உலகக் கிண்ண பயிற்சி மோதலில் இந்தியா வெற்றி

261

19 வயதின் கீழ் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்காக இலங்கை – இந்திய அணிகள் விளையாடிய பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடித்த 18 வயது இந்திய வீரர்

தென்னாபிரிக்காவின் ப்ரெடோரியாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை இளம் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்ததோடு 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 208 ஓட்டங்கள் எடுத்தது.

இலங்கை துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக தினுர கலுப்பகன 68 ஓட்டங்கள் எடுத்தார். இந்திய பந்துவீச்சில் முஷீர் கான் 3 விக்கெட்டுக்களைச் சுருட்டினார்.

இதன் பின்னர் போட்டியின் வெற்றி இலக்கான 209 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணியானது போட்டியின் வெற்றி இலக்கை 41.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 209 ஓட்டங்களுடன் அடைந்தது.

இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்த அதன் துடுப்பாட்டத்தில் முஷீர் கான் 51 ஓட்டங்கள் எடுத்ததோடு, உதய் சஹரான் 50 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

இலங்கை பந்துவீச்சில் கருக்கே சங்கேத், தினுர கலுப்பகன மற்றும் சினேத் ஜயவர்தன ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தும் அவர்களது பந்துவீச்சு வீணாகியது.

போட்டியின் சுருக்கம்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<