உடற்தகுதி பரிசோதனைக்கு முகங்கொடுக்கவுள்ள இலங்கை வீரர்கள்!

Sri Lanka tour of West Indies 2021

194

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடருக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள 35 பேர்கொண்ட இலங்கை வீரர்கள் குழாம், எதிர்வரும் 5ம் திகதி உடற்தகுதி பரிசோதனைக்கு முகங்கொடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த கால இடைவெளிகளில் இலங்கை வீரர்களின் உடற்தகுதி அதிகமாக விமர்சிக்கப்பட்டுவரும் நிலையில், அதனை சரிசெய்யும் நோக்கில், வீரர்களின் உடற்தகுதி தீவிரமாக கண்கானிப்பப்பட்டு வருகின்றது. அதன் முதற்கட்டமாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் விளையாடுவதற்கு வீரர்களின் உடற்தகுதி அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSC கழகத்தின் பிரதான அனுசரணையாளராகும் அக்பர் பிரதர்ஸ்

புதிதாக இலங்கை அணியின் உடற்தகுதி பயிற்றுவிப்பு முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ள க்ராண்ட் லூடென், இலங்கை வீரர்களுக்கு கடினமான உடற்தகுதி பரிசோதனையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளார். குறிப்பாக 2 கிலோ மீற்றர் தூரத்தை வீரர்கள் 8 நிமிடம் 35 செக்கன்களுக்குள் கடக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இந்த உடற்தகுதி பரிசோதனையானது சுகததாஸ அரங்கில் நடைபெறவுள்ளது. 

சுகததாஸ அரங்கின் ஒரு சுற்றுக்கு 400 மீற்றர்கள் அடங்கும் நிலையில், வீரர்கள் மொத்தமாக 5 சுற்றுக்களை 8 நிமிடங்கள் மற்றும் 35 செக்கன்களில் நிறைவுசெய்தால் மாத்திரமே, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெறமுடியும்.

க்ராண்ட் லூடென் இதற்கு முன்னர் பாகிஸ்தான் அணியின் உடற்தகுதி முகாமையாளராக செயற்பட்டதுடன், கடினமான விதிமுறைகளையும் கடைப்படித்திருந்தார். இதன்காரணமாக பாகிஸ்தான் அணி களத்தடுப்பில் அதிகமான முன்னேற்றங்கள் கண்டதுடன், 2017ம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ணத்தையும் வெற்றிக்கொண்டது.

அதேநேரம், இலங்கை கிரிக்கெட் சபை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடருக்கு முன்னர், புதிய உடற்தகுதி கொள்கையை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வீரர்கள் முதல் உடற்தகுதி பரிசோதனையில் தோல்வியடையும் பட்சத்தில், இரண்டாவது பரிசோதனையை மேற்கொள்ள 40 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. எனினும், இரண்டாவது உடற்தகுதி பரிசோதனையில் வீரர் ஒருவர் தோல்வியடையும் பட்சத்தில், அவர் அண்மையில் வரும் எந்தவொரு தொடரிலும் இணைக்கப்படமாட்டர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் தொடருக்காக பயிற்சிபெற்றுவரும் இலங்கை குழாம்

திமுத் கருணாரத்ன (தலைவர்), குசல் பெரேரா, ஓசத பெர்னாண்டோ, லஹிரு திரிமான்னே, தினேஷ் சந்திமால், அஞ்செலோ மெதிவ்ஸ், தனன்ஜய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, மினோத் பானுக, பெதும் நிசங்க, ரொஷேன் சில்வா, அவிஷ்க பெர்னாண்டோ, தனுஷ்க குணதிலக்க, கமிந்து மெண்டிஸ், அஷேன் பண்டார, பானுக ராஜபக்ஷ, சந்துஸ் குணதிலக்க, குசல் மெண்டிஸ், தசுன் ஷானக, திசர பெரேரா, லசித் எம்புல்தெனிய, வனிந்து ஹசரங்க, ரமேஷ் மெண்டிஸ், டில்ருவான் பெரேரா, துவிந்து திலகரட்ன, லக்ஷான் சந்தகன், அகில தனன்ஜய, சுரங்க லக்மால், லஹிரு குமார, விஷ்வ பெர்னாண்டோ, அசித பெர்னாண்டோ, துஷ்மந்த சமீர, நுவான் பிரதீப், இசுரு உதான, டில்ஷான் மதுசங்க

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<