ஓய்வை அறிவித்தார் டேவிட் ரிச்சட்சன்

201

சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) தலைமை நிறைவேற்று அதிகாரியாக கடந்த 2012ம் ஆண்டுமுதல் செயற்பட்டுவந்த, டேவிட் ரிச்சட்சன் (59 வயது) 2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடருடன் தனது பதவியிலிருந்து  விலகுவதாக உத்தியோகபூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

டேவிட் ரிச்சட்சனின் இந்த பதவி விலகல் அறிவிப்பு சர்வதேச கிரிக்கெட்டின் மிகப்பெரிய செய்தியாக மாறியுள்ளது.

பந்தை சேதப்படுத்தும் வீரருக்கு தண்டனை அதிகரிப்பு: ஐ.சி.சி. ஒப்புதல்

கிரிக்கெட் போட்டியின் போது பந்தைச் சேதப்படுத்தும் குற்றத்தில் சிக்கும் வீரர்களுக்கு விதிக்கப்படும்…

இவரது பதவிக்காலத்தில் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் கிரிக்கெட் ரசிகர்களாலும், கிரிக்கெட் விமர்சகர்களாளும் அதிகமாக பேசப்படக்கூடிய விடயங்களாக மாறியிருந்தன.

இவரின் பதவிக்காலத்தில் அதிகமாக பேசப்பட்ட விடயம், சர்வதேச கிரிக்கெட்டின் வருமானப்பகிர்வு.  “பிக் திரீ” (Big Three) என கிரிக்கெட்டின் வருமானப் பகிர்வில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய கிரிக்கெட் சபைகளின் வருமானத்தில் பிரிவினை ஏற்படுத்தி, “பிக் திரீ” எனும் நிலைப்பாட்டை தகர்த்தெறிந்தார்.

“பிக் திரீ” தகர்த்தெறிவை கொண்டுவர பல சவால்களுக்கு முகங்கொடுத்த ரிச்சட்சன், தனது முயற்சியில் வெற்றிபெற்று இன்று சர்வதேச கிரிக்கெட்டின் பேசுபொருளாக மாறியுள்ளார்.>

ரிச்சட்சன் இறுதியாக வெளிக்கொண்டுவந்த புதிய வருமானப் பகிர்வில் இந்திய அணி  அதிக பங்கினை பெற்றதுடன், அடுத்த பங்கினை இங்கிலாந்தும், அதற்கடுத்த பங்கினை அவுஸ்திரேலிய அணியும் பெற்றன. ஏனைய அணிகளுக்கு அவர்களின் வருமானத்துக்கேற்ற பங்கினை பிரித்து வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டார். அத்துடன் உலகக் கிண்ணத்தில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கையை பத்தாக குறைத்தார். ஒருநாள் லீக் தொடர் மற்றும் டெஸ்ட் சம்பியன்ஷிப் என்பவற்றுக்கான உறுதிப்படுத்தல்களையும்  வெற்றிகரமாக டேவிட் ரிச்சட்சன் நிறைவுசெய்தார்.

தொடர்ந்தும் இலங்கை அணியின் தலைவராக லக்மால்

காலியில் வரும் (ஜூலை) 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டு…

அதுமாத்திரமின்றி, சர்வதேச கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் போட்டித் தொடர்களுக்கான  எட்டு வருட ஒளிபரப்பு உரிமத்தை கடந்த 2014ம் ஆண்டு  இந்தியாவின் ஸ்டார் இந்தியா நிறுவனத்துக்கு மிகப்பெரிய தொகைக்கு வழங்கி, சர்வதேச கிரிக்கெட் சபையின் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து வளர்ந்து வரும் நாடுகளான அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபைகளை சர்வதேச கிரிக்கெட் சபையின் முழு அங்கீகாரமுள்ள கிரிக்கெட் அணிகளாக அறிவித்தார்.

இவ்வாறு சர்வதேச கிரிக்கெட்டை விரிவுப்படுத்துவதற்கான பல்வேறு வழிகளையும் கண்டறிந்த இவர், தன்னால் முடிந்த அத்தனை விடயங்களையும் சர்வதேச கிரிக்கெட் சபைக்கு வழங்கி, ஓய்வையும் அறிவித்துள்ளார்.

தன்னுடைய ஓய்வுகுறித்து கருத்து வெளியிட்ட டேவிட் ரிச்சட்சன் ,

கிரிக்கெட் வீரர் ஒருவர் தனது ஓய்வு காலத்தை நெருங்குவதானது மிகப்பெரிய மனக்கவலையை ஏற்படுத்தும் ஒரு விடயமாகும். எனக்கும் ஓய்வுபெறவேண்டிய காலம் நெருங்கிவிட்டது. 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்தின் நிறைவானது, நான் ஓய்வுபெறுவதற்கு சரியான தருணம்.

சர்வதேச கிரிக்கெட் சபையுடன் இணைந்து பணிபுரிந்தமையை நான் பெரு மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறேன். சர்வதேச கிரிக்கெட்டுக்கு என்னால் செய்ய முடிந்ததை செவ்வனே செய்திருக்கின்றேன்டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் டி10 என கிரிக்கெட்டின் அத்தனை வடிவங்களுக்குமான வளர்ச்சிப்பாதை ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் அங்கம் வகிக்கும் அனைத்து கிரிக்கெட் சபைகளுக்கும் வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

குளோபல் டி-20 தொடரிலிருந்து திசர, தசுன் மற்றும் இசுரு உதான விலகல்

ஐ.சி.சி இன் இணை அங்கத்துவ நாடான கனடா கிரிக்கெட் சபையினால் வெளிநாட்டு வீரர்களின் பங்குபற்றுதலு…

இன்னும் 12 மாதங்கள் மீதமிருக்கின்றன. குறித்த காலப்பகுதியில் என்னால் செய்யமுடியுமான மாற்றங்களை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன். சர்வதேசத்தில் கிரிக்கெட்டை விஷ்தரிப்பதற்கான எண்ணப்பாடு எனக்குள் உள்ளது. அதற்கான புதிய வாய்ப்புகளை தேடிச் செல்ல தயாராக இருக்கிறேன்.

அத்துடன் எனக்கு இதுவரையான காலப்பகுதியில் உதவியாக இருந்த, சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைவர், தற்போதைய இயக்குனர்கள் குழு, உறுப்பினர்கள், எனக்கு ஆதரவாக இருந்த முன்னாள் அதிகாரிகள் மற்றும் கிரிக்கெட்டுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என தனது கருத்தை பதிவுசெய்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக தற்போது செயற்பட்டுவரும் ரிச்சட்சன், ஐசிசியின் முதல் பொதுமுகாமையாளராகவும் செயற்பட்டுள்ளார்.  2002ம் ஆண்டு ஐசிசி பொதுமுகாமையாளர் பதவியை புதிதாக அறிமுகப்படுத்தியது. இந்த பதவியினை முதன்முதலாக டேவிட் ரிச்சட்சனே பெற்றுக்கொண்டார்.

முன்னாள் தென்னாபிரிக்க அணியின் கிரிக்கெட் வீரரான இவர், 1992 தொடக்கம் 1998ஆம் ஆண்டுவரை 42 டெஸ்ட் மற்றும் 122 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க