மாகாண கிரிக்கெட் தொடரில் ஜொலித்த தேசிய அணி நட்சத்திரங்கள்

1454

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் மாகாணங்களுக்கு இடையிலான “ சுபர் – 4 “ முதல்தர கிரிக்கெட் தொடரின் (நான்கு நாட்கள் கொண்ட), ஆரம்ப போட்டிகள் இரண்டும் இன்று (02) முடிவடைந்திருக்கின்றன.

கொழும்பு எதிர் காலி

ஹம்பந்தோட்டையில் சமநிலையில் நிறைவடைந்த காலி மற்றும் கொழும்பு அணிகள் இடையிலான இப்போட்டியின் இறுதி நாளான இன்று காலநிலை சீர்கேடு காரணமாக குறைவான ஓவர்களே வீசப்பட்டிருந்தன. இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான சதீர சமரவிக்ரமவும், லஹிரு மிலன்தவும் காலி அணிக்காக இன்றைய இறுதி நாளில் அரைச்சதங்கள் விளாசியிருந்தனர்.

கொழும்பு அணியுடனான போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வரும் காலி வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தி வருகின்ற மாகாண ரீதியிலான சுபர் – 4 முதல்தர…..

ஆட்டத்தின் நேற்றைய மூன்றாம் நாள், கொழும்பு அணி முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை (333) முடித்துக் கொண்டதன் பின்னர் காலி அணி தமது இரண்டாம் இன்னிங்சினை ஆரம்பித்து ஒரு ஓட்டத்தை மாத்திரம் பெற்றுக் கொண்ட நிலையில் போதிய வெளிச்சம் இல்லாத நிலையில்  நேற்றைய மிகுதி நேர ஆட்டம் கைவிடப்பட்டிருந்தது.

இப்போட்டியில் காலி அணியினர் அவர்களுடைய முதல் இன்னிங்ஸ் (476) காரணமாக  144 ஓட்டங்கள் முன்னிலை அடைந்திருந்தவாறு இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை இன்று தொடர்ந்தனர்.

இன்றைய ஆட்டத்தில் போட்டி சமநிலை அடையும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் காலி அணியின் முன்வரிசை விக்கெட்டுக்கள் இரண்டினை விஷ்வ பெர்ணாந்து சரிக்க, அவ்வணி 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து தடுமாற்றம் ஒன்றினை தொடக்கத்திலேயே காட்டியது. இது ஆட்டத்தின் திருப்பு முனையாக மாறும் என எதிர்பார்த்த போதிலும் சதீர சமரவிக்ரம ஆரம்ப வீரர் லஹிரு மிலன்தவுடன் கைகோர்த்து காலி அணிக்கு நம்பிக்கை தரத் தொடங்கினார். இவர்கள் மூன்றாம் விக்கெட்டுக்காக 147 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர்.

சதீர சமரவிக்ரம காலி அணியின் மூன்றாம் விக்கெட்டாக ஆட்டமிழந்ததனை அடுத்து சிறிது நேரத்தில் போதிய வெளிச்சம் இன்மையினால் ஆட்டம் சிறிது நேரத்திற்கு தடைப்பட்டது. குறித்த காலப்பகுதியில் தேநீர் இடைவேளையும் எடுத்துக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து காலநிலையில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தினால் இந்தப் போட்டி கைவிடப்பட்டது.

இரண்டாம் நாள் முடிவில் காலி, தம்புள்ளை அணிகள் வலுவான நிலையில்

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் மாகாண அணிகளுக்கு இடையிலான ‘சுப்பர்-4’…..

போட்டியில் போதிய வெளிச்சமற்ற நிலை உருவாகும் போது காலி அணியினர், 56 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து 177 ஓட்டங்களைக் குவித்திருந்தனர்.

காலி அணி சார்பான துடுப்பாட்டத்தில் லஹிரு மிலன்த 74 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் நின்றதுடன், சதீர சமரவிக்ரம 8 பெளண்டரிகள் அடங்கலாக 77 ஓட்டங்களைக் குவித்திருந்தார். மறுமுனையில் விஷ்வ பெர்ணாந்து 2 விக்கெட்டுக்களை கொழும்பு அணிக்காக கைப்பற்றியிருந்தார்.

ஸ்கோர் விபரம்

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது.


கண்டி எதிர் தம்புள்ளை

கட்டுநாயக்கவில் முடிவடைந்த இப்போட்டியும் சமநிலை அடைந்திருக்கின்றது. எனினும், இன்றைய நாளில் இரண்டு அணிகளிதும் துடுப்பாட்ட வீரர்கள் பிரகாசித்திருந்தனர்.

நேற்று இடம்பெற்ற போட்டியின் மூன்றாம் நாள் நிறைவில், கண்டி அணியினை விட 279 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்த தம்புள்ளை வீரர்கள் தமது இரண்டாம் இன்னிங்சுக்காக 163 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தனர். களத்தில் மிலிந்த சிறிவர்தன 30 ஓட்டங்களுடனும், சசித்ர சேனநாயக்க 20 ஓட்டங்களினையும் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இன்று தொடர்ந்த இறுதி நாளுக்கான போட்டியில் சிறிவர்தன, சசித்ர சேனநாயக்க ஆகிய வீரர்கள் சாதுர்யமான ஆட்டத்தினால் அரைச்சதம் கடந்தனர். இவர்களின் துடுப்பாட்ட உதவியோடு தம்புள்ளை அணி  65.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 256 ஓட்டங்களினை இரண்டாம் இன்னிங்சுக்காக பெற்றுக் கொண்டது.

2018 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணம் இலங்கையில்?

இந்த ஆண்டு செம்டம்பர் மாதம் இந்தியாவில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆசியக்…..

தம்புள்ளை அணியின் துடுப்பாட்டத்தில் மிலிந்த சிறிவர்தன, 71 ஓட்டங்கள் குவிக்க ஏற்கனவே, இப்போட்டியின் முதல் இன்னிங்சில் சதம் கடந்த சுழல் பந்து வீச்சாளரான சசித்ர சேனநாயக்க 60 ஓட்டங்களினை பெற்று அசத்தியிருந்தார்.

கண்டி அணியின் பந்துவீச்சில் கசுன் ராஜித மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும்  பிரபாத் ஜயசூரிய 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இதனையடுத்து, வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 373 ஓட்டங்களைப் பெற தம்முடைய இரண்டாம் இன்னிங்சினை ஆரம்பித்த கண்டி அணி, இறுதி நாள் ஆட்டம் நிறைவடைந்து போட்டி சமநிலை அடையும் போது, 56.2 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 221 ஓட்டங்களைக் குவித்திருந்தது.

மிகவும் சிறந்த இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை காட்டிய கண்டி அணியில், சதம் தாண்டிய மஹேல உடவத்த 102 ஓட்டங்களுடனும் அணித்தலைவர் நிரோஷன் திக்வெல்ல 56 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது நின்றிருந்தனர்.

ஸ்கோர் விபரம்

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்