இலங்கை – பாகிஸ்தான் இரண்டாவது T20I போட்டிக்கான டிக்ககெட்டுகளை கொள்வனவு செய்த ரசிகர்கள் மூன்றாவது T20I போட்டிக்கு இலவச அனுமதியை பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் நடைபெறவிருந்த இரண்டாவது நடைபெறவிருந்த இரண்டாவது T20I போட்டி சீரற்ற காலநிலை காரணமாக கைவிடப்பட்டது.
சத்திரசிகிச்சையினால் நியூசிலாந்து T20I போட்டிகளை தவறவிடும் திலக் வர்மா
இந்த நிலையில் இரண்டாவது T20I போட்டிக்கான டிக்கெட்டுகளை கொள்வனவு செய்த ரசிகர்கள், மூன்றாவது போட்டிக்கான டிக்கெட்டினை இன்று (10) அல்லது நாளை (11) தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
ரசிகர்கள் தங்களுடைய டிக்கெட்டுகளை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது T20I போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை (11) இரவு 07.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<






















