அன்று சங்கக்கார செய்ததை இன்று குனதிலக்க செய்கிறார் – மிஸ்பா

95

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான தனுஷ்க குனத்திலக்கவின் ஆட்டமானது அன்று குமார் சங்கக்கார செய்தது போன்று உள்ளது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும் அதன் தேர்வாளர்களில் ஒருவருமான மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார். 

மூன்றாவது போட்டிக்கு முன்னர் T20i தொடரை கைப்பற்ற வேண்டும் – தனுஷ்க

இளம் வீரர்களைக் கொண்ட ஒரு அணியாக பாகிஸ்தானுக்கு ……

இலங்கை அணிக்கு எதிரான T20i தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியில் குறுகிய இடைவெளி ஒன்றின் பின்னர் உள்வாங்கப்பட்ட உமர் அக்மல், அஹ்மட் ஷேசாத் போன்ற சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர்கள் பிரகாசிக்க தவறியதனை அடுத்து விமர்சனங்கள் எழுந்திருந்தன. இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே மிஸ்பா உல் ஹக், வீரர்கள் அனைவருக்கும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

”இப்போது பயத்திற்கான பொத்தானை யாரும் அழுத்த தேவையில்லை. சாதிக்க தவறிய வீரர்களை விமர்சிப்பவர்கள் கடினமாக நோக்க வேண்டாம்.  ஒருவர் நீண்ட காலத்தின் பின்னர் அணியில் உள்வாங்கப்பட்டால் அவர் தனது பழைய ஆட்டத்திற்கு மீண்டுவர சிறிது காலம் எடுக்கும்.” 

குறித்த வீரர்கள் ஜொலிக்க தவறிய நிலையில் பாகிஸ்தான் அணி கடந்த சனிக்கிழமை (5) நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான முதல் T20 போட்டியில் தோல்வியினை தழுவியது. அதோடு, பாகிஸ்தான் இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரினை பறிகொடுக்காமல் இருக்க இரண்டாவது T20 போட்டியில் கட்டாய வெற்றியினை எதிர்பார்த்த வண்ணம் காணப்படுகின்றது. 

இந்நிலையில், முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு காரணம் என்ன என்பது தொடர்பில் கேட்கப்பட்டிருந்த போது மிஸ்பா உல் ஹக்கின் பதில் இவ்வாறு இருந்தது. 

”இதுவரையில் நடைபெற்றிருக்கும் T20 போட்டிகளில் பெரும்பாலான போட்டிகளின் முடிவுகள் தீர்மானிக்கப்பட்டன. போட்டியின் முதல் பவர் பிளே (முதல் 6 ஓவர்கள்) இன் அடிப்படையிலேயே, உங்களால் அங்கே சிறப்பாக செயற்பட முடியும் எனில், போட்டியில் வெற்றி பெற அதிக வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும். இதில் சிறப்பாக செயற்பட தவறியதே எமது தோல்விக்கு பிரதான காரணம்” 

உலகில் முதல்நிலை அணியாக இருக்கும் பாகிஸ்தான் முதல் T20 போட்டியில் தோல்வியினை தழுவியமைக்கு, இளம் வீரர்களை கொண்ட இலங்கை அணியின் துடுப்பாட்டமும் பிரதான காரணமாக இருந்தது. இலங்கை அணியின் துடுப்பாட்டம் பற்றி மிஸ்பா உல் ஹக் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

”நாம் அதிகமாக இந்த தொடர்களில் (இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணத்திலக்கவுக்கு எதிராகவே ஆடியிருந்தோம். ஒருநாள் தொடரோ, T20 தொடரோ அவரது ஆட்டம் எமக்கு எதிராக வழமையாக இடம்பெறும் விடயம் ஒன்றை நினைவுபடுத்தியது. இதனை நான் இலங்கை அணிக்கு எதிராக ஆடும் போது குமார் சங்கக்கார செய்தார். இப்போது அதனை குணத்திலக்க செய்கின்றார்.”  

இளம் வீரர்களின் தன்னம்பிக்கை வெற்றிக்கு உதவியது – தசுன் ஷானக்க

பாகிஸ்தான் அணிக்கெதிராக நடைபெற்ற முதலாவது டி-20 போட்டியில் வெற்றி பெறுவதற்கு இலங்கை அணியில் உள்ள இளம் வீரர்களின் முன் ……….

பாகிஸ்தான் அணிக்கு எதிரா ன முதல் T20 போட்டியில் தனுஷ்க குணத்திலக்க, அரைச்சதம் (57) ஒன்றை விளாசியிருந்ததுடன், இலங்கை சவாலான மொத்த ஓட்டங்களை பெறவும் தனது பங்களிப்பினை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இன்னும் முதல் T20 போட்டி குறித்து மேலும் கதைத்திருந்த மிஸ்பா உல் ஹக், இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளார்களையும் பாராட்டியிருந்தார். 

”நான் அவர்களின் பந்துவீச்சினை கண்டு உண்மையில் ஆச்சரியமடைகின்றேன். குறிப்பாக இலங்கை அணியின் இரண்டு மணிக்கட்டு சுழல்பந்துவீச்சாளர்களும் கடினமான சூழ்நிலைகளிலும் சிறப்பாக செயற்பட்டது ஆச்சரியமாக இருந்தது. அதோடு, வேகப் பந்துவீச்சாளர்களும் சிறப்பாக இருக்கின்றனர். இது (இலங்கை கிரிக்கெட் அணி) இளம் வீரர்கள் கொண்ட மிகவும் சிறந்த தொகுதி.” 

இலங்கை அணியுடனான T20 தொடர் ஒருபுறமிருக்க, அடுத்த நடைபெறும் T20 உலகக் கிண்ணத்தையும் கருத்திற்கொண்டு பாகிஸ்தான் செயற்படுவதாக தெரிவித்திருந்த மிஸ்பா உல் ஹக், இலங்கை அணிக்கு எதிரான T20 தொடரின் அடுத்த போட்டியில் பாகிஸ்தான் சிறந்த முறையில் செயற்படும் எனவும் கூறியிருந்தார். 

”போட்டி முடிவுகள் உங்களது பக்கம் வராதுவிட்ட போதிலும் நீங்கள் பொறுமையினை கடைப்பிடிக்க வேண்டும். இந்த தொடரில் எமது அணி நல்ல மீள்வருகை ஒன்றினை தரும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.” என்றார். 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<