அஷேன், சச்சித்ரவின் சதத்தால் சிலாபம் மேரியன்ஸ் அணிக்கு இமாலய ஓட்டங்கள்  

87

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/18ஆம் ஆண்டு உள்ளூர் பருவத்திற்கான பிரீமியர் லீக் A நிலை தொடரில் முதல் சுற்றின் கடைசி ஆறு போட்டிகளும் இன்று வெள்ளிக்கிழமை (19) ஆரம்பமாகின.  

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம்

அஷேன் சில்வா மற்றும் சச்சித்ர சேரசிங்க பெற்ற சதத்தின் மூலம் இலங்கை துறைமுக அதிகாரசபை அணிக்கு எதிராக சிலாபம் மேரியன்ஸ் அணி அசைக்க முடியாத ஓட்ட எண்ணிக்கையுடன் முன்னிலை பெற்றுள்ளது.

சகீப் அல் ஹஸனின் சகலதுறை ஆட்டத்தினால் இலங்கைக்கு படுதோல்வி

பங்களாதேஷில் நடைபெற்று வரும் முக்கோண ஒரு நாள் தொடரில் இலங்கை…

கொழும்பு, கோல்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடத் திர்மானித்த மலிந்த புஷ்பகுமார தலைமையிலான சிலாபம் மேரியன்ஸ் அணி 8 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தபோதும் ஆரம்ப வீரர் அஷேன் சில்வா, அடுத்து வந்த ஓஷத பெர்னாண்டோவுடன் இணைந்து 2ஆவது விக்கெட்டுக்கு 112 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டார்.

ஓஷத பெர்னாண்டோ 65 ஓட்டங்களில் ஆட்டமிழந்த பின் வந்த சச்சித்ர சேரசிங்கவுடன் இணைந்த அஷேன் சில்வா 3ஆவது விக்கெட்டுக்கு பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 215 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டார்.

இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் சிலாபம் மேரியன்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 335 ஓட்டங்களை பெற்றுள்ளது. அஷேன் சில்வா 125 ஓட்டங்களுடனும் சச்சித்ர சேரசிங்க 130  ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

போட்டியின் சுருக்கம்

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 335/2 (90) – சச்சித்ர சேரசிங்க 130*, அஷேன் சில்வா 125*, ஓஷத பெர்னாண்டோ 65


கொழும்பு கிரிக்கெட் கழகம் (CCC) எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்

கொழும்பு, CCC மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் செரசன்ஸ் கழகம் முதல் இன்னிங்சுக்காக சிறப்பாக துடுப்பெடுத்தாடி வருகிறது. அந்த அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சுக்காக 5 விக்கெட்டுகளை மாத்தரம் இழந்து 347 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

பிரீமியர் லீக் தொடரில் 4 ஆவது வெற்றியை சுவீகரித்த சிலாபம் மேரியன்ஸ்

இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் 2017/18 ஆம் ஆண்டு உள்ளூர் பருவத்திற்கான…

செரசன்ஸ் அணியின் முதல் வரிசை வீரர் மின்ஹாஜ் ஜெலீல் (81) மற்றும் தனுக்க தாபரே (71) ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 122 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். அபாரமாக ஆடும் அணித் தலைவர் ஹர்ஷ குரே முதல்தர போட்டியில் 8ஆவது சதத்தை பூர்த்தி செய்து 108 ஓட்டங்களோடு களத்தில் உள்ளார்.

பிரீமியர் லீக் A குழுவுக்கான தீர்க்கமான போட்டியாக இது மாறியுள்ளது. இதில் வெல்லும் அணி சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது.

போட்டியின் சுருக்கம்

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 347/5 (69) – ஹர்ஷ குரே 108*, மின்ஹாஜ் ஜலீல் 82, தனுக்க தாபரே 72, பிரமோத் மதுவன்த 29


SSC எதிர் சோனகர் விளையாட்டுக் கழகம்

சோனகர் விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக முதல் இன்னிங்ஸில் சொற்ப ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்த SSC அணி பந்துவீச்சில் பதிலடி கொடுத்து வருகிறது.

கொழும்பு, SSC மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய SSC 199 ஓட்டங்களுக்கு சுருண்டது. சுழல்பந்து வீச்சாளர் தரிந்து ரத்னாயக்க 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

எனினும் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த சோனகர் விளையாட்டுக் கழகம் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 124 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறுகிறது.

போட்டியின் சுருக்கம்

SSC (முதல் இன்னிங்ஸ்) – 199 (52.1) – தசுன் ஷானக்க 75, மினோத் பானுக்க 36, தரிந்து ரத்னாயக்க 5/71, ஷிரான் பெர்னாண்டோ 3/56

சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 124/7 (36) – சாமர சில்வா 32, பிரிமோஷ் பெரேரா 27, ஜெப்ரி வென்டர்சே 3/30, சச்சித்ர சேனநாயக்க 2/27, விமுக்தி பெரேரா 2/32

700 விக்கெட்டுகள், 7,000 ஓட்டங்கள் கடந்து சாதனை படைத்த டில்ருவன் பெரேரா

இலங்கை டெஸ்ட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான டில்ருவன்…


BRC எதிர் இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம்

இலங்கை இராணுவப்படை அணியை 232 ஓட்டங்களுக்கு சுருட்டிய BRC அணி முதல் இன்னிங்ஸில் சிறப்பாக ஆடி வருகிறது.

கொழும்பு, BRC மைதானதில் ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இராணுவப்படை அணியின் விக்கெட்டுகளை BRC சுழற்பந்து வீச்சாளர்கள் பதம்பார்த்தனர். திலகரத்ன சம்பத் 4 விக்கெட்டுகளை வீழ்த்தும்போத, சாமர எதிரிசிங்க 3 விக்கெட்டுகளையும், சுராஜ் ரன்திவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த BRC அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 106 ஓட்டங்களை பெற்றுள்ளது. ஆரம்ப வீரர் லசித் லக்ஷான் 61 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.

போட்டியின் சுருக்கம்

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 232 (65.3) – டில்ஷான் டி சொய்சா 50, சீகுகே பிரசன்ன 45, திலகரத்ன சம்பத் 4/40, சாமிகர எதிரிசிங்க 3/70, சுராஜ் ரன்திவ் 2/39

BRC (முதல் இன்னிங்ஸ்) – 106/1 (27) – லசித் லக்ஷான் 61*, லிசுல லக்ஷான் 33*, 


பதுரெலிய விளையாட்டுக் கழகம் எதிர் NCC

கொழும்பு, NCC மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் பதுரெலிய விளையாட்டுக் கழகம் முதல் இன்னிங்ஸில் 147 ஓட்டங்களுக்கே சுருண்டு நெருக்கடியை சந்தித்துள்ளது.

ஐ.சி.சியின் விதிமுறைகளை மீறிய கோஹ்லிக்கு அபராதம்

தென்னாபிரிக்க அணியுடன் தற்போது நடைபெற்று வருகின்ற 2ஆவது…

ஏழு பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய NCC அணி சார்பில் இடதுகை சுழல் வீரர்களான லசித் எம்புல்தெனிய மற்றும் சதுரங்க டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். B குழுவில் தற்போது ஐந்தாவது இடத்திற்கு சரிந்திருக்கும் NCC அணி சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதில் நெருக்கடியுடனேயே தனது முதல் சுற்றின் கடைசிப் போட்டியில் களமிறங்கியுள்ளது.

போட்டியின் சுருக்கம்

பதுரெலிய விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 147 (72.4) – சஞ்ஜய சதுரங்க 28, அலங்கார அசலங்க 25, சதுரங்க டி சில்வா 3/28, லசித் எம்புல்தெனிய 3/33, லஹிரு குமார 2/45

NCC (முதல் இன்னிங்ஸ்) – 42/0 (15) – மஹேல உடவத்த 25*


ராகம கிரிக்கெட் கழகம் எதிர் ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் 

மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்களின் அரைச்சதங்கள் மூலம் ப்ளூம்பீல்ட் அணிக்கு எதிராக ராகம கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்ஸில் வலுவான ஓட்டங்களை பெற்றுள்ளது.

கொழும்பு, ப்ளூம்பீல்ட் மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடும் ராகம கிரிக்கெட் கழகத்தின் தலைவர் லஹிரு திரிமான்ன மத்திய வரிசையில் நிதானமாக துடுப்பெடுத்தாடி அரைச்சதம் ஒன்றை பெற்றார். அடுத்தடுத்து மூன்று வீரர்கள் அரைச்சதம் குவிக்க ராகம கிரிக்கெட் கழகம் வலுவான நிலையை எட்டியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவின்போது அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 312 ஓட்டங்களை பெற்றது.

போட்டியின் சுருக்கம்

ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 312/9 (90) – லஹிரு திரிமான்ன 62, ரொஷேன் சில்வா 59, சமீர டி சொய்சா 53, ஜனித் லியனகே 50, லஹிரு மலின்த 38, லஹிரு சமரகோன் 2/52, கசுன் ராஜித 3/80, ரமேஷ் மெண்டிஸ் 2/28, மலித் டி சில்வா 2/82