உலகில் அதிவேகமாக பந்துவீசுகின்ற சிறந்த 10 வீரர்கள்

4632

வேகப் பந்துவீச்சு என்பது கிரிக்கெட்டில் ஒரு கலையாகும். அது ஒரு சிலருக்கு மட்டுமே உள்ளது. அந்தக் கலையை கற்க மன உறுதி மட்டும் இருந்தால் போதாது. உடல் வாகு, தேவையான அர்ப்பணிப்பு என பல நுணுக்கங்கள் தேவைப்படும். இந்தக் கலையில் தேர்ச்சி பெற பந்துவீச்சாளர்கள் முயற்சி செய்ய வேண்டும்.  

மேலும், வேகப் பந்துவீச்சாளர்களுக்கு அடிக்கடி காயம் ஏற்படும். வேகம் ஒப்பீட்டளவில் குறைந்தாலும், பந்துவீச்சாளர்கள் நிலையான அடிப்படையில் 150 கிலோ மீற்றர் வேகத்தைப் பேணுவதற்கு முயற்சிக்க வேண்டும்

உலகின் உயரமான கிரிக்கெட் வீரர்கள்

இவை அனைத்தையும் கடந்து கிரிக்கெட் அரங்கில் ஒரு வேகப் பந்துவீச்சாளர் உருவாவது என்பது எளிதான காரியமல்ல. இருந்தாலும் தற்காலத்தில் 150 கிலோ மீற்றர் வேகத்திற்கு மேல் வீசும் பல பந்துவீச்சாளர்கள் உள்ளனர். அவர்களில் அதிசிறந்த 10 பந்துவீச்சாளர்களை தற்போது காண்போம்.  

1.மிட்செல் ஸ்டார்க் – 161.4 கி.மீ 

அவுஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சின் மிகப்பெரிய தூணாக மிட்செல் ஸ்டார்க் வலம்வந்து கொண்டிருக்கின்றார். 30 வயதான இடது கை வேகப் பந்துவீச்சாளரான இவர் டெஸ்ட் தரவரிசையில் 6ஆவது இடத்திலும், ஒருநாள் தரவரிசையில் 10ஆவது இடத்திலும்ள்ளார்

பந்துவீச்சாளர்கள் அனைவரும் 140 கிலோ மீற்றர் வேகத்தில் வீசினால் இவர் மட்டும் 148 கிலோ மீற்றர் வேகத்திற்கு மேல் தொடர்ச்சியாக பந்து வீசுவார்

இறுதியாக, நியூஸிலாந்து அணிக்கு எதிராக பேர்த் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ரொஸ் டெய்லருக்கு எதிராக 160 கிலோ மீற்றர் வேகத்தில் பந்துவீசி கிரிக்கெட் உலகை திணற அடித்தார் ஸ்டார்க். இதுவரை இவ்வாறு ஒரு பந்தை யாரும் வீசியதில்லை என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர்.

இவர் தான் கடந்த 2015 மற்றும் 2019 ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை எடுத்த வீரராகவும் இடம்பிடித்தார்

இதுவரை 57 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 244 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ள ஸ்டார்க், 91 ஒருநாள் போட்டிகளில் 178 விக்கெட்டுக்களையும், 31 T20i போட்டிகளில் 43 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளார்.

  1. ஜொப்ரா ஆர்ச்சர் – 155 கி.மீ

INSERT IMAGE – archer-2 

மேற்கிந்திய தீவுகள் அணிக்காக ஆடி அதன்பின்னர் இங்கிலாந்தில் குடியேறி இங்கிலாந்து கிரிக்கெட் உலகில் பெரும் பேசுப்பொருளாக மாறிய வீரர் தான் ஜொப்ரா ஆர்ச்சர். கடந்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் களமிறங்கி அனைவரது கவனத்தையும் பெற்றுக் கொண்டதுடன், இங்கிலாந்து அணி சார்பாக அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய வீரராகவும் மாறினார்.

அத்துடன், அவுஸ்திரேலியாவிற்கு எதிராக கடந்த வருடம் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் 155 கிலோ மீற்றர் வேகத்திற்கு மேல் பந்துவீசி அவுஸ்திரேலிய அணியை திணறடித்தார்.

25 வயதான வலதுகை வேகப் பந்துவீச்சாளரான இவர், இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 30 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

EMBERD – https://www.thepapare.com/kumar-sangakkara-batting-and-wk-records-feature-tamil/

  1. வஹாப் ரியாஸ் – 151.5 கி.மீ

வஹாப் ரியாஸ் பாகிஸ்தான் அணியின் 34 வயதான இடதுகை வேகப்பந்து வீச்சாளர். தற்போது 30 வயதுக்கு மேல் ஆனாலும் 140 கிலோ மீற்றர் வேகத்தில் பந்துவீசக் கூடிய வல்லமை படைத்தவர்

இவர் 2015ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் 154.5 கிலோ மீற்றர் வேகத்தில் பந்துவீசி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.  

இதுவரை, 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 83 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார். இதில் 89 ஒருநாள் போட்டிகளில் 115 விக்கெட்டுக்களையும், 31 T20i போட்டிகளில் 30 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தகது.  

  1. அடெம் மில்னே – 153.2 கி.மீ 

நியூஸிலாந்து அணியின் 26 வயதுடைய வலதுகை வேகப் பந்துவீச்சாளரான அடெம் மில்னே, 2010ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண தொடரில் அபாரமாக பந்துவீசி அனைவரது கவனத்தையும் பெற்றுக்கொண்டார்.

நியூஸிலாந்து அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளரான ஷேன் பொன்ட்டின் இடத்தை நிரப்புவார் என எதிர்பார்க்கப்பட்டாலும், அடிக்கடி உபாதைகளுக்கு முகங்கொடுத்து வருகின்ற காரணத்தால் அவரால் தொடர்ச்சியாக அணிக்காக விளையாட முடியவில்லை

2010ஆம் ஆண்டு T20i போட்டிகளின் மூலமாக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி எடுத்துவைத்த இவர், மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற T20i போட்டியில் 153.2 கிலோ மீற்றர் வேகத்தில் பந்துவீசி தனது அதிவேக பந்துவீச்சைப் பதிவு செய்தார்

நியூஸிலாந்து அணிக்காக இதுவரை டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத அவர், 40 ஒருநாள் மற்றும் 21 T20i போட்டிகளில் விளையாடி முறையே 41, 25 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார்

  1. ஜஸ்பிரித் பும்ரா – 153 கி.மீ

இவர் இந்தியாவிற்கு கிடைத்த மிக அரிய வேகப் பந்துவீச்சாளர். வித்தியாசமான பாணியில் பந்து வீசினாலும் இவரது துள்ளிய தன்மையும் வேகமும் எதிரணி துடுப்பாட்ட வீரர்களை திணறடிக்கும்

இவர் தொடர்ச்சியாக 140 கிலோ மீற்றருக்கு மேல் பந்துவீசுகின்ற திறமை படைத்தவர். 2018ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற போர்டர்கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் போது 153 கிலோ மீற்றர் வேகத்தில் பந்தை வீசினார். இதுதான் இவர் வீசிய அதிவேகப் பந்துவீச்சு ஆகும்

EMBERD – https://www.thepapare.com/sri-lanka-greatest-test-victories-feature-tamil/

.சி.சியின் டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 7ஆவது இடத்தில் உள்ள 26 வயதான பும்ரா, இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 68 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார்.  

  1. ஜேம்ஸ் பட்டின்சன் – 153 கி.மீ

அவுஸ்திரேலிய அணியின் 30 வயதான வலதுகை வேகப் பந்துவீச்சாளரான இவர், அடிக்கடி காயங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றார். இதனால் இவருக்கு தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடர்ச்சியாக தொடர முடியாமல் போனது

2012ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 153 கிலோ மீற்றர் வேகத்தில் பந்துவீசி ராகுல் டிராவிட்டின் ஸ்டம்புகளை சிதற செய்தார். இதுவே இவர் வீசிய அதிவேக பந்துவீச்சு ஆகும்.

இதுவரை 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 81 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ள பட்டின்சன், இறுதியாக கடந்த ஜனவரி மாதம் நியூஸிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது

  1. கெமார் ரூச் – 152.7 கி.மீ

வேகப் பந்துவீச்சாளர்களுக்கு பெயர்போன நாடான மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடி வருகின்ற 31 வயதான கெமார் ரூச், கிட்டத்தட்ட ஆறடி உயரம் கொண்டவர்

எப்போதும் 140 கிலோ மீற்றர் வேகத்திற்கு மேல் பந்தை வீசிக் கொண்டே இருப்பார். கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற .சி.சி உலகக் கிண்ணத் தொடரில் 152.7 கிலோ மீற்றர் வேகத்தில் பந்துவீசி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்

மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணியின் மிக முக்கியமான வேகப் பந்துவீச்சாளராக விளங்கி வருகின்ற வலதுகை வேகப் பந்துவீச்சாளரான இவர், .சி.சியின் டெஸ்ட் தரவரிசையில் 11ஆவது இடத்தில் உள்ளார்.

இதுவரை, 56 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 193 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார். இதில் 92 ஒருநாள் போட்டிகளில் 124 விக்கெட்டுக்களையும், 11 T20i போட்டிகளில் 10 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>துடுப்பாட்டத்தில் மஹேல செதுக்கிய சிற்பங்கள்<<

  1. உமேஷ் யாதவ் – 152.5 கி.மீ

இந்திய அணியின் மற்றொரு வேகப் பந்துவீச்சாளரான இவர் துல்லியமாக பந்து வீசவில்லை என்றாலும் இவருடைய வேகம் எப்போதும் குறைந்ததில்லை. பந்துவீச்சில் பல திறமை இருந்தும் சர்வதேச அணிகள் இவரது பந்தை போட்டு புரட்டி எடுப்பது வழக்கமான ஒன்றுதான்.  

150 கிலோ மீற்றருக்கு மேல் வீசும் இந்திய பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவர். கடந்த 2012 ஆம் ஆண்டு பிரிஸ்பேனில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் 152.5 கிலோ மீற்றர் வேகத்தில் பந்துவீசி இலங்கை அணியின் திலகரத்ன டில்ஷானின் ஸ்டம்புகளை சிதற செய்தார். இதுவே இவர் வீசிய அதிவேக பந்துவீச்சாகும்.  

இந்தியாவின் உள்ளூர் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தியதன் காரணமாக கடந்த வருடம் நடைபெற்ற தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரில் களமிறங்கினார்.   

.சி.சியின் டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 20ஆவது இடத்திலும், ஒருநாள் தரவரிசையில் 16ஆவது இடத்திலும் அவர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை, 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள 32 வயதான வலதுகை வேகப் பந்துவீச்சாளரான உமேஷ் யாதவ், 144 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார். இதில் 75 ஒருநாள் போட்டிகளில் 106 விக்கெட்டுக்களையும், 7 T20i போட்டிகளில் 9 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  1. மொஹமட் ஆமிர் – 151.9 கி.மீ

பாகிஸ்தான் அணிக்காக தனது 17ஆவது வயதில் அறிமுகத்தைப் பெற்றுக் கொண்ட இடதுகை வேகப் பந்துவீச்சாளரான மொஹமட் ஆமிர், 2010இல் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது சூதாட்ட சர்ச்சையில் சிக்கி ஐந்து வருட போட்டித் தடைக்கு உள்ளாகினார்.

எனினும், 2015ஆம் ஆண்டு மீண்டும் பாகிஸ்தான் அணிக்காக விளையாடும் வாய்ப்பை அவர் பெற்றுக் கொண்டார்

சாதாரணமாக 145 கிலோ மீற்றர் வேகத்திற்கு மேல் பந்துவீசும் வல்லமை படைத்த 28 வயதான அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். இதன் காரணமாக ஒருநாள் மற்றும் T20i போட்டிகளில் மட்டும் பந்துவீசி வருகிறார்

கடந்த வருடம் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் அணி சார்பாக அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரராக அவர் இடம்பிடித்தார். இவர் அதிவேகமாக 151.9 கிலோ மீற்றர் வேகத்தில் பந்து வீசியிருக்கிறார்.  

>>உலகக் கிண்ணத்தில் விக்கெட் காப்பாளராக சாதித்த சங்கக்கார!<<

அத்துடன், .சி.சியின் ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 7ஆவது இடத்தை மொஹமட் ஆமிர் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.  

பாகிஸ்தான் அணிக்காக 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 119 விக்கெட்டுக்களையும், 61 ஒருநாள் போட்டிகளில் 81 விக்கெட்டுக்களையும், 48 T20i போட்டிகளில் 59 விக்கெட்டுக்களையும் மொஹமட் ஆமிர் கைப்பற்றியுள்ளார்

  1. பெட் கம்மின்ஸ் – 151 கி.மீ

கடந்த 2018இல் தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக இடம்பெற்ற பந்து சேதப்படுத்திய விவகாரத்தில் அவுஸ்திரேலிய அணி சிக்கிக் கொண்ட பின்னர் அந்த அணிக்கு பெரும் ஊக்கமாக இருந்தவர் தான் பெட் கம்மின்ஸ்.

வலதுகை வேகப் பந்துவீச்சாளரும், அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் உப தலைவருமான பெட் கம்மின்ஸ், குறித்த சம்பவத்துக்குப் பின்னர் அவுஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சுப் பிரிவின் தலைவராக மாறினார்

2011ஆம் ஆண்டு தனது 18ஆவது வயதில் டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கினார். அதன் பின்னர் காயம் காரணமாக நான்கு ஆண்டுகள் ஓய்வெடுத்துக் கொண்டார். மீண்டும் கிரிக்கெட் களத்திற்குள் வந்தபோது இன்னும் வேகமாக பந்துவீச தொடங்கினார்.

மேலும், தற்போது .சி.சியின் டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். இவர் 151 கிலோ மீற்றர் வேகத்தில் அதிவேகமாக பந்துவீசுகின்ற திறமை கொண்டவராக விளங்குகிறார்

இதுவரை, 30 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள 27 வயதான பெட் கம்மின்ஸ், 143 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார். இதில் 64 ஒருநாள் போட்டிகளில் 105 விக்கெட்டுக்களையும், 28 T20i போட்டிகளில் 36 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<