Home Tamil இலங்கையைப் பலப்படுத்திய தனன்ஞய – மெண்டிஸ் ஜோடி

இலங்கையைப் பலப்படுத்திய தனன்ஞய – மெண்டிஸ் ஜோடி

Sri Lanka tour of Bangladesh 2024

58
Sri Lanka tour of Bangladesh 2024

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்திருக்கும் நிலையில் இலங்கை அணி தனன்ஞய டி சில்வா, கமிந்து மெண்டிஸ் ஆகியோரது சதங்களோடு பலம் பெற்றிருக்கின்றது.

>>ஐபில் தொடரை தவறவிடும் நான்கு இலங்கை வீரர்கள்?<<

முன்னதாக சில்லேட் நகரில் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் தலைவர் நஜ்முல் ஹொசைன் ஷன்டோ முதலில் இலங்கையை துடுப்பாடப் பணித்தார்.

அதன்படி இப்போட்டியில் முதலில் துடுப்பாடத் தொடங்கிய இலங்கை அணி தொடக்கத்தில் இருந்து தடுமாற்றம் காண்பிக்கத் தொடங்கியது. இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர்களில் ஒருவரான நிஷான் மதுஷ்க காலேத் அஹ்மட்டின் பந்துவீச்சில் வெறும் 02 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார்.

நிஷான் மதுஷ்கவின் பின்னர் இலங்கை அணியின் இரண்டாம் விக்கெட்டுக்காக குசல் மெண்டிஸ், திமுத் கருணாரட்ன ஜோடி இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்க முயன்ற போதிலும் அது 37 ஓட்டங்களுடன் முடிவடைந்தது. இலங்கை அணியின் இரண்டாவது விக்கெட்டாக குசல் மெண்டிஸ் 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

பின்னர் இலங்கை அணிக்கு பங்களாதேஷ் தமது சிறந்த பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பின் மூலம் நெருக்கடி உருவாக்கத் தொடங்கியது. இதனால் இலங்கை அணி முதல் நாளின் மதிய போசணத்திற்கு முன்பதாகவே 57 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

எனினும் இந்த தருணத்தில் இலங்கை அணிக்காக ஜோடி சேர்ந்த அதன் தலைவர் தனன்ஞய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகிய இருவரும் பொறுப்புடன் ஆட இலங்கை அணி முதல் நாளின் மூன்றாவது இடைவெளி வரை மேலதிக விக்கெட் இழப்பின்றி தமது துடுப்பாட்டத்தினை தொடர்ந்தது. அத்துடன் கமிந்து மெண்டிஸ் – தனன்ஞய டி சில்வா ஆகிய இருவரும் சதங்களையும் பூர்த்தி செய்து இலங்கை அணியின் ஆறாம் விக்கெட் இணைப்பாட்டமாக 202 ஓட்டங்களைப் பெற்றனர்.

>>உயர் செயற்திறன் மையத்துக்கான புதிய பயிற்றுவிப்பாளர்கள் நியமனம்<<

இலங்கை அணியின் ஆறாம் விக்கெட்டாக ஆட்டமிழந்த கமிந்து மெண்டிஸ் டெஸ்ட் போட்டிகளில் தன்னுடைய கன்னி சதத்தோடு 3 சிக்ஸர்கள் மற்றும் 11 பௌண்டரிகள் அடங்கலாக 102 ஓட்டங்கள் எடுத்தார். கமிந்து மெண்டிஸின் பின்னர் சதம் கடந்த இலங்கை அணித்தலைவர் தனன்ஞய டி சில்வாவின் விக்கெட்டும் பறிபோனது.

தனன்ஞயவின் பின்னர் பின்வரிசை விக்கெட்டுக்களை துரிதமாக பறிகொடுத்த இலங்கை அணியானது 68 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 280 ஓட்டங்களை முதல் இன்னிங்ஸிற்காக எடுத்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் தனன்ஞய டி சில்வா 12 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக தன்னுடைய 11ஆவது டெஸ்ட் சதத்தோடு 102 ஓட்டங்கள் பெற்றார்.

பங்களாதேஷ் பந்துவீச்சில் காலேத் அஹ்மட் மற்றும் நஹிட் ரனா ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

தொடர்ந்து தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்த பங்களாதேஷ் அணியானது முதல் நாள் ஆட்டநிறைவில் 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது. களத்தில் ஆட்டமிழக்காது நிற்கும் மஹ்முதுல் ஹஸன் ஜோய் 9 ஓட்டங்களுடனும், தய்ஜூல் இஸ்லாம் ஓட்டமேதுமின்றியும் காணப்படுகின்றனர்.

இலங்கை பந்துவீச்சில் விஷ்வ பெர்னாண்டோ 2 விக்கெட்டுக்கள் சாய்க்க, கசுன் ராஜித ஒரு விக்கெட்டினை சுருட்டியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

Result


Bangladesh
188/10 (51.3) & 182/10 (49.2)

Sri Lanka
280/10 (68) & 418/10 (110.4)

Batsmen R B 4s 6s SR
Nishan Madushka c Mehidy Hasan Miraz b Khaled Ahmed 2 9 0 0 22.22
Dimuth Karunaratne b Khaled Ahmed 17 37 1 0 45.95
Kusal Mendis c Zakir Hasan b Khaled Ahmed 16 26 2 0 61.54
Angelo Mathews run out (Najmul Hossain Shanto) 5 7 1 0 71.43
Dinesh Chandimal c Mehidy Hasan Miraz b Shoriful Islam 9 13 0 0 69.23
Dhananjaya de Silva c Mehidy Hasan Miraz b Nahid Rana 102 131 12 1 77.86
Kamindu Mendis c Liton Das b Nahid Rana 102 127 11 3 80.31
Prabath Jayasuriya c Liton Das b Nahid Rana 1 11 0 0 9.09
Kasun Rajitha not out 6 27 0 0 22.22
Vishwa Fernando c Liton Das b Taijul Islam 9 19 0 0 47.37
Lahiru Kumara run out (Shahadat Hossain) 0 6 0 0 0.00


Extras 11 (b 2 , lb 4 , nb 5, w 0, pen 0)
Total 280/10 (68 Overs, RR: 4.12)
Bowling O M R W Econ
Shoriful Islam 14 0 59 1 4.21
Khaled Ahmed 17 2 72 3 4.24
Nahid Rana 14 2 87 3 6.21
Taijul Islam 13 6 31 1 2.38
Mehidy Hasan Miraz 10 1 25 0 2.50
Batsmen R B 4s 6s SR
Mahmudul Hasan Joy  c Dhananjaya de Silva b Lahiru Kumara 12 46 1 0 26.09
Zakir Hasan lbw b Vishwa Fernando 9 8 2 0 112.50
Najmul Hossain Shanto lbw b Vishwa Fernando 5 10 0 0 50.00
Mominul Haque c Kamindu Mendis b Kasun Rajitha 5 7 1 0 71.43
Taijul Islam c Kusal Mendis b Kasun Rajitha 47 80 6 0 58.75
Shahadat Hossain c Dhananjaya de Silva b Lahiru Kumara 18 26 3 0 69.23
Liton Das b Lahiru Kumara 25 43 4 0 58.14
Mehidy Hasan Miraz c Nishan Madushka b Kasun Rajitha 11 34 1 0 32.35
Shoriful Islam c & b Vishwa Fernando 15 21 0 2 71.43
Khaled Ahmed c Kusal Mendis b Vishwa Fernando 22 28 1 2 78.57
Nahid Rana not out 0 8 0 0 0.00


Extras 19 (b 9 , lb 7 , nb 2, w 1, pen 0)
Total 188/10 (51.3 Overs, RR: 3.65)
Bowling O M R W Econ
Vishwa Fernando 15.3 2 48 4 3.14
Kasun Rajitha 16 3 56 3 3.50
Lahiru Kumara 12 1 31 3 2.58
Prabath Jayasuriya 7 1 33 0 4.71
Dhananjaya de Silva 1 0 4 0 4.00
Batsmen R B 4s 6s SR
Nishan Madushka c Liton Das b Nahid Rana 10 20 1 0 50.00
Dimuth Karunaratne c Nahid Rana b Shoriful Islam 52 101 7 1 51.49
Kusal Mendis c Liton Das b Nahid Rana 3 10 0 0 30.00
Angelo Mathews c Liton Das b Taijul Islam 22 24 3 0 91.67
Dinesh Chandimal lbw b Mehidy Hasan Miraz 0 2 0 0 0.00
Dhananjaya de Silva c Zakir Hasan b Mehidy Hasan Miraz 108 179 9 2 60.34
Vishwa Fernando c Mehidy Hasan Miraz b Khaled Ahmed 4 24 0 0 16.67
Kamindu Mendis c Mehidy Hasan Miraz b Taijul Islam 164 237 14 0 69.20
Prabath Jayasuriya b Mehidy Hasan Miraz 25 47 4 0 53.19
Lahiru Kumara lbw b Mehidy Hasan Miraz 0 1 0 0 0.00
Kasun Rajitha not out 4 20 0 0 20.00


Extras 26 (b 12 , lb 3 , nb 1, w 10, pen 0)
Total 418/10 (110.4 Overs, RR: 3.78)
Bowling O M R W Econ
Shoriful Islam 21 1 75 1 3.57
Khaled Ahmed 18 1 46 1 2.56
Nahid Rana 20 0 128 2 6.40
Taijul Islam 20.4 2 75 2 3.68
Mehidy Hasan Miraz 29 6 74 4 2.55
Mominul Haque 1 1 0 0 0.00
Najmul Hossain Shanto 1 0 5 0 5.00


Batsmen R B 4s 6s SR
Mahmudul Hasan Joy  lbw b Vishwa Fernando 0 4 0 0 0.00
Zakir Hasan c Kusal Mendis b Lahiru Kumara 19 22 2 0 86.36
Najmul Hossain Shanto c Dimuth Karunaratne b Kasun Rajitha 6 5 1 0 120.00
Mominul Haque not out 87 148 12 1 58.78
Shahadat Hossain c Kusal Mendis b Vishwa Fernando 0 3 0 0 0.00
Liton Das c Angelo Mathews b Vishwa Fernando 0 1 0 0 0.00
Taijul Islam lbw b Kasun Rajitha 6 15 1 0 40.00
Mehidy Hasan Miraz c Dhananjaya de Silva b Kasun Rajitha 33 50 6 0 66.00
Shoriful Islam c & b Kasun Rajitha 12 42 0 0 28.57
Khaled Ahmed c Kusal Mendis b Kasun Rajitha 0 1 0 0 0.00
Nahid Rana c Dhananjaya de Silva b Lahiru Kumara 0 8 0 0 0.00


Extras 19 (b 11 , lb 3 , nb 3, w 2, pen 0)
Total 182/10 (49.2 Overs, RR: 3.69)
Bowling O M R W Econ
Vishwa Fernando 15 5 36 3 2.40
Kasun Rajitha 14 1 56 5 4.00
Lahiru Kumara 11.2 1 39 2 3.48
Prabath Jayasuriya 9 1 37 0 4.11



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<