இலங்கை 19 வயதின்கீழ் பூர்வாங்க குழாம் அறிவிப்பு

101

ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள முத்தரப்பு தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை 19 வயதுக்குட்பட்ட பூர்வாங்க அணியை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர் மார்ச் 15ஆம் திகதி முதல் ஏப்ரல் 04ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த தொடருக்காக பெயரிடப்பட்டுள்ள இலங்கை 19 வயதுக்குட்பட்ட பூர்வாங்க அணியில் 26 வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், இறுதி 15 வீரர்கள் பயிற்சியின் பின்னர் பெயரிடப்படவுள்ளனர்.

கடந்த ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற ஐசிசியின் இளையோர் உலகக் கிண்ணத்தில் பங்கேற்ற இலங்கை அணியில் இடம்பிடித்த ட்ரெவின் மெதிவ், ஷெவோன் டேனியல் மற்றும் மல்ஷ தருபதி ஆகிய மூவரும் முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இந்த பூர்வாங்க குழாத்தில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை 19 வயதுக்குட்பட்ட பூர்வாங்க குழாம்

ஷெவோன் டேனியல் (புனித ஜோசப் கல்லூரி), ஹிரான் ஜயசுந்தர (புனித ஜோசப் கல்லூரி), ஹிருன் கபுபண்டார (புனித ஜோசப் கல்லூரி), ட்ரெவின் மெதிவ் (புனித அந்தோனியார் கல்லூரி), கவீஷ பியூமால் (புனித அந்தோனியார் கல்லூரி), திசர ஏகநாயக்க (புனித அந்தோனியார் கல்லூரி), சமத் கோமஸ் (வெஸ்லி கல்லூரி), தீரக ரணதுங்க (திரித்துவக் கல்லூரி), மனுல குலரத்ன (திரித்துவக் கல்லூரி), விஹாஸ் தெவ்மிக (தர்ஸ்டன் கல்லூரி), விஷேன் ஹெலம்பகே (புனித பேதுரு கல்லூரி), ஜனித் பெர்னாண்டோ (ஜோசப் வாஸ் கல்லூரி), விஷ்வ ராஜபக்ஷ (ஜோசப் வாஸ் கல்லூரி), சஹன் மிஹிர (சென். ஜோன்ஸ் கல்லூரி – பாணந்துறை), தினுர களுபஹன (மஹிந்த கல்லூரி), டினிரு அபேவிக்ரம (புனித சேர்வியஸ் கல்லூரி), விஷ்வ லஹிரு (ஸ்ரீ சுமங்கல கல்லூரி – பாணந்துறை), சினெத் ஜயவர்தன (றோயல் கல்லூரி), மல்ஷ தருபதி (ரிச்மண்ட் கல்லூரி), பவன் சந்தேஷ் (தேவ பத்திராஜ கல்லூரி), ஜீவக ஷஷீன் (தேவ பத்திராஜ கல்லூரி), பிரவீன் மனிஷ (ஹங்வெல்ல ராஜசிங்க கல்லூரி), தரிந்து அமரசிங்க (பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி), ரவிஷான் நெத்சர (பீ.டீ.எஸ் குலரத்ன கல்லூரி – அம்பலாங்கொடை), ரவிந்து ரணதுங்க (மஹாநாம கல்லூரி), கருக சங்கேத் (லைசியம் கல்லூரி – வத்தளை).

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<