துலாஜின் அபாய பந்து வீச்சுக்கு மத்தியில் வலுப்பெற்ற புனித ஜோசப் கல்லூரி

109

பாடசாலை அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட சிங்கர் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (30) நடைபெற்று முடிந்த பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி மற்றும் ஜனாதிபதி கல்லூரி அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலை அடைந்துள்ளது. அதோடு இன்றைய நாளில் மேலும் 3 போட்டிகள் ஆரம்பமாகியிருந்தன.

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி எதிர் ஜனாதிபதி கல்லூரி

இவ்விரு கல்லூரி அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று (29) பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியின் சொந்த மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது.

பாகிஸ்தானால் T-20 தொடரிலும் வைட் வொஷ் செய்யப்பட்ட இலங்கை

இன்று (29) நடைபெற்று முடிந்திருக்கும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது T-20 போட்டியில் 36 …….

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில்  துடுப்பாட்டத்தினை தேர்வு செய்த பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி பிரின்ஸ் பெர்னாந்துவின் அரைச்சதத்துடன் (58) முதல் இன்னிங்சுக்காக 178 ஓட்டங்களினைப் பெற்றுக் கொண்டது. ஜனாதிபதி கல்லூரி சார்பாக ஹசிந்து பிரமுக்க மற்றும் தசிக்க நிர்மல் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தனர்.

பதிலுக்கு தமது முதலாம் இன்னிங்சினை ஆரம்பித்திருந்த ஜனாதிபதி கல்லூரி அணி பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியின் குஞ்சன பெரேராவின் அதிரடிப் பந்துவீச்சினால் 108 ஓட்டங்களுடன் சுருண்டிருந்தது. இந்த இன்னிங்சில் ஜனாதிபதி கல்லூரி சார்பாக போராட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த சஷிக்க லக்மால் 77 ஓட்டங்களினை குவித்திருந்தார். அதோடு குஞ்சன பெரேரா 47 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து 70 ஓட்டங்கள் முன்னிலையில் தமது இரண்டாம் இன்னிங்சினை ஆரம்பித்த பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி 58 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டநேரம் முடிவடைய போட்டி சமநிலை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 178 (55.3) பிரின்ஸ் பெர்னாந்து 58, சனோஜ் தர்ஷிக்க 29, ஹசிந்து பிரம்முக்க 4/67, தசிக்க நிர்மல் 4/39

ஜனாதிபதி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 108 (31.5) சஷிக்க நிர்மல் 77, குஞ்சன பெரேரா 5/47

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 58/3 (16.3)

போட்டி முடிவுபோட்டி சமநிலை அடைந்தது (பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றி)


புனித  சில்வஸ்டர் கல்லூரி எதிர் லும்பினி கல்லூரி

BRC மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியடைந்த கண்டி புனித சில்வஸ்டர் கல்லூரி முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தது.

ஒரே போட்டியில் இரு உலக சாதனைகளைப் படைத்த கோஹ்லி

கிரிக்கெட் உலகில் அண்மைக்காலமாக சாதனைகளுக்கு மேல் சாதனைகளை படைத்து வருகின்ற இந்திய கிரிக்கெட் அணியின் ……

இதன்படி தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த புனித சில்வஸ்டர் கல்லூரிக்கு விடயங்கள் எதிர்பார்த்த விதமாக அமைந்திருக்கவில்லை. லும்பினி கல்லூரியின் சஷிக்க சந்திரவினால் நிர்மூலம் செய்யப்பட்ட சில்வஸ்டர் கல்லூரி வீரர்கள் 91 ஓட்டங்களுடன் தமது அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்திருந்தனர். சஷிக்க சந்திர மொத்தமாக 25 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த கொழும்பு லும்பினி கல்லூரியும் மோசமாக செயற்பட்டு 102 ஓட்டங்களினை மாத்திரமே தமது இன்னிங்சில் பெற்றிருந்தது. லும்பினி கல்லூரியினை பந்துவீச்சில் மிரட்டிய பஷான் ஹெட்டியராச்சி வெறும் 14 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் முதலாம் நாளிலேயே தமது இரண்டாம் இன்னிங்சினையும் ஆரம்பித்த புனித சில்வஸ்டர் கல்லூரி 67 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த நிலையில் இன்றைய நாளுக்கான ஆட்ட நேரம் நிறைவடைந்திருந்தது.

போட்டியின் சுருக்கம்

புனித சில்வஸ்டர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 91 (36.1) பஷான் ஹெட்டியராச்சி 21, சஷிக்க சந்திர 6/25, விமுக்தி குலத்துங்க 3/23

லும்பினி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 102 (29.3) லகிந்து உபேந்திரா 33, பஷான் ஹெட்டியராச்சி 6/14

புனித சில்வஸ்டர் கல்லூரி(இரண்டாம் இன்னிங்ஸ்) – 63/7 (26) கவீன் பீரிஸ் 3/05

போட்டியின் இரண்டாம் நாள் நாளை தொடரும்


புனித ஜோசப் கல்லூரி எதிர் மலியதேவ கல்லூரி

மருதானை புனித ஜோசப் கல்லூரி மைதானத்தில் தொடங்கியிருந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற குருணாகல் மலியதேவ கல்லூரி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை எதிரணிக்கு வழங்கியிருந்தது.

இதன்படி தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த புனித ஜோசப் கல்லூரி அணியினர் 64.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 286 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டனர். ஜோசப் கல்லூரி சார்பாக யோஹன் டி சில்வா அதிகபட்சமாக 65 ஓட்டங்களினை குவித்திருந்தார். மலியதேவ கல்லூரியின் பந்துவீச்சில் துலாஜ் ரணதுங்க  7 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

மேற்கிந்திய தீவுகளில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய இலங்கை A அணி

மேற்கிந்திய தீவுகள் A அணியுடனான மூன்றாவது மற்றும் கடைசி உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் ……..

தொடர்ந்து மலியதேவ கல்லூரி அணியினர் தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்து 46 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினைப் பறிகொடுத்திருந்த போது போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவடந்தது.

போட்டியின் சுருக்கம்

புனித ஜோசப் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 286 (64.5) யோஹான் டி சில்வா 65, தினேத் ஜயக்கொடி 37, துலாஜ் ரணதுங்க 7/96

மலியதேவ கல்லூரி (முதல் இன்னிங்ஸ் ) – 46/1 (15)

போட்டியின் இரண்டாம் நாள் நாளை தொடரும்


திரித்துவ கல்லூரி எதிர் புனித செபஸ்டியன் கல்லூரி

மொரட்டுவ புனித செபஸ்டியன் கல்லூரி மைதானத்தில் தொடங்கியிருந்த இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதல் துடுப்பாட்டத்தினை மைதான சொந்தக்காரர்களே தேர்வு செய்தனர்.

இதன்படி தமது முதல் இன்னிங்சினை ஆரம்பித்த புனித செபஸ்டியன் கல்லூரி அணியினர் தருஷ பெர்னாந்து ஆட்டமிழக்காது பெற்ற அரைச்சதத்துடன் (70*) போட்டியின் முதல் நாள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களுடன் காணப்படுகின்றனர்.

இன்றைய நாளில் திரித்துவ கல்லூரியின் பந்து வீச்சில் விமுக்தி நெத்மல் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி சிறப்பாக செயற்பட்டிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

புனித செபஸ்டியன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ் ) – 216/8 (64.5) தருஷ பெர்னாந்து 70*, விமுக்தி நெத்மல்  5/95

போட்டியின் இரண்டாம் நாள் நாளை தொடரும்

 

Lasith Malinga, the off-spinner?

Due to bad light, world famous, Slinga Lasith Malinga bowled off-spinners and took three wickets during the 25th Singer-MCA Premier ……