சுற்றுலா இலங்கை வளர்ந்து வரும் பதினொருவர் அணி மற்றும் ஹெம்ஷையர் கிரிக்கெட் கழகத்துக்கும் இடையில் நடைபெற்று வருகின்ற நான்கு நாட்கள் கொண்ட போட்டியின் மூன்றாவாது நாள் ஆட்டம் நேற்று (15) தொடர் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.
சவுத்தாம்ப்டனில் கடந்த 13ஆம் திகதி ஆரம்பமாகிய இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 281 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
>>ஹெம்ஷையர் அணியை பந்துவீச்சில் மிரட்டிய லக்ஷான், உதித்
இதனையடுத்து தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த ஹெம்ஷையர் அணி, போட்டியின் இரண்டாவது நாள் நிறைவடையும் போது தமது முதல் இன்னிங்சுக்காக 5 விக்கெட்டுகளை இழந்து 252 ஓட்டங்களை எடுத்தது.
போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று (16) பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகும்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<











