நியூசிலாந்து தொடருக்கான இலங்கை T20i ஒரு நாள் குழாம்கள் அறிவிப்பு

78

இலங்கை – நியூசிலாந்து அணிகள் இடையில் நடைபெறும் ஒருநாள், T20i போட்டிகளில் பங்கெடுக்கும் இலங்கை குழாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

முறையற்ற பாணியில் பந்துவீசியதாக சகீப் அல் ஹசன் மீது குற்றச்சாட்டு

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி இங்கே இரு போட்டிகள் கொண்ட T20i மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் என்பவற்றில் ஆடுகின்றது 

இதில் முதலாவதாக T20i தொடர் சனிக்கிழமை (09) தம்புள்ளையில் ஆரம்பமாகும் நிலையில் குறிப்பிட்ட தொடர்களில் பங்கெடுக்கும் இலங்கையின் குழாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

அறிவிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் T20i மற்றும் ஒருநாள் குழாம்கள் இறுதியாக இலங்கை விளையாடிய மேற்கிந்திய தீவுகள் தொடரில் பங்கெடுத்த அதே வீரர்களுடன் பாரிய மாற்றங்களின்றி அறிவிக்கப்பட்டுள்ளது 

அதேநேரம் இலங்கை T20i அணியில் அனுபவ வீரரான தினேஷ் சந்திமால் இணைக்கப்பட பானுக்க ராஜபக்ஷவிற்கு தொடர்ந்தும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இலங்கை ஒருநாள் அணி 

சரித் அசலன்க (தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, பெதும் நிஸ்ஸங்க, குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, சதீர சமரவிக்ரம, நிஷான் மதுஷ்க, துனித் வெல்லாலகே, வனிந்து ஹஸரங்க, மகீஷ் தீக்ஸன, ஜெப்ரி வன்டர்செய், சமிந்து விக்ரமசிங்க, அசித பெர்னாண்டோ, டில்சான் மதுசங்க, மொஹமட் சிராஸ் 

 

இலங்கை T20I குழாம் 

சரித் அசலன்க (தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, பெதும் நிஸ்ஸங்க, குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், தினேஷ் சந்திமால், பானுக்க ராஜபக்ஷ, துனித் வெல்லாலகே, வனிந்து ஹஸரங்க, மகீஷ் தீக்ஸன, ஜெப்ரி வன்டர்செய், சமிந்து விக்ரமசிங்க, அசித பெர்னாண்டோ, நுவான் துஷார, மதீஷ பதிரண, பினுர பெர்னாண்டோ 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<