உலக சாதனையுடன் தொடரை வென்ற இலங்கை

332

இலங்கை கட்புலனற்றோர் அணிக்கு எதிரான மூன்றாவதும் கடைசியுமான ஒரு நாள் போட்டியில் இந்திய கற்புலனற்றோர் அணி 66 ஓட்டங்களால் ஆறுதல் வெற்றி ஒன்றை பெற்றது. எனினும், இந்த ஒரு நாள் தொடரை இலங்கை அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

உலக சம்பியன் இந்தியாவிடம் இலங்கை தொடர் வெற்றி

இந்திய கட்புலனற்றோர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும்…

கொழும்பு, BRC மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டித் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இலங்கை கட்புலனற்றோர் அணி வெற்றி பெற்றதோடு தொடரின் முதல் போட்டியின்போது இலங்கை அணியின் தினேஷ் மதுகம ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்தியிருந்தார். இது உலக கட்புலனற்றோர் கிரிக்கெட் வரலாற்றில் பெறப்பட்ட முதல் ஹெட்ரிக் விக்கெட் சாதனையாகப் பதிவாகியது.

இந்நிலையில், தொடரின் கடைசி ஒரு நாள் போட்டி நேற்று (17) நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி கனேஷ் முதாகரின் அபார துடுப்பாட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 323 ஓட்டங்களை பெற்றது. இதன்போது முதாகர் 86 ஓட்டங்களை விளாசினார்.

இது தவிர, வலதுகை துடுப்பாட்ட விரர் சுனில் ரமேஷ் நான்கு பௌண்டரிகளுடன் 54 ஓட்டங்களை பெற்றதோடு இந்திய அணிக்காக மற்றொரு அரைச்சதத்தை நெருங்கிய ஆரம்பத் துடுப்பாட்ட விரர் லிங்க்ராத் 47 ஓட்டங்களை குவித்தார். பந்துவீச்சில் அணித் தலைவர் சந்தன சூரியாரச்சி, கோசல ஹேரத் மற்றும் வலதுகை மிதவேகப்பந்து வீச்சாளர் தினேஷ் மதுகம ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.   

பின்னர், இந்த தொடரில் இதுவரை பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களை துரத்திய இலங்கை அணி சார்பில் ஒருவர் மாத்திரமே அரைச்சதம் ஒன்றை எட்டினார். இதன்படி இலங்கை அணி சார்பில் அதிக ஓட்டங்களை பெற்ற சஹன் குமார வேகமாக 84 ஓட்டங்களை குவித்தார். இந்த ஓட்டங்களை பெற அவர் 9 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசினார். அணித்தலைவர் சந்தன சூரியாரச்சி 37 ஓட்டங்களை பெற்றார்.

Photos: Sri Lanka Blind Cricket vs India Blind Cricket 2018 | 3rd One Day Match

ThePapare.com | Hiran Weerakkody | 18/07/2018…

இறுதியில் இலங்கை நிர்ணயிக்கப்பட்ட ஓவர்கள் முடிவதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.   

பந்துவீச்சில் இந்திய அணியின் ரம்பீர் 40 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஜே ரெட்டி 66 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.  

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரின் முதல் போட்டி நாளை (19) கொழும்பு, BRC மைதானயத்தில் நடைபெறும். இந்த போட்டிகளின் முடிவுகள் மற்றும் புகைப்படங்களை உங்களுக்குத் தர ThePapare.com தயாராக உள்ளது. ThePapare.com உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

போட்டியின் சுருக்கம்

இந்தியா – 323/8 (40) – கனேஷ் முதுகர் 86, சுனில் ரமேஷ் 54, லின்க்ராத்; 47, சந்தன சூரியாரச்சி 2/56, கோசல ஹேரத் 2/59, தினேஷ் மதுகம 2/62

இலங்கை – 255 (34.1) – சஹன் குமார 84, சந்தன சூரியாரச்சி 37, ரம்பீர் 3/40, அஜே ரெட்டி 2/36   

போட்டியின் நாயகன் – கனேஷ் முதுகர் (இந்தியா)

முடிவு: இந்திய கட்புலனற்றோர் அணி 66 ஓட்டங்களால் வெற்றி  

>> புகைப்படங்களைப் பார்வையிட <<