உலக கனிஷ்ட மெய்வல்லுனரில் 7 இலங்கை வீரர்கள்!

385
Sri Lanka to field team of seven for World Athletics U20 Championship

கென்யாவின் நைரோபியில் நடைபெறவுள்ள உலக கனிஷ்ட  மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கையைச் சேர்ந்த 7 வீர வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக கனிஷ்ட  மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 22ஆம் திகதிவரை கென்யாவின் நைரோபியில் உள்ள நயயோ விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்த தொடர் கடந்த ஆண்டு நடைபெறவிருந்த நிலையில், கொவிட்-19 தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

குறித்த இந்த தொடருக்காக, இலங்கையின் ஏழு வீர வீராங்கனைகள் தகுதிபெற்றுள்ளனர். தகுதிபெற்றுள்ளவர்களின் விபரம் இதோ,

ஆண்கள்

  • இசுரு கௌஷல்ய அபேவர்தன – 400 மீற்றர், 4X400 கலப்பு அஞ்சலோட்டம்
  • U.B.M.R.D. பண்டார – 4X400 கலப்பு அஞ்சலோட்டம்
  • H.H.R.S. ஜயசுந்தர – 4X400 கலப்பு அஞ்சலோட்டம்

பெண்கள்

  • ஷானிகா லக்ஷானி – 800 மீற்றர்
  • மெதானி ஜயமான்ன – 100 மீற்றர், 200 மீற்றர்
  • தருஷி கருணாரத்ன – 800 மீற்றர் 4X400 கலப்பு அஞ்சலோட்டம்
  • B. சயூரி லக்ஷிமா மெண்டிஸ் – 4X400 கலப்பு அஞ்சலோட்டம்

உலக கனிஷ்ட  மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்கேற்கவுள்ள இலங்கை வீர வீராங்கனைகள் எதிர்வரும், 15ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ளனர். அத்துடன், இந்த தொடரானது கொவிட்-19 தொற்று காரணமாக பார்வையாளர்களின்றி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளை படிக்க <<