மேஜர் T-20 லீக்கில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்த ஜீவன் மெண்டிஸ்

132
 

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவரும் முதல்தர கழகங்களுக்கிடையிலான மேஜர் T-20 லீக் கிரிக்கெட் தொடரின் மேலும் ஆறு போட்டிகள் இன்று (21) மாலை நடைபெற்றிருந்தன.

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் பதுரெலிய கிரிக்கெட் கழகம்

அனுபவ வீரர் ஜீவன் மெண்டிஸின் அரைச்சதத்தின் உதவியுடன் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் 22 ஓட்டங்களால் பதுரெலிய கிரிக்கெட் கழகத்தை வீழ்த்தியது.

தோல்வியில் முடிந்த சானக மற்றும் சீகுகேவின் அதிரடி

இம்முறை போட்டிகளில் தமிழ் யூனியன் கழகம் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொண்ட 5ஆவது வெற்றி இதுவாகும்.

பதுரெலிய கிரிக்கெட் கழகம் சார்பில் அபார துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்த 21 வயதுடைய இளம் வீரர் லஹிரு சமரகோன் ஒரு ஓட்டத்தினால் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 175/10 (20)ஜீவன் மெண்டிஸ் 53, ரமித் ரம்புக்வெல்ல 30, நுவன் துஷார 3/33, நதீர நாவல 3/38, அலங்கார அசங்க சில்வா 2/30

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 153/10 (17.5)லஹிரு சமரகோன் 99, சச்சித்ர சேரசிங்க 3/38, தமித சில்வா 2/04

முடிவு – தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் 22 ஓட்டங்களால் வெற்றி

Photos: Tamil Union C & AC vs Badureliya CC | Major T20 Tournament 2018/19


கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

கொழும்பு கழகத்தின் அபார பந்து வீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல், 93 ஓட்டங்களுக்கு சுருண்ட கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம், 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 136/8 (20) – மனெல்கர் டி சில்வா 46, லசித் அபேரத்ன 27, கவிஷ்க அன்ஜுல 3/32

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 93/10 (16.2)நிசல தாரக்க 45, எச். ஹெட்டியாரச்சி 2/06, லஹிரு மதுஷங்க 2/11, வனிந்து ஹசரங்க 2/12, மலிந்த புஷ்பகுமார 3/21

முடிவு கொழும்பு கிரிக்கெட் கழகம் 43 ஓட்டங்களால் வெற்றி

விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம்

சம்பத் பெரேரா அதிரடியாக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்த கடற்படை கழகத்துக்கு எதிரான போட்டியில் விமானப்படை விளையாட்டுக் கழகம் 15 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

போட்டியின் சுருக்கம்

விமானப்படை விளையாட்டுக் கழகம் – 135/6 (20)ரவிந்து செம்புகுட்டிகே 38, துலாஷ் உதயங்க 34, சுமிந்த லக்ஷான் 21*, டிலான் சந்திம 2/27

கடற்படை விளையாட்டுக் கழகம் – 120/10 (18.4)தரூஷான் இந்தமல்கொட 34, சாலித்த பெர்னாண்டோ 33*, சம்பத் பெரேரா 4/17, உமேக சதுரங்க 3/22, ரவிந்து செம்புகுட்டிகே 2/27 ள

முடிவு விமானப்படை விளையாட்டுக் கழகம் 15 ஓட்டங்களால் வெற்றி


புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்

சாலிய சமனின் சகலதுறை ஆட்டத்தினால் செரசன்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

Photos: Saracens SC vs Bloomfield C & AC | Major T20 Tournament 2018/19

புளும்பீல்ட் கழகம் நிர்ணயித்த 155 ஓட்டங்களை நோக்கி துடுப்பாடிய செரசன்ஸ் கழகம், 156 ஓட்டங்களைப் பெற்று இம்முறை போட்டிகளில் 3ஆவது வெற்றியைப் பதிவுசெய்தது.  

போட்டியின் சுருக்கம்

புளூம்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 155/8 (20)மதுஷாபுன் ரவிச்சந்திர குமார் 58, சாலிய சமன் 3/31

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் – 156/5 (20)சாலிய சமன் 47*, ரனித்த லியனாரச்சி 30, நிபுன் கருணாநாயக்க 25, லியோ பிரான்சிஸ்கோ 22

முடிவு – செரசன்ஸ் கிரிக்கெட் கழகம் 5 விக்கெட்டுகளால் வெற்றி


லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் BRC கழகம்

BRC கழகத்துக்கு எதிரான போட்டியில், மதுரங்க சொய்சா பெற்றுக்கொண்ட அரைச்சதத்தின் உதவியுடன் 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லங்கன் கிரிக்கெட் கழகம் வெற்றிபெற்றது.

Photos: BRC vs Lankan CC | Major T20 Tournament 2018/19

போட்டியின் சுருக்கம்

லங்கன் கிரிக்கெட் கழகம் – 164/8 (20) – மதுரங்க சொய்சா 72, கீத் குமார 35, சிப்ரான் முத்தலிப் 30, விகும் சன்ஜய 2/26, ஹஷேன் ராமநாயக்க 2/36  

BRC கழகம் – 120/9 (20) – பாணுக ராஜபக்ஷ 24, ஹஷேன் ராமநாயக்க 23, கீத் குமார 3/12, துலன்ஞன மெண்டிஸ் 2/27

முடிவு – லங்கன் கிரிக்கெட் கழகம் 44 ஓட்டங்களால் வெற்றி

Photos: Sri Lanka vs South Africa 2nd Test 2019 | Day 1

களுத்துறை நகர கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

BRC மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் பிரகாசித்த நீர்கொழும்பு கழகம், 5 விக்கெட்டுகளால் களுத்துறை நகர கழத்தை வீழ்த்தியது. இம்முறை போட்டிகளில் களுத்துறை கழகம் தொடர்ச்சியாகப் பெற்றுக்கொண்ட 5ஆவது தோல்வி இதுவாகும்.

Photos: Negombo CC vs Kalutara TC | Major T20 Tournament 2018/19

போட்டியின் சுருக்கம்

களுத்துறை நகர கழகம் – 122/8 (20)எம். நிமேஷ் 25, க்ரிஷேன் அபேன்சு 17, நிலங்க சந்தகென் 2/10, ரொஷேன் பெர்னாண்டோ 2/20

நீர்கொழும்பு கழகம் – 123/5 (20)சஹன் ஆரச்சிகே 30*, லசித் குரூஸ்புள்ளே 22, பிரசன்ன ஜயமான்னே 21, சந்துன் டயஸ் 21, லக்ஷhன் ஜயசிங்க 2/15

முடிவு நீர்கொழும்பு கழகம் 5 விக்கெட்டுகளால் வெற்றி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க