சஹீட் அப்ரிடிக்கு கொவிட்-19 தொற்று

424
PSL

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சகலதுறைவீரரான சஹீட் அப்ரிடிக்கு கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சஹீட் அப்ரிடி, தனக்கு கொவிட்-19 தொற்று இருப்பதனை தனது ட்விட்டர் கணக்கு மூலம் உறுதி செய்துள்ளார். 

இங்கிலாந்து செல்லும் பாகிஸ்தான் குழாம் அறிவிப்பு

”வியாழக்கிழமை தொடக்கம் எனக்கு உடல்நிலை சரியில்லை. எனது உடலில் தொடர்ந்து வலி ஏற்பட்டது. நான் என்னை துரதிஷ்டவசமாக (கொரோனா வைரஸ்) பரிசோதனைக்கு உட்படுத்தினேன். அதில், எனக்கு (கொரோனா வைரஸ்) தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியது. இறைவனின் நாட்டத்தோடு (இந்த நோயிலிருந்து) விரைவாக குணமடைய பிரார்த்தனைகளை எதிர்பார்க்கின்றேன்.”  

தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கும் சஹீட் அப்ரிடி, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மூன்றாவது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரராக காணப்படுகின்றார். இதற்கு முன்னர் தௌபீக் உமர் மற்றும் சபர் சர்பராஸ் ஆகிய கிரிக்கெட் வீரர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகிய நிலையில், சபர் சர்பராஸ் வைரஸ் தாக்கம் உக்கிரமடைந்து கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட ஆரம்ப நாட்களில் பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களுடன், பல உதவிகளையும் செய்த சஹீட் அப்ரிடிக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்ட செய்தி அறிந்து கிரிக்கெட் உலகமும் பாரிய அதிர்ச்சியொன்றுக்கு உள்ளாகியிருக்கின்றது. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<