ஜிம்பாப்வே தொடருக்கான இலங்கை ஒருநாள் குழாம் அறிவிப்பு

916

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 17 பேர்கொண்ட உத்தியோகபூர்வ குழாத்தை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. 

இலங்கை கிரிக்கெட் சபை 21 பேர்கொண்ட முதற்கட்ட குழாத்தை கடந்த வாரத்தில் அறிவித்திருந்த நிலையில், தற்போது 17 பேர்கொண்ட இறுதி ஒருநாள் குழாத்தை வெளியிட்டுள்ளது. 

பொலன்னறுவை மாவட்ட மாணவர்களுக்கு இலங்கை கிரிக்கெட் வீரர்களின் உதவி

அதன்படி இறுதி ஒருநாள் குழாத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த குழாத்தில் காணப்பட்ட சாமிக்க கருணாரத்ன, கமிந்து மெண்டிஸ், அசித பெர்னாண்டோ மற்றும் சாமிக்க குணசேகர ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். 

அதேநேரம் உலகக்கிண்ணத் தொடருக்கான இலங்கை அணியில் விளையாடிய திமுத் கருணாரத்ன, அஞ்செலோ மெதிவ்ஸ், குசல் பெரேரா, துஷான் ஹேமந்த மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோரும் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒருநாள் குழாத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

முன்னணி வீரர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில் ஜனித் லியனகே, சஹான் ஆராச்சிகே, நுவனிது பெர்னாண்டோ, அவிஷ்க பெர்னாண்டோ, அகில தனன்ஜய, ஜெப்ரி வெண்டர்சே மற்றும் பிரமோத் மதுசான் ஆகியோர் குழாத்தில் இடம்பெற்றுள்ளனர். 

சுற்றுலா ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் எதிர்வரும் 6ம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கை ஒருநாள் குழாம் 

குசல் மெண்டிஸ் (தலைவர்), சரித் அசலங்க (உப தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, சதீர சமரவிக்ரம, அவிஷ்க பெர்னாண்டோ, நுவனிது பெர்னாண்டோ, சஹான் ஆராச்சிகே, தசுன் ஷானக, வனிந்து ஹஸரங்க, மஹீஷ் தீக்ஷன, ஜனித் லியனகே, துனித் வெல்லாலகே, துஷ்மந்த சமீர, பிரமோத் மதுசான், டில்ஷான் மதுஷங்க, அகில தனன்ஜய, ஜெப்ரி வெண்டர்சே 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<