இரண்டாவது முறையாகவும் இலங்கை ரக்பி சம்மேளனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இலங்கை சூப்பர் 7s அணிக்கு 7 பேர் கொண்ட ரக்பி போட்டித் தொடரில் முதலாம் கட்ட போட்டிகள் இன்று கண்டி நித்தவெல மைதானத்தில் ஆரம்பமாகியது.

இலங்கை ரக்பி சம்மேளனம் மற்றும் போட்டியின் பிரதான அனுசரனையாளரான டயலொக் அக்சியாடா ஆகியன இணைந்து நடாத்தும் இப்போட்டியில் கடந்த வருடம் பங்குபற்றிய 8 அணிகளான எக்சஸ் கிங்ஸ், காகில்ஸ் கிளேடியேட்டர்ஸ், எடிசலாட் பந்தர்ஸ், EZY வூல்வ்ஸ், KBSL ட்ரகன்ஸ், சொப்ட்லொஜிக் வொரியர்ஸ், மொபிடெல் ஈகல்ஸ் மற்றும் வாக்கர்ஸ் வைப்பர்ஸ் ஆகிய அணிகள் இவ்வருடமும் போட்டியிட்டன. அது மட்டுமல்லாது 19 வயதிற்கு உட்பட்ட 8 பாடசாலைகள் அணிகளும் இன்று போட்டியில் பங்குபற்றின.

SLSuper7s-3முதன் முறையாக கண்டி நகரில் சூப்பர் 7s போட்டிகள் நடைபெற்றதோடு, இம்முறை மிகவும் கோலாகலமாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இம்முறை உள்நாட்டு வீரர்களுடன் பல வெளிநாட்டு வீரர்களும் இப்போட்டித் தொடரில் பங்குபற்றினர்.

அந்தவகையில் பீஜி நாட்டிலிருந்து 10 வீரர்களும், கென்ய நாட்டிலிருந்து 7 வீரர்களும், தென் ஆபிரிக்க வீரர்கள் 4 பேர், சமோஆ நாட்டிலிருந்து 3 வீரர்கள்  மற்றும் அமெரிக்க வீரர் உள்ளடங்கலாக பல வீரர்கள் இன்று நடைபெற்ற போட்டியில் தமது திறமையை வெளிப்படுத்தியதால் போட்டிகள் விறுவிறுப்பாக அமைந்தன.

முதலாம் நாளான இன்று கழக அணிகள் மற்றும் பாடசாலை அணிகள் குழு மட்ட போட்டிகளில் பங்குபற்றியதுடன், பாடசாலை அணிகளுக்கு இடையிலான காலிறுதிப் போட்டிகளும் இன்று நடைபெற்றது. அவ்வகையில் கழக அணிகள் 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு குழு மட்ட போட்டிகள் நடைபெற்றதுடன், பாடசாலை அணிகளும் 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு குழுமட்டப் போட்டிகள் நடைபெற்றன.

கழக மட்டம்

A B
வாக்கர்ஸ் வைப்பர்ஸ் எக்சஸ் கிங்ஸ்
காகில்ஸ் கிளேடியேட்டர்ஸ் KBSL ட்ரகன்ஸ்
EZY வூல்வ்ஸ் சொப்ட்லொஜிக் வொரியர்ஸ்
எடிசலாட் பந்தர்ஸ் மொபிடெல் ஈகல்ஸ்

இலங்கை ரக்பியில் பல மாற்றங்களை ஏற்படுத்த முடிவு

பாடசாலை மட்டம்

A B
புனித ஜோசப் கல்லூரி திரித்துவக் கல்லூரி
புனித பேதுரு கல்லூரி புனித அந்தோனியார் கல்லூரி
இசிபதன கல்லூரி கிங்ஸ்வூட் கல்லூரி
தர்மராஜ கல்லூரி கல்கிஸ்ஸ விஞ்ஞான கல்லூரி

பாடசலை அணிகளுக்கிடையிலான போட்டிகளுடன் இன்றைய நாள் சிறப்பாக ஆரம்பித்தது. இடையிடையே மழை குறுக்கிட்டாலும் போட்டியின் வேகத்தை மழையினால் கட்டுப்படுத்த முடியவில்லை.

SLSuper7s-1பாடசலை அணிகளுக்கிடையிலான போட்டிகளில் குழு A இல் புனித ஜோசப் கல்லூரியும், குழு B இல் திரித்துவக் கல்லூரியும் ஆதிக்கம் செலுத்தின. அவ்வகையில் திரித்துவக் கல்லூரி குழு B இல் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று, குழு B இல் முதலாம் இடத்தை பிடித்தது. மறுமுனையில் புனித ஜோசப் கல்லூரியானது தர்மராஜ கல்லூரியுடனான போட்டியை சமநிலையில் முடித்தாலும், குழு A இல் முதலாம் இடத்தைப் பிடித்தது. இலங்கை ரக்பி மன்னர்கள் என அழைக்கப்படும் இசிபதன கல்லூரியானது அனைத்து போட்டிகளிலும் தோல்வியுற்று ஏமாற்றம் அளித்தனர். குழு மட்ட போட்டிகளின் பின்னர் அணிகளின் தரவரிசை பின்வருமாறு,

A B
புனித ஜோசப் கல்லூரி திரித்துவக் கல்லூரி
புனித பேதுரு கல்லூரி கல்கிஸ்ஸ விஞ்ஞான கல்லூரி
தர்மராஜ கல்லூரி புனித அந்தோனியார் கல்லூரி
இசிபதன கல்லூரி கிங்ஸ்வூட் கல்லூரி

கழக மட்ட போட்டிகளில் கடந்த வருடம் சம்பியனான மொபிடெல் ஈகல்ஸ் அணியானது இம்முறையும் கிண்ணத்தைக் கைப்பற்றும் எதிர்பார்ப்புடன் களமிறங்கியது. அதுபோலவே சிறப்பாக செயற்பட்டு இம்முறையும் தமது குழுவில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. குழு A இல் போட்டி சிறிது கடினமாக காணப்பட்டது. காகில்ஸ் கிளேடியேட்டர்ஸ் மற்றும் எடிசலாட் பந்தர்ஸ் ஆகிய அணிகள் குழு A இல் தலா இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றாலும் புள்ளிகள் அடிப்படையில் காகில்ஸ் கிளேடியேட்டர்ஸ் அணியானது முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. சொப்ட்லொஜிக் வொரியர்ஸ் அணியினால் இன்றைய தினத்தில் எந்தவொரு வெற்றியையும் பெற்றுக்கொள்ளமுடியவில்லை.

பலம் மிக்க வெளிநாட்டு வீரர்களுடன் உள்நாட்டு நட்சத்திர வீரர்களும் மோதிக்கொண்ட இப்போட்டிகளில், வெறும் 19 வயதே நிரம்பிய புனித தோமியர் கல்லூரித் தலைவரான நவீன் ஹெனகங்கணமகே சிறப்பாக விளையாடி அதிகூடிய ட்ரை வைத்தவர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டார். எடிசலாட் பந்தர்ஸ் அணி சார்பாக விளையாடிய நவீன் அவ்வணி சார்பாக 5 ட்ரைகள் வைத்தமை குறிப்பிடத்தக்கது.

நவீன் ஹெனக்கன்கனம்கேயின் அபார ஆட்டத்தினால் புனித தோமியர் கல்லூரி சம்பியன் 

குழுமட்ட போட்டிகளின் பின்னர் தரவரிசை

A B
காகில்ஸ் கிளேடியேட்டர்ஸ் மொபிடெல் ஈகல்ஸ்
எடிசலாட் பந்தர்ஸ் KBSL ட்ரகன்ஸ்
வாக்கர்ஸ் வைப்பர்ஸ் எக்சஸ் கிங்ஸ்  
EZY வூல்வ்ஸ் சொப்ட்லொஜிக் வொரியர்ஸ்

பாடசாலை அணிகளுக்கிடையிலான காலிறுதி போட்டிகள்

இன்றைய தினத்தில் இறுதி அம்சமாக பாடசாலை அணிகளுக்கு இடையிலான காலிறுதிப் போட்டிகள் நடைபெற்றன. காலிறுதிப் போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகள், கிண்ண அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதுடன், தோல்வியுற்ற அணிகள் ஷீல்ட் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன.

SLSuper7s-2அவ்வகையில் முதலாவது காலிறுதிப் போட்டியே மிக அதிர்ச்சிகரமாக அமைந்தது. குழு மட்ட போட்டிகளில், A குழுவில் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்ற புனித ஜோசப் கல்லூரியானது, B குழுவில் அனைத்து போட்டிகளிலும் தோல்வியுற்ற கிங்ஸ்வூட் அணியிடம் தோல்வியுற்று கிண்ணத்திற்கான போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து விஞ்ஞான கல்லூரியானது தர்மராஜ கல்லூரியை இலகுவாக வெல்ல, புனித பேதுரு கல்லூரியானது அந்தோனியார் கல்லூரியை இலகுவாக வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இறுதி காலிறுதிப் போட்டியில் திரித்துவக் கல்லூரியானது இசிபதன கல்லூரியை இலகுவாக வென்றது.

இரண்டாம் நாளான நாளை 9ஆம் திகதி போட்டிகள் கழக காலிறுதிப் போட்டிகளுடன் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், பாடசாலை அணிகளுக்கு இடையிலான அரையிறுதியும் நடைபெறவுள்ளது. அத்தோடு பெண்களுக்கான ரக்பி போட்டிகளும் நடைபெறவுள்ளதுடன், 4 அணிகள் பெண்கள் பிரிவில் மோதவுள்ளன.

முதலாம் நாள் போட்டிகளின் முடிவுகள் பின்வருமாறு

NoMatchTeam 1Score 1Score 2Team 2
01SCH A-1 vs SCH A-4Isipathana College1417St. Peter's College
02SCH A-2 vs SCH A-3Dharmaraja College1919St. Joseph's College
03SCH B-1 vs SCH B-4St. Anthony's College127Kingswood College
04SCH B-2 vs SCH B-3Trinity College2217Science College
05FA-1 vs FA-4Walkers CML Vipers1219Cargills Gladiators
06FA-2 vs FA-3EZY Wolves1719Etisalat Panthers
07FB-1 vs FB-4Access Kings1226Mobitel Eagles
08FB-2 vs FB-3KBSL Dragons2219Softlogic Warriors
09SCH A-1 vs SCH A-3Isipathana College1014St. Joseph's College
10SCH A-2 vs SCH A-4Dharmaraja College531St. Peter's College
11SCH B-1 vs SCH B-3St. Anthony's College1933Science College
12SCH B-2 vs SCH B-4Trinity College1710Kingswood College
13FA-1 vs FA-3Walkers CML Vipers726Etisalat Panthers
14FA-2 vs FA-4EZY Wolves2605Cargills Gladiators
15FB-1 vs FB-3Access Kings1714Softlogic Warriors
16FB-2 vs FB-4KBSL Dragons2124Mobitel Eagles
17SCH A-1 vs SCH A-2Isipathana College1922Dharmaraja College
18SCH A-3 vs SCH A-4St. Joseph's College260St. Peter's College
19SCH B-1 vs SCH B-2St. Anthony's College1524Trinity College
20SCH B-3 vs SCH B-4Science College285Kingswood College
21FA-1 vs FA-2Walkers CML Vipers1714EZY Wolves
22FA-3 vs FA-4Etisalat Panthers1519Cargills Gladiators
23FB-1 vs FB-2Access Kings1526KBSL Dragons
24FB-3 vs FB-4Softlogic Warriors514Mobitel Eagles
25SCH/Cup Q/F-1St. Joseph's College1217Kingswood College
26SCH/Cup Q/F-2Dharmaraja College1931Science College
27SCH/Cup Q/F-3St. Peter's College2407St. Anthony's College
28SCH/Cup Q/F-4Isipathana College2131Trinity College

இரண்டாம் நாள் போட்டிகள் அட்டவணை

NoMatchTeam 1Score 1Score 2Team 2
29Womens-1Army SC5300CR&FC
30Womens-2Navy SC367Air Force SC
31F/Cup Q/F-1Cargills Gladiators1424Softlogic Warriors
32F/Cup Q/F-2Walkers CML Vipers240K B S L Dragons
33F/Cup Q/F-3Etisalat Panthers1419Access Kings
34F/Cup Q/F-4EZY Wolves57Mobitel Eagles
35SCH Bowl/Shield SF1St. Joseph's College1912Dharmaraja College
36SCH Bowl/Shield SF2St. Anthonys College2212Isipathana College
37SCH Cup/Plate SF1Kingswood College0733Science College
38SCH Cup/Plate SF2St. Peter's College1922Trinity College
39Womens-3Army SC240Air Force SC
40Womens-4Navy SC550CR&FC
41F/ Bowl/Shield SF1Cargills Gladiators1222K B S L Dragons
42F/ Bowl/Shield SF2Etisalat Panthers1417EZY Wolves
43F/ Cup/Plate SF1Softlogic Warriors2014Walkers CML Vipers
44F/ Cup/Plate SF2Access Kings0507Mobitel Eagles
45SCH/Shield FinalDharmaraja College1512Isipathana College
46F/Shield FinalEtisalat Panthers1700Cargills Gladiators
47SCH/Bowl FinalSt. Joseph's College1422St. Anthony's College
48F/Bowl FinalK B S L Dragons1419EZY Wolves
49SCH/Plate FinalKingswood College1919St. Peters College
50Womens-5Air Force SC3505CR&FC
51F/Plate FinalWalkers CML Vipers0731Access Kings
52SCH FinalsScience College1905Trinity College
53Womens-6Army SC2400Navy SC
54F/Cup FinalsSoftlogic Warriors0519Mobitel Eagles