பாகிஸ்தான் – இலங்கை அணிகள் இடையிலான முத்தரப்பு T20I தொடரின் மூன்றாவது போட்டியில் சனிக்கிழமை (22) இலங்கை அணியை பாகிஸ்தான் 7 விக்கெட்டுக்களால் வீழ்த்தியுள்ளது.
பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை U17 குழாம் அறிவிப்பு
ராவல்பிண்டியில் ஆரம்பமான இந்த மோதலில், இலங்கை நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை சிறந்த ஆரம்பம் ஒன்றை பெற்ற போதும், பின்னர் தொடர் விக்கெட்டுக்களால் தடுமாறியது.
தொடக்க வீரர்களில் ஒருவரான கமில் மிஷார 12 பந்துகளில் 22 ஓட்டங்கள் பெற்ற போதும், பெதும் நிஸ்ஸங்க 22 பந்துகளில் 17 ஓட்டங்களுடன் ஏமாற்றினார்.
இதனையடுத்து குசல் மெண்டிஸ், குசல் பெரேரா ஆகியோரும் நம்பிக்கை வழங்கத் தவறினர். பின்னர் ஒரு கட்டத்தில் 86 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட இலங்கை அணிக்கு ஜனித் லியானகே நம்பிக்கை வழங்கினார்.
இதனால் இலங்கை அணியானது 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 127 ஓட்டங்கள் பெற்றது.
இலங்கை துடுப்பாட்டம் சார்பில் ஜனித் லியானகே 38 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 3 பெளண்டரிகள் அடங்கலாக 41 ஓட்டங்கள் ஆட்டமிழக்காது பெற்றார்.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் மொஹமட் நவாஸ் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
பின்னர் போட்டியின் சவால் குறைந்த வெற்றி இலக்கான 128 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணியானது, போட்டியின் வெற்றி இலக்கை 15.3 ஓவர்களில் 131 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து நெருங்கியது.
பாகிஸ்தான் அணியின் வெற்றியை உறுதி செய்த, சாஹிப்சதா பர்ஹான் 5 சிக்ஸர்கள் மற்றும் 6 பெளண்டரிகள் அடங்கலாக 80 ஓட்டங்கள் பெற்றார்.
இலங்கைப் பந்துவீச்சில் துஷ்மன்த சமீர 2 விக்கெட்டுக்களைச் சாய்த்த போதும் அது வீணாகியது. போட்டியின் ஆட்டநாயகனாக மொஹமட் நவாஸ் தெரிவானார்.
இலங்கை அணி இந்தப் போட்டியின் தோல்வியுடன், தமது பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் ஐந்தாவது தொடர் தோல்வியை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
போட்டியின் சுருக்கம்
Result
| Batsmen | R | B | 4s | 6s | SR | |
|---|---|---|---|---|---|---|
| Pathum Nissanka | b Haris Rauf | 24 | 27 | 4 | 0 | 88.89 |
| Kamil Mishara | c Haseebullah Khan b Mohammad Wasim Jnr | 29 | 30 | 5 | 0 | 96.67 |
| Kusal Mendis | b Mohammad Wasim Jnr | 34 | 54 | 3 | 0 | 62.96 |
| Sadeera Samarawickrama | b Faisal Akram | 48 | 65 | 2 | 0 | 73.85 |
| Kamindu Mendis | c & b Faisal Akram | 10 | 9 | 2 | 0 | 111.11 |
| Janith Liyanage | b Faheem Ashraf | 4 | 13 | 0 | 0 | 30.77 |
| Pavan Rathnayake | run out (Saim Ayub) | 32 | 37 | 2 | 1 | 86.49 |
| Maheesh Theekshana | lbw b Shaheen Shah Afridi | 7 | 14 | 0 | 0 | 50.00 |
| Jeffery Vandersay | b Mohammad Wasim Jnr | 4 | 12 | 0 | 0 | 33.33 |
| Pramod Madushan | c Haseebullah Khan b Haris Rauf | 7 | 11 | 1 | 0 | 63.64 |
| Eshan Malinga | not out | 0 | 1 | 0 | 0 | 0.00 |
| Extras | 12 (b 2 , lb 3 , nb 1, w 6, pen 0) |
| Total | 211/10 (45.2 Overs, RR: 4.65) |
| Bowling | O | M | R | W | Econ | |
|---|---|---|---|---|---|---|
| Shaheen Shah Afridi | 7.2 | 1 | 36 | 1 | 5.00 | |
| Faheem Ashraf | 9 | 0 | 43 | 1 | 4.78 | |
| Haris Rauf | 9 | 1 | 38 | 2 | 4.22 | |
| Mohammad Wasim Jnr | 10 | 0 | 47 | 3 | 4.70 | |
| Faisal Akram | 10 | 0 | 42 | 2 | 4.20 | |
| Batsmen | R | B | 4s | 6s | SR | |
|---|---|---|---|---|---|---|
| Fakhar Zaman | c Kamindu Mendis b Jeffery Vandersay | 55 | 45 | 8 | 0 | 122.22 |
| Haseebullah Khan | c Eshan Malinga b Mahesh Theekshana | 0 | 12 | 0 | 0 | 0.00 |
| Babar Azam | b Jeffery Vandersay | 34 | 52 | 4 | 0 | 65.38 |
| Mohammad Rizwan | not out | 61 | 92 | 4 | 0 | 66.30 |
| Agha Salman | lbw b Jeffery Vandersay | 6 | 11 | 0 | 0 | 54.55 |
| Hussain Talat | not out | 42 | 57 | 1 | 0 | 73.68 |
| Extras | 17 (b 5 , lb 2 , nb 1, w 9, pen 0) |
| Total | 215/4 (44.4 Overs, RR: 4.81) |
| Bowling | O | M | R | W | Econ | |
|---|---|---|---|---|---|---|
| Pramod Madushan | 10 | 0 | 56 | 0 | 5.60 | |
| Maheesh Theekshana | 9.4 | 1 | 37 | 1 | 3.94 | |
| Eshan Malinga | 8 | 0 | 44 | 0 | 5.50 | |
| Janith Liyanage | 5 | 1 | 22 | 0 | 4.40 | |
| Jeffery Vandersay | 10 | 0 | 42 | 3 | 4.20 | |
| Kamindu Mendis | 2 | 0 | 7 | 0 | 3.50 | |
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















