கடைசி பந்து வரையான இலங்கையின் போராட்டம் வீணானது

185

இலங்கை கட்புலனற்றோர் அணிக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய கட்புலனற்றோர் அணி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

கொழும்பு, BRC மைதானத்தில் நேற்று (19) நடைபெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இந்நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை கட்புலனற்றோர் அணியின் ஆரம்ப வரிசை இந்திய பந்துவீச்சாளர்கள் முன் விக்கெட்டுகளை பறிகொடுக்க மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடி அதிகரித்தது.

உலக சாதனையுடன் தொடரை வென்ற இலங்கை

இலங்கை கட்புலனற்றோர் அணிக்கு எதிரான மூன்றாவதும் கடைசியுமான ஒரு நாள்..

எவ்வாறாயினும் வலதுகை துடுப்பாட்ட விரர் B2 (இடைநிலை கட்புலன்) பிரிவு வீரர் ருவன் வசந்த 4 பௌண்டரிகள் விளாசி பெற்ற 39 ஓட்டங்களின் உதவியோடு இலங்கை அணியால் சவாலான 168 ஓட்டங்களை பெற முடிந்தது.

ருவன் வசந்தவுக்கு உதவியாக ஆடிய இலங்கை கட்புலனற்றோர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சந்தன தேசப்ரிய (B2) மூன்று பௌண்டரிகளுடன் 24 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான B3 பிரிவு (அதிக கட்புலன்) நரேஷ் ஜும்தா இந்திய அணிக்காக 22 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

பின்னர், 169 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலெடுத்தாடிய இந்திய அணிக்கு கடும் சவால் கொடுத்த இலங்கை கட்புலனற்றோர் அணியின் பந்துவீச்சாளர்கள் போட்டியில் கடைசி ஓவர் வரை வெற்றிக்காக போராடினர். எவ்வாறாயினும் நிதானமாக துடுப்பெடுத்தாடிய வலதுகை துடுப்பாட்ட விரர் சுனில் ரமேஷ் ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களை பெற்று இந்திய அணியை வெற்றி வரை அழத்துச் சென்றார். இது தவிர, வலதுகை துடுப்பாட்ட வீரர் கனேஷ் முதுகர் 34 ஓட்டங்களை பெற்றார்.   

Photos: Sri Lanka Blind Cricket vs India Blind Cricket 2018 | 3rd One Day Match

ThePapare.com | Hiran Weerakkody | 18/07/2018…

முன்னதாக இலங்கை மற்றும் இந்திய கட்புலனற்றோர் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-1 என வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.  

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி-20 போட்டி BRC மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 168/9 (20) – ருவன் வசந்த 39, சந்தன தேசப்ரிய 24, நரேஷ் ஜும்தா 1/22

இந்தியா – 169/3 (19.1) – சுனில் ரமேஷ் 52*, கனேஷ் முதகர் 34

போட்டியின் ஆட்ட நாயகன்  சுனில் ரமேஷ் (இந்தியா)

முடிவு: இந்திய கட்புலனற்றோர் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<