பெண்களுக்கான 10.000 மீட்டர் உலக சாதனையை முறியடித்த கிடே

67
 

எதியோப்பியாவைச் சேர்ந்த 23 வயதுடைய வீராங்கனை லெட்டிசென்பெட் கிடே பெண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப் போட்டியில் உலக சாதனையை முறியடித்தார். 

நெதர்லாந்தின் ஹெஞ்சிலோ விளையாட்டரங்கில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற எதியோப்பிய வீரர்களுக்கான ஒலிம்பிக் தகுதிகாண் போட்டியில் பங்குகொண்ட அவர், 29 நிமிடங்கள் 01.03 செக்கன்களில் போட்டித் தூரத்தை நிறைவுசெய்து இந்த சாதனையை நிலைநாட்டினார்

காற்றின் வேகத்தினால் இலங்கை சாதனையை தவறவிட்டார் யுபுன்

முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இதே விளையாட்டரங்கில் நடைபெற்ற மற்றுமொரு தகுதிகாண் போட்டியில் பெண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப் போட்டியில் உலக சாதனையை நெதர்லாந்து வீராங்கனை சிபான் ஹசன் முறியடித்தார்

போட்டியை அவர் 29 நிமிடங்கள் 08.82 செக்கன்களில் நிறைவுசெய்து பெண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டத்தில் புதிய உலக சாதனை படைத்தார். இதன்மூலம் ரியோ 2016 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் எதியோப்பிய வீராங்கனை அல்மாஸ் அயானாவினால் நிலைநாட்டப்பட்ட 29 நிமிடங்கள், 17.45 செக்கன்கள் என்ற உலக சாதனையைவிட 10 செக்கன்கள் குறைவான நேரத்தில் 10,000 மீட்டர் போட்டியை சிபான் ஹசன் நிறைவுசெய்தார்.

எனினும், மூன்று நாட்கள் செல்வதற்குள் அந்த சாதனையை 5 செக்கன்களால் எதியோப்பியாவின் லெட்டிசென்பெட் கிடே முறியடித்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதன் மூலம் 5,000 மீட்டர், 10,000 மீட்டர் ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளுக்குமான உலக சாதனைகளை 1986க்கும் 1993க்கும் இடைப்பட்ட காலத்தில் ஏற்படுத்திய நோர்வேயின் இங்றிட் கிறிஸ்டியான்சென்னுக்குப் பின்னர் அந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் உலக சாதனைகளை ஏற்படுத்திய முதலாவது பெண் என்ற பெருமையை கிடே பெற்றுக்கொண்டுள்ளார்.

உயரம் பாய்தலில் தெற்காசிய சாதனையை முறியடித்தார் உஷான் திவங்க

நான் உலக சாதனை படைக்கவேண்டும் என எதிர்பார்த்தார்கள். 29 நிமிடத்துக்குள்ளாக தூரத்தைக் கடக்க அடுத்ததாக முயற்சி செய்வேன்’ என லெட்டிசென்பெட் கிடே தனது சாதனை குறித்து கருத்து  கூறியுள்ளார்.  

முன்னதாக கடந்த வருடம் 5,000 மீட்டர் ஓட்டத்தில் கிடே உலக சாதனை படைத்தார். 1993-க்குப் பிறகு 5,000 மீட்டர் மற்றும் 10,000 மீட்டர் என இருவகைப் ஓட்டப் போட்டிகளிலும் உலக சாதனை படைத்த வீராங்கனை என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

முன்னதாக, கடந்த ஒக்டோபர் மாதம் ஸ்பெய்னில் நடைபெற்ற பெண்களுக்கான 5,000 மீட்டர் ஓட்டப் போட்டியை 14 நிமிடங்கள் 06.62 செக்கன்களில் நிறைவுசெய்து லெட்டிசென்பெட் கிடே உலக சாதனை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது

 மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க…