இந்திய தொடருக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் இலங்கை மகளிர் குழாம்

210

சுற்றுலா இந்தியா, இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் T20I தொடர்களில் பங்கெடுக்கவுள்ள இலங்கையின் 19 பேர் அடங்கிய மகளிர் கிரிக்கெட் அணிக்குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

>>இலங்கை – அவுஸ்திரேலியா மூன்றாவது ஒருநாள் போட்டி; சாதனைகள்

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கே 3 போட்டிகள் கொண்ட T20I தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் ஆடவிருக்கின்றது.

இந்த சுற்றுப்பயணம் இம்மாதம் 23ஆம் திகதி நடைபெறும் T20I  தொடருடன் ஆரம்பமாகவிருப்பதோடு, அதன் பின்னர் ஒருநாள் தொடர் நடைபெறுகின்றது.  இந்த நிலையில் இந்த தொடர்களில் பங்கெடுக்கும் இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாமானது அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் பாகிஸ்தான் சுற்றுத் தொடரில் ஆடியிருந்த வீராங்கனைகளுடன், தற்போது இந்திய அணிக்கு எதிரான தொடர்களுக்காக ஆறு வீராங்கனைகள் மேலதிகமாக இணைக்கப்பட்டிருக்கின்றனர்.  றனர்.

மேலதிகமாக இணைக்கப்பட்ட ஆறு வீராங்கனைகளில், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையினை பாகிஸ்தான் தொடர் காரணமாக தவறவிட்டிருந்த விஷ்மி குணரத்னவும் அடங்குகின்றார். இவர் தவிர இலங்கை மகளிர் அணியில் இணைந்திருக்கும் ஏனைய வீராங்கனைகளாக மல்ஷா செஹானி, ரஷ்மி டி சில்வா, கௌசானி நுத்யங்கனா, சத்யா தீபானி மற்றும் தாரிகா செவ்வந்தி ஆகிய வீராங்கனைகள் காணப்படுகின்றனர். இதில் ரஷ்மி டி சில்வா மற்றும் கௌசானி நுத்யான்கனா ஆகியோர் அறிமுக வீராங்கனைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் இலங்கை – இந்திய மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான ஒருநாள் தொடர், அடுத்த மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கான அணிகளை தெரிவு செய்கின்ற, ஐ.சி.சி. இன் மகளிர் சம்பியன்ஷிப்பிற்குள் அடங்குகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

>>நாளைய போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் விளையாடுவதில் சந்தேகம்!

இலங்கை குழாம் – சமரி அத்தபத்து (தலைவி), ஹாசினி பெரேரா, கவிஷா டில்ஹாரி, நிலக்ஷி டி சில்வா, அனுஷா சஞ்சீவனி, ஒசதி ரணசிங்க, சுகந்திகா குமாரி, இனோக்கா ரணவீர, ஆச்சினி குலசூரிய, ஹர்சித சமரவிக்ரம, விஷ்மி குணரட்ன, மல்ஷா செஹானி, அமா காஞ்சனா, உதேசிகா ப்ராபோதினி, ரஷ்மி டி சில்வா, ஹன்சிமா கருணாரட்ன, கௌசானி நுத்யான்கனா, சத்யா சந்தீப்பனி, தாரிகா செவ்வன்தி

சுற்றுத்தொடர் அட்டவணை

ஒருநாள் தொடர்

முதல் T20I போட்டி – ஜூன் 23 – தம்புள்ள

இரண்டாவது T20I போட்டி – ஜூன் 25 – தம்புள்ள

மூன்றாவது T20I போட்டி – ஜூன் 27 – தம்புள்ள

T20I தொடர்

முதல் ஒருநாள் போட்டி – ஜூலை 1 – பல்லேகலை

இரண்டாவது ஒருநாள் போட்டி – ஜூலை 4 – பல்லேகலை

மூன்றாவது ஒருநாள் போட்டி – ஜூலை 7 – பல்லேகலை

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<