ஜப்பானிடம் வீழ்ந்த இலங்கை கரப்பந்து அணி

189

ஆசிய கரப்பந்தாட்ட சம்மேளனத்தினால் மூன்றாவது முறையாகவும் நடத்தப்படும் 23 வயதுக்கு உட்பட்ட ஆசிய கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி இன்று (09) பங்கேற்ற போட்டியில் ஜப்பானிடம் 3–0  என தோல்வியை சந்தித்தது  

சீன தாய்ப்பேயிடம் போராடி வீழ்ந்த இலங்கை இளையோர்

இலங்கையின் இளம் கரப்பந்தாட்ட வீரர்கள்…

இந்த சுற்றுத் தொடரின் ஆரம்ப குழு நிலை போட்டிகளில் அவுஸ்திரேலியாவிடம் மாத்திரம் தோல்வியை சந்தித்த இலங்கை ஹொங்கொங் மற்றும் மியன்மார் அணிகளை தோற்கடித்து சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேற்றம் கண்டது

எனினும் சுப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்ற இலங்கை நேற்று நடந்த சீன தாய்ப்பே அணியுடனான போட்டியிலும் 3–0 என தோல்வியை சந்தித்தது.   

இந்நிலையில் இதுவரை நடந்த போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று வலுவான நிலையிலேயே ஜப்பான் அணி இன்று இலங்கையை எதிர்கொண்டது

போட்டியின் முதல் 10 நிமிடங்களுக்குள் இரு அணிகளினதும் வீரர்கள் தமக்கே உரிய பாணியில் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன்போது ஜப்பான் அணிக்கு எதிராக நேருக்கு நேர் மோதிய இலங்கை இளம் வீரர்கள் ஆரம்பத்தில் அந்த அணியை விடவும் புள்ளிகளில் முன்னிலை பெறுவதற்கு கடுமையாக போராடியது

எவ்வாறாயினும் கடைசி ஒருசில புள்ளிகளின்போது இலங்கை வீரர்கள் பந்தை வழங்குவதில் இழைத்த தவறு ஜப்பான் அணிக்கு சாதகமானது. இதன்மூலம் ஜப்பான் முதல் செட்டை 25–21 என்ற புள்ளிகளால் கைப்பற்றியது.   

முதல் செட்டில் ஜப்பான் வீரர்கள் பந்தை அடிக்கும்போது வேகம் பற்றி அதிகம் அவதானம் செலுத்தாமல் இலங்கை பக்கமாக வீரர்கள் இல்லாத திசைகளில் பந்தை செலுத்தி புள்ளிகளை குவித்தமை குறிப்பிடத்தக்கது.  

எவ்வாறாயினும் இரண்டாவது செட்டின் ஆரம்பம் தொடக்கம் போட்டியின் வாய்ப்புகளை அதிகம் தன் பக்கம் ஈர்த்துக்கொண்ட ஜப்பான் வீரர்கள் இலங்கைக்கு அதிக நெருக்கடி கொடுத்தனர்

ஜப்பான் போன்ற நுட்பமான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆடும் அணி ஒன்றின் முன் தமது விளையாட்டு திறனை சிறப்பாக வெளிப்படுத்துவதற்கு பல சந்தர்ப்பங்களில் முடிந்தபோதும் பந்தை தடுப்பதில் இலங்கை தற்காப்பு வீரர்கள் செய்த தவறுகள் இலங்கைக்கு பாதகமாக அமைந்தன. இதனால் இரண்டாவது செட்டையும் ஜப்பான் 25–16 என கைப்பற்றியது.  

சுப்பர் 8 இல் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த இலங்கை இளையோர் கரப்பந்து அணி

மியன்மாரில் நடைபெற்று வரும் 23 வயதுக்கு…

கடந்த பல போட்டிகளிலும் மிகச் சிறப்பாக பந்துகளை தாக்கி ஆடிய கவிந்து பபசர இந்த போட்டிகயிலும் தமது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்றதை பார்க்க முடிந்தது. எனினும் ஜப்பான அணியின் வேகமாக ஆட்ட முறையை கையாள்வதில் இலங்கை வீரர்கள் தவறிழைத்தனர்.  

இதன்படி தீர்க்கமாக மூன்றாவது செட்டிலும் 25–14 என ஜப்பான் அணி இலகுவான வெற்றியீட்டியது. இதன்மூலம் ஜப்பான் அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதோடு இலங்கை அணி நாளை நடைபெறும் 5–8 ஆவது இடத்திற்கான அணிகளைத் தெரிவு செய்யும் போட்டிக்கு தெரிவானது

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<