LPL தொடரில் கிழக்கு மாகாண அணி இல்லை

Lanka Premier League - 2021

194

லங்கா பிரீமியர் லீக் T20 (LPL)  தொடரின் இரண்டாம் பருவகாலத்திற்கான போட்டிகள் எதிர்வரும் ஜூலை மாதம் 30ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி வரை நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் சபை கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தது.

இந்த நிலையில், கடந்த வருடத்தைப் போல இம்முறை லங்கா பிரீமியர் லீக் தொடரை ஐந்து அணிகளின் பங்குபற்றலுடன் நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது

முன்னதாக, இவ்வருடம் நடைபெறவுள்ள இரண்டாவது லங்கா பிரீமியர் லீக் தொடரில் ஆறாவது அணியாக கிழக்கு மாகாணத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்தும் வகையில்திருகோணமலை டைட்டன்ஸ்’ என்ற பெயரில் ஒரு அணியை இணைத்துகொள்வதற்கு போட்டி ஏற்பாட்டுக் குழுவும், இலங்கை கிரிக்கெட் சபையும் அவதானம் செலுத்தியிருந்தது

இரண்டாவது பருவகாலத்திற்குரிய LPL தொடரின் திகதிகள் அறிவிப்பு

அத்துடன், லங்கா பிரீமியர் லீக் உள்ளிட்ட ஒருசில பேஸ்புக் பக்கங்களில் ஊடாக அந்த அணியின் இலச்சினையும் வைரலாகப் பரவியிருந்தது.  

எதுஎவ்வாறாயினும், இம்முறை லங்கா பிரீமியர் லீக் தொடரில் தொடர் ஐந்து அணிகளின் பங்குபற்றலுடன் மாத்திரம் தான் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷ்லி டி சில்வா Daily FT ஆங்கில பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த வருடம் லங்கா பிரீமியர் லீக் தொடரின் அனைத்துப் போட்டிகளும் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்றது

எனினும், இவ்வருடம், கொழும்பு, கண்டி மற்றும் தம்புள்ள ஆகிய இடங்களிலும் லங்கா பிரீமியர் லீக் தொடர் நடத்தப்படும் என செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆனால், இம்முறை லங்கா பிரீமியர் லீக் தொடர் எந்தெந்த மைதானங்களில் நடைபெறும் என்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என ஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார். அவர் வழங்கிய பேட்டியில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நாங்கள் கடைசியாக நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் தொடருக்கான அனைத்துப் போட்டிகளையும் ஒரு மைதானத்தில் தான் நடத்தியிருந்தோம். எனினும், இவ்வருடம் ஒரே மைதானத்தில் போட்டிகளை மட்டுப்படுத்தப்படாமல் இன்னொரு மைதானத்தில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம்

ஆனால், அவ்வாறு செய்வது பெரும்பாலும் கடினம். எனவே, இந்த வருடமும் போட்டிகள் அனைத்தும் ஹம்பாந்தோட்டையில் தான் நடத்தப்பட வேண்டி ஏற்படும். தற்போது நாங்கள் அது குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை என்று அவர் கூறினார்.

உலக கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் செல்லும் வழியைப் பார்க்கும்போது பல நட்சத்திர வீரர்கள் வெளிநாட்டு லீக் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்கிறார்கள்

இலங்கையில் 2021ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணம்??

இதனால், இம்முறை லங்கா பிரீமியர் லீக் தொடருக்கும் வெளிநாட்டு வீரர்கள் மத்தியில் நிறைய ஆர்வம் இருப்பதாக நான் நினைக்கிறேன். எனவே, இந்த வருடமும் 25 முதல் 30 வெளிநாட்டு வீரர்களைக் கண்டுபிடிப்பது எங்களுக்கு பெரிய பிரச்சினையாக இருக்காது என்று நான் நம்புகிறேன்

மேலும், இந்தப் போட்டியின் போது வேறு எந்த போட்டிகளும் இல்லாததால் நம் நாட்டில் உள்ள அனைத்து வீரர்களும் இம்முறை லங்கா பிரீமியர் லீக் தொடரில் விளையாடுவார்கள் என அவர் தெரிவித்தார்

முன்னதாக, கடந்த வருடம் நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் தொடரில் 33 வெளிநாட்டு வீரர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…