முன்னாள் அணித் தலைவரை பயிற்சியாளராக நியமித்தது ஆர்சனல்

72

ஆர்சனல் தனது முன்னாள் அணித் தலைவர் மைக்கல் ஆர்டேடாவை தலைமை பயிற்சியாளராக மூன்றரை ஆண்டு கால ஒப்பந்தமாக நியமித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஸ்பெயினின் உனை எமரிக்குக்கு பதிலாகவே அவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஐந்து ஆண்டு காலம் ஆர்சனல் அணிக்காக விளையாடி இருக்கும் 37 வயதுடைய ஆர்டேடா FA கிண்ணத்தை இரு முறை வென்றுள்ளார்.

2016 ஆம் ஆண்டு ஒரு வீரராக ஓய்வுபெற்ற பின் மன்செஸ்டர் அணியுடன் இணைந்த ஆர்டேடா, பெப் குவார்டியோலாவின் கீழ் ஒரு பயிற்சியாளராக பணியாற்றினார்.

கோலின்றி முடிவுற்ற எல் கிளாசிகோ

ஸ்பெயின் லா லிகா தொடரில் பார்சிலோனா மற்றும் ரியல் மெட்ரிட் அணிகள்…

“விளையாட்டின் உயர்ந்த கிண்ணங்களுக்காக நாம் போட்டியிட வேண்டியுள்ளது. கழகத்தின் (உரியமையாளர்கள்) ஸ்டான் மற்றும் ஜோஷ் மற்றும் மூத்தவர்களுடன் பேசும்போது நான் இதனை தெளிவாகக் குறிப்பிட்டேன்” என்று ஆர்டேடா தெரிவித்தார்.

இதன்படி ஆர்சனல் அணியின் இடைக்கால முகாமையாளர் பிரட்டி ஜங்பேர்க்கிடம் இருந்து நாளை (22) அந்தப் பொறுப்பை ஆர்டேடா ஏற்கவுள்ளார். ஆர்சனல் அணி இன்று ப்ரீமியர் லீக்கில் எவர்டனை எதிர்கொள்ளவுள்ளது.

ஆர்சனல் தற்போது ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் 22 புள்ளிகளுடன் 10 ஆவது இடத்தில் உள்ளது. ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்கிற்கு தகுதிபெறும் கடைசி இடமான நான்காவது இடத்தில் இருக்கும் செல்சியை விடவும் ஏழு புள்ளிகள் குறைவாக உள்ளது.

“அந்த இலக்கை எட்டுவதற்கு நாம் அதிகம் முயற்சிக்க வேண்டும் என்பது எமக்குத் தெரியும், ஆனால் அதனைச் செய்வேன் என்று நான் உறுதியாக உள்ளேன்” என்று தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கமுன் ஆர்டேடா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக டொட்டன்ஹாம் தனது தலைமை பயிற்சியாளர் மெரிசியோ பொச்சட்டினோவை ஒரு மாதத்திற்கு முன் அதிரடியாக பதவி நீக்கி அவருக்கு பதில் ஒருசில மணி நேரத்திற்குள் ஜோஸ் மொரின்ஹோவை நியமித்ததை அடுத்து அந்த அணி சிறப்பாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க