சுற்றுலா இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணியானது 113 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
மூன்றாவது T20 போட்டியில் பங்களாதேஷ் U19 மகளிர் அணிக்கு வெற்றி
அத்துடன் இந்த வெற்றியுடன் நியூசிலாந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினையும் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க 2-0 என கைப்பற்றியுள்ளது. அதேநேரம் இலங்கை தமது நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் T20 தொடரிற்கு அடுத்ததாக ஒருநாள் தொடரினையும் இழந்துள்ளது.
இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி இன்று (08) ஹமில்டன் நகரில் ஆரம்பமாகியது.
மழையின் காரணமாக அணிக்கு 37 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை களத்தடுப்பினை தெரிவு செய்தது.
எனவே போட்டியில் முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணிக்கு ரச்சின் ரவீந்திரா மற்றும் மார்க் சப்மன் ஆகியோர் சிறந்த ஆரம்பத்தை வழங்கினர். இதனால் நியூசிலாந்து வீரர்கள் 37 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 255 ஓட்டங்கள் எடுத்தனர்.
நியூசிலாந்து துடுப்பாட்டம் சார்பில் ரச்சின் ரவீந்திரா 52 பந்துகளில் 9 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 79 ஓட்டங்கள் பெற, மார்க் சப்மன் 52 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பெளண்டரிகளுடன் 63 ஓட்டங்கள் எடுத்தார்.
இலங்கை பந்துவீச்சு சார்பாக மகீஷ் தீக்ஸன ஹட்ரிக் அடங்கலாக 4 விக்கெட்டுக்களை சாய்க்க, வனிந்து ஹஸரங்க 2 விக்கெட்டுக்களை சுருட்டினார்.
இலங்கை தொடருக்கான திட்டங்களை ஆரம்பித்துள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 256 ஓட்டங்களை அடைய பதிலுக்கு ஆடிய இலங்கை வீரர்கள் தொடக்கம் முதலே தடுமாறி இறுதியில் 30.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 142 ஓட்டங்கள் மட்டும் எடுத்தனர்.
இலங்கை துடுப்பாட்டம் சார்பில் கமிந்து மெண்டிஸ் அதிகபட்சமாக 64 ஓட்டங்கள் பெற்றார்.
நியூசிலாந்து பந்துவீச்சு சார்பில் வில்லியம் ஓரூர்க்கே 3 விக்கெட்டுக்களையும், ஜேக்கப் டப்பி 2 விக்கெட்டுக்களையும் சாய்த்தனர்.
போட்டியின் ஆட்டநாயகன் விருதினை ரச்சின் ரவீந்திரா பெற்றுக்கொண்டார்.
போட்டியின் சுருக்கம்
முடிவு – நியூசிலாந்து 113 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<