Home Tamil இலகு வெற்றியினைப் பதிவு செய்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி

இலகு வெற்றியினைப் பதிவு செய்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி

122
PA Images via Getty Images
 

சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான T20 தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 8 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியினைப் பதிவு செய்திருப்பதோடு மூன்று போட்டிகள் கொண்ட தொடரிலும் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. 

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அங்கே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடுகின்றது. 

>> Video – இங்கிலாந்து அணியை வீழ்த்துவதற்கான வழி என்ன? கூறும் Kusal Perera

அதன்படி, இந்த கிரிக்கெட் சுற்றுத்தொடர்களில் முதலாவதாக இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான T20 தொடர் நடைபெறும் நிலையில் முதல் T20 போட்டி நேற்று (23) கார்டிப் நகரில் ஆரம்பமாகியது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் பெரேரா முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தெரிவு செய்திருந்தார். 

இப்போட்டியின் மூலம் அவிஷ்க பெர்னாந்து, அகில தனன்ஞய ஆகியோர் சிறிய இடைவெளி ஒன்றுக்குப்பின் இலங்கை கிரிக்கெட் அணியில் மீண்டும் இணைய, இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி மொயின் அலிக்கு ஓய்வு வழங்கியிருந்தது. 

இலங்கை அணி – தனுஷ்க குணத்திலக்க, அவிஷ்க பெர்னாந்து, குசல் பெரேரா (தலைவர்), குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா, தசுன் ஷானக்க, வனிந்து ஹஸரங்க, இசுரு உதான, அகில தனன்ஞய, துஷ்மன்த சமீர, நுவான் ப்ரதீப்

இங்கிலாந்து – ஜேசன் ரோய், ஜோஸ் பட்லர், டாவிட் மலான், ஜொன்னி பெயர்ஸ்டோவ், இயன் மோர்கன் (தலைவர்), லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டன், கிறிஸ் வோக்ஸ், ஆதீல் ரஷீட், மார்க் வூட்

>> “நாம் இழப்பதற்கு ஒன்றும் இல்லை” – குசல் பெரேரா

தொடர்ந்து போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை கிரிக்கெட் அணி ஆரம்பத்தில் இருந்தே துடுப்பாட்டத்தில் தடுமாற்றம் காட்டியது. இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்டவீரர்களில் ஒருவரான அவிஷ்க பெர்னாந்து ஓட்டங்கள் எதுவும் பெறாமல் ஆட்டமிழக்க, ஏனைய ஆரம்பவீரரான தனுஷ்க குணத்திலக்க வெறும் 19 ஓட்டங்களை மாத்திரமே எடுத்திருந்தார். 

பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் மத்திய வரிசையும், துடுப்பாட்ட தடுமாற்றத்தினைக் காட்டிய போதும் தசுன் ஷானக்க மாத்திரமே போராட்டத்தினை வெளிப்படுத்தினார். 

இதனால், 20 ஓவர்கள் நிறைவில் இலங்கை கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. 

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் T20 சர்வதேச போட்டிகளில் தனது இரண்டாவது அரைச்சதத்தினைப் பெற்ற, தசுன் ஷானக்க 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் உடன் 44 பந்துகளுக்கு 50 ஓட்டங்களைப் பெற்றிருக்க, அணித்தலைவர் குசல் பெரேரா 30 ஓட்டங்களை எடுத்திருந்தார். 

>> இரண்டு‌‌ ‌‌உலகக்‌‌ ‌‌கிண்ண‌‌ ‌‌தொடர்களை‌‌ ‌‌நடத்த‌‌ ‌‌இலங்கை‌ ‌தயார்‌ ‌ ‌

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் ஆதில் ரஷீட் மற்றும் சாம் கர்ரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர். 

பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 130 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி குறித்த வெற்றி இலக்கினை 17.2 ஓவர்களில் வெறும் 2 விக்கெட்டுக்களை இழந்து 130 ஓட்டங்களுடன் அடைந்தது. 

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வெற்றியினை உறுதி செய்த ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காது 55 பந்துகளில் 8 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 68 ஓட்டங்களைப் பெற, ஜேசன் ரோய் 36 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் துஷ்மன்த சமீர மற்றும் இசுரு உதான ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றிய போதும் இருவரினதும் பந்துவீச்சு வீணானது. 

போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜோஸ் பட்லர் தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இப்போட்டி மூலம் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தினை தோல்வியுடன் ஆரம்பித்துள்ள இலங்கை கிரிக்கெட் இந்த தொடரினை தக்கவைக்க இரண்டாவது T20 போட்டியில் கட்டாய வெற்றியினை எதிர்பார்த்த வண்ணம் இன்று (24) விளையாடவுள்ளது. 

போட்டியின் சுருக்கம்

A PHP Error was encountered

Severity: Warning

Message: Invalid argument supplied for foreach()

Filename: controllers/Embed.php

Line Number: 86

Backtrace:

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/controllers/Embed.php
Line: 86
Function: _error_handler

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/index.php
Line: 315
Function: require_once


A PHP Error was encountered

Severity: Warning

Message: Invalid argument supplied for foreach()

Filename: embed/match_result.php

Line Number: 115

Backtrace:

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/views/embed/match_result.php
Line: 115
Function: _error_handler

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/application/controllers/Embed.php
Line: 92
Function: view

File: /var/www/stats.thepapare.com/htdocs/cricket/index.php
Line: 315
Function: require_once



முடிவு – இங்கிலாந்து கிரிக்கெட் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி  

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<