இலங்கை A – பங்களாதேஷ் A முதல் டெஸ்ட் போட்டி கைவிடப்பட்டது

89
Sri Lanka A vs Bangladesh A

சுற்றுலா பங்களாதேஷ் A கிரிக்கெட் மற்றும் இலங்கை A கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடைபெறவிருந்த நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியை, சீரற்ற காலநிலையால் முழுமையாக கைவிடுவதாக அறிவிக்கப்பட்டது.

உத்தியோகபூர்வமற்ற இருதரப்பு தொடருக்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் A அணி, இலங்கை A அணியுடன் நான்கு நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.  

இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்குமிடையிலான முதலாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டி கடந்த 23ஆம் திகதி கட்டுநாயக்கவில் உள்ள எம்.சி.ஜி மைதானத்தில் ஆரம்பமாக இருந்தது

மழை காரணமாக கைவிடப்பட்ட இலங்கை, பங்களாதேஷ் A அணிகளுக்கிடையிலான போட்டி

சுற்றுலா பங்களாதேஷ் A கிரிக்கெட் மற்றும் இலங்கை A கிரிக்கெட்…

எனினும், போட்டியின் முதல் நாள் ஆட்டம் தொடர்ந்து பெய்ந்த மழையினால் நாணய சுழற்சிகூட இடம்பெறாத நிலையில் கைவிடப்பட்டது. இந்த நிலையில், போட்டியின் இரண்டாவது நாளான (24) நேற்றைய தினமும் சீரற்ற காலநிலை நிலவியதை அடுத்து போட்டியை இரத்து செய்வதாக நடுவர்கள் அறிவித்தனர்.

இந்நிலையில், நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் 30ஆம் திகதி காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<