இங்கிலாந்து செல்லும் இலங்கை U19 கிரிக்கெட் அணி!

Sri Lanka U19 tour of England 2022

109
 

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு இளையோர் டெஸ்ட் மற்றும் 3 இளையோர் ஒருநாள் போட்டிகளில் இலங்கை 19 வயதின் கீழ் அணி விளையாடவுள்ளது.

இலங்கை 19 வயதின் கீழ் அணியானது இம்மாதம் 14ம் திகதி இங்கிலாந்துக்கு புறப்படவுள்ளதுடன், 16ம் திகதி முதல் 18ம் திகதிவரை பயிற்சிப்போட்டியில் விளையாடவுள்ளது. இதனைத்தொடர்ந்து 2 இளையோர் டெஸ்ட் மற்றும் 3 இளையோர் ஒருநாள் போட்டிகள் 21ம் திகதி ஆரம்பிக்கின்றன.

முதல் போட்டியில் வெற்றி பெற்ற SLC ரெட்ஸ் அணி

இந்த சுற்றுப்பயணம் குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை 19 வயதின் கீழ் அணியின் பயிற்றுவிப்பாளர் ஜெஹான் முபாரக், “இந்த தொடரானது இளம் வீரர்களுக்கு இங்கிலாந்து ஆடுகளங்கள் தொடர்பான அனுபவங்களை கொடுப்பதுடன், எதிர்காலத்தில் அவர்களுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் உள்ள சவால்களுக்கு உதவும்” என குறிப்பிட்டார்.

இலங்கை 19 வயதின் கீழ் அணியின் இறுதி சர்வதேச தொடராக இந்த தொடர் அமையவுள்ளதுடன், அணியின் பல வீரர்கள் இலங்கை வளர்ந்துவரும் அணிக்குள் நுழையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டி அட்டவணை

திகதி போட்டி எதிரணி மைதானம்
ஆகஸ்ட் 16-18 3 நாள் பயிற்சிப்போட்டி இங்கிலாந்து இளம் லையன்ஸ் பதினொருவர் இங்கிலாந்து உயர் செயற்திறன் மையம்
ஆகஸ்ட் 21-24 முதல் டெஸ்ட் இங்கிலாந்து U19 செல்ம்ஸ்போர்ட்
ஆகஸ்ட் 28-31 02வது டெஸ்ட் இங்கிலாந்து U19 டேர்பி
செப்டம்பர் 5 முதல் ஒருநாள் இங்கிலாந்து U19 வோர்கெஸ்டர்ஷையர்
செப்டம்பர் 8 02வது ஒருநாள் இங்கிலாந்து U19 வோர்கெஸ்டர்ஷையர்
செப்டம்பர் 10 03வது ஒருநாள் இங்கிலாந்து U19 லீசெஸ்டர்ஷையர்

 >> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<