இந்தியாவிடம் தோல்வியடைந்த இலங்கை அணியினர்

241

ரெட் புல் அனுசரணையில் 7ஆவது தடவையாக இடம்பெறும் உலகின் சிறந்த பல்கலைக்கழக கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான டி20 தொடரின் இறுதிக்கட்ட போட்டிகளின் இன்றைய (24)  நாள் ஆட்டத்தில் இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெற்றி பெற்றிருந்தன.

ரெட் புல் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை வெற்றியுடன் ஆரம்பித்த இந்தியா, இலங்கை, பாகிஸ்தான்

ரெட் புல் அனுசரணையில் 7 ஆவது தடவையாக உலகின் சிறந்த பல்கலைக் கழக அணிகளுக்கு இடையிலான டி20…

இன்றைய தினம் பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் என்.சி.சி மைதானத்திலும் இலங்கை மற்றும் இந்திய அணிகள் எஸ்.எஸ்சி மைதானத்திலும் விளையாடியிருந்தன. மேலும் மூன்றாவது போட்டியாக பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய (U.A.E) அணிகள் எஸ்.எஸ்.சி மைதானத்திலும் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் எதிர் ஜிம்பாப்வே

NCC மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பங்களாதேஷ் அணி 140 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சாபித் ஹொஸைனின் அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் தமது இன்னிங்ஸ் நிறைவில் ஆறு விக்கெட்டுகளை 218 ஓட்டங்களை பெற்றது. துடுப்பாட்டத்தில் அவ்வணி சார்பாக சாபித் ஹொஸைன் 45 பந்துகளில் 89 ஓட்டங்களையும் இயாசின் அரபாத் 42 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். பந்து வீச்சில் வம்பனா மற்றும் லோங்வா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் வீழ்ததியிருந்தனர்.

வெற்றி பெறுவதற்கு ஓவர் ஒன்றுக்கு 11 ஓட்டங்கள் வீதம் பெற வேண்டிய நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 78 ஓட்டங்களை மட்டுமே பெற்று 140 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. துடுப்பாட்டத்தில் வம்பனா 26 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன் ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்தனர். பந்து வீச்சில் அன்ஜும் அஹ்மட் மூன்று விக்கெட்டுகளையும் ஷரிபுல் இஸ்லாம் மற்றும் அரிபுர் ரஹ்மான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதமும் வீழ்த்தினர்.  

இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா

இலங்கை மகளிர் மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கிடையில் இன்று (24) நடைபெற்ற நான்காவது T20 கிரிக்கெட்…

இலங்கை எதிர் இந்தியா

கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.  சீரற்ற காலநிலை காரணமாக போட்டி தாமதமாக ஆரம்பிக்கப்பட்டதோடு இப்போட்டி 18 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை இலங்கை அணிக்கு வழங்கியிருந்தது. அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மதுஷான் ரவிச்சந்திரகுமார் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

அதேபோல், இலங்கை அணியின் ஏனைய வீரர்களும் பிரகாசிக்கத் தவறியதன் காரணமாக இலங்கை அணி 17.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் மலிந்து மதுரங்க மற்றும் தினுக் விக்ரமநாயக்க ஆகிய இருவரும் தலா 32 ஓட்டங்கள் வீதம் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் ரோஹன் டம்லே 10 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் சுப்ஹம் டைஸ்வால் மற்றும் திவ்யங்  ஹிங்கேகர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதமும் வீழ்த்தியிருந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முர்டாசா சபிர் ஆட்டமிழக்காமல் பெற்ற 46 ஓட்டங்களுடன் 14.2 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து இலகுவாக வெற்றியிலக்கை அடைந்தது. பந்து வீச்சில் மதுஷான் ரவிச்சந்திரகுமார் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பறியிருந்தார்.

பாகிஸ்தான் எதிர் U.A.E

SSC மைதானத்தில் நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் பாகிஸ்தான் அணியை ஐக்கிய அரபு இராச்சிய அணி எதிர்கொண்டது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்த ஆப்கான் அணி

ஆசியக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற…

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய U.A.E அணியினரின் முதலாவது மற்றும் இரண்டாம் விக்கெட்டுக்களுக்கான இணைப்பாட்டங்கள் அரைச்சதம் கடந்ததன் காரணமாக அவ்வணியினர் தமது 20 ஓவர்கள் நிறைவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

துடுப்பாட்டத்தில் U.A.E அணி சார்பாக ரோகித் ஜம்வால் ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களையும் சிராக் சூரி மற்றும் இமாத் முஸ்தாக் ஆகியோர் முறையே 53 மற்றும் 37 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் மஹ்மூத் அலி மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார்.  

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியினர் 19 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தனர். துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பாக குர்ரம் ஷஃஸாட் 41 ஓட்டங்களையும் அர்ஸலான் பர்ஸான்ட் மற்றும் சுலேமான் கஃனி ஆகியோர் முறையே 31 மற்றும் ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்கள் பெற்றிருந்தனர். பந்து வீச்சில் மெஹ்தி ஆசாரியா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார்.

இலங்கையில் நடைபெற்று வரும் ரெட் புல் அனுசரணையிலான பல்கலைக்கழக அணிகளுக்கிடையிலான இந்த டி20 தொடரின் இறுதிக்கட்ட போட்டிகளின் மேலும் மூன்று போட்டிகள் நாளை நடைபெறவுள்ளன.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<