LPL நான்காம் பருவத்திற்கான திகதிகள் அறிவிப்பு

195

லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 தொடரின் நான்காவது பருவகாலத்திற்கான போட்டிகள் இந்த ஆண்டின் ஜூலை மாதம் 31ஆம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி வரை நடைபெறவிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) தெரிவித்துள்ளது.

தேசிய கபடி சம்பியன்ஷிப்பில் நிந்தவூர் மதீனா அணி இரண்டாம் இடம்

மொத்தம் ஐந்து அணிகள் பங்கெடுக்கும் லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் போட்டிகள் இலங்கை கிரிக்கெட் சபை மூலம் ஜூலை மற்றும் ஒகஸ்ட் மாத காலப்பகுதியில் நடாத்துவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிலையிலேயே, நான்காவது பருவத்திற்கான தொடர் ஜூலை 31ஆம் திகதி தொடக்கம் ஒகஸ்ட் 22ஆம் திகதி வரை இடம்பெறும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

“நாங்கள் இந்த தொடரினை ஜூலை மற்றும் ஒகஸ்ட் மாதங்களில் நடாத்த தீர்மானித்திருப்பதோடு, குறிப்பிட்ட காலப்பகுதியில் திறமை மிக்க வெளிநாட்டு வீரர்களை இலங்கை மண்ணை நோக்கி கவர்வதற்கும் எதிர்பார்த்திருக்கின்றோம்.” என லங்கா பிரீமியர் லீக் தொடர் இயக்குனரான சமன்த தொடவெல்ல குறிப்பிட்டிருந்தார்.

LPL தொடரில் பங்கெடுக்கும் ஒவ்வொரு அணிகளும் 20 வீரர்கள் கொண்ட குழாத்தினை கொண்டிருக்க முடியும் என்பதோடு, ஒவ்வொரு அணிக்கும் ஆறு வெளிநாட்டு வீரர்களை தமது குழாத்தினுள் உள்ளடக்குவதற்கான வாய்ப்பும் காணப்படுகின்றது.

இதேவேளை LPL தொடரின் நடப்புச் சம்பியன்களாக திசர பெரேரா தலைமையிலான ஜப்னா கிங்ஸ் அணி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<