்
ICC சம்பியன்ஸ் கிண்ண போட்டிகள் எனும் பொழுது இலங்கை அணியைப்..
கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தம்புள்ள தரப்பினருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. அவ்வணியின் அஷான் ப்ரியஞ்சனை தவிர்ந்த ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் பிரகாசிக்க தவறினர்.
இறுதிவரை சிறப்பாக துடுப்பாடிய அஷான் ப்ரியஞ்சன் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உள்ளடங்கலாக ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களை பதிவு செய்த போதிலும், ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து சென்றனர்.
அந்த வகையில், 31.3 ஓவர்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்த அவ்வணி 141 ஓட்டங்களை மாத்திரமே பதிவு செய்தது. இதன் காரணமாக கொழும்பு வீரர்கள் 221 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்று இறுதி மோதலுக்கு தகுதி பெற்றனர்.
இரண்டாவது இன்னிங்சின்போது சிறப்பாக பந்து வீசிய சதுரங்க டி சில்வா 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், அகில தனஞ்சய மற்றும் தசுன் ஷானக்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
போட்டியின் சுருக்கம்
Galle - Batting | Toss: Galle | |
---|---|---|
Sadeera Samarawickrama | b Siriwardena | 120 (104) |
Upul Tharanga | c B Fernando b A Fernando | 17 (20 |
Dimuth Karunarathne | Run Out | 22 (31) |
Minod Bhanuka | c Sandakan b A Fernando | 25 (37) |
Sammu Ashan | c Cooray b A Fernando | 52 (48) |
Chathuranga De Silva | b B Fernando | 10 (8) |
Dasun Shanaka | Not Out | 49 (27) |
Seekkuge Prasanna | c Sub b A Fernando | 36 (17) |
Suranga Lakmal | Not Out | 11 (6) |
Akila Dhananjaya | ||
Malinda Pushpakumara | ||
Total | Extras (19) | 362/7 (50 overs) |
Dambulla - Bowling | O | M | R | W |
---|---|---|---|---|
Binura Fernando | 10 | 0 | 89 | 1 |
Asitha Fernando | 10 | 0 | 62 | 4 |
Dilruwan Perera | 9 | 0 | 56 | 0 |
Milinda Siriwardena | 10 | 0 | 66 | 1 |
Lakshan Sandakan | 10 | 0 | 69 | 0 |
Ashan Priyanjan | 1 | 0 | 10 | 0 |
Dambulla - Batting | Toss: Galle | |
---|---|---|
Avishka Fernando | c Tharanga b Shanaka | 19 (19) |
Lahiru Milantha | b Lakmal | 6 (7) |
Bhanuka Rajapaksa | c Tharanga b Shanaka | 13 (13) |
Kusal Mendis | st Samarawickrama b Pushpakumara | 23 (36) |
Ashan Priyanjan | Not Out | 50 (67) |
Milinda Siriwardena | c Bhanuka b Dhananjaya | 1 (4) |
Harsha Cooray | b Dhananjaya | 1 (2) |
Dilruwan Perera | Run Out | 1 (2) |
Binura Fernando | c Shanaka b De Silva | 15 (26) |
Lakshan Sandakan | c Karunarathne b De Silva | 2 (12) |
Asitha Fernando | c Samarawickrama b De Silva | 0 (2) |
Total | Extras (10) | 141/10 (31.3 overs) |
Galle - Bowling | O | M | R | W |
---|---|---|---|---|
Suranga Lakmal | 5 | 0 | 28 | 1 |
Dasun Shanaka | 5 | 0 | 24 | 2 |
Malinda Pushpakumara | 9 | 0 | 19 | 1 |
Seekkuge Prasanna | 3 | 1 | 25 | 0 |
Chathuranga De Silva | 6.3 | 0 | 20 | 3 |
Akila Dhananjaya | 3 | 0 | 23 | 2 |