விறுவிறுப்பான போட்டியில் கடற்படையை வீழ்த்திய இராணுவம்

69

முதற்தர கழக றக்பி அணிகளுக்கு இடையிலான டயலொக் கழக றக்பி லீக் தொடரின் 10வது வாரத்துக்கான போட்டிகள் நேற்று முன்தினத்துடன் (19) நிறைவுக்கு வந்தன. தொடரின் இரண்டாவது கட்டத்துக்கான இந்த வார போட்டிகளில், CH&FC, கண்டி விளையாட்டுக் கழகம், ஹெவ்லொக் விளையாட்டுக் கழகம் மற்றும் இராணுவப்படை விளையாட்டுக் கழகம் என்பன தங்களுடைய வெற்றிகளை பதிவு செய்துள்ளன.

சொந்த மைதானத்தில் இராணுவப் படையிடம் வீழ்ந்த கண்டி அணி

முதற்தர கழக றக்பி அணிகளுக்கு இடையிலான ..

CH&FC எதிர் விமானப்படை SC

CH&FC மற்றும் விமானப்படை அணிகளுக்கு இடையில் கடந்த 18ம் திகதி நடைபெற்ற போட்டியில், 29-22 என்ற புள்ளிகள் கணக்கில் CH&FC அணி வெற்றிபெற்றது.

போட்டியின் ஆரம்பத்தை பொருத்தவரை, விமானப்படை அணி முன்னேற்றம் கண்டது. முதற்பாதியில் 17-14 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்த விமானப்படை அணி, இரண்டாவது பாதியின் சறுக்கலினால் தோல்வியை கண்டது. இரண்டாவது பாதியில் விமானப்படை அணிக்கு சவாலைக் கொடுத்த CH&FC அணி, 15 புள்ளிகளை மேலதிகமாக பெற்று, அபார வெற்றியினை பெற்றுக் கொண்டது.

முடிவு – CH&FC 29-22 விமானப்படை SC

கண்டி SC எதிர் பொலிஸ் SC

கொழும்பு பொலிஸ் பார்க் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கண்டி மற்றும் பொலிஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில், கண்டி அணி, 27-20 என்ற  புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.  

முதற்பாதியில் சிறப்பாக ஆடிய கண்டி அணி 24-10 என்ற மிகப்பெரிய முன்னிலையைப் பெற்ற நிலையில், தங்களுடைய வெற்றியை எளிதாக்கிக்கொண்டது. எனினும், இரண்டாவது பாதியில் கண்டி அணியால் 3 புள்ளிகளை மாத்திரம் பெறமுடிந்ததுடன், பொலிஸ் அணி, மேலதிகமாக 10 புள்ளிகளை பெற்றும், 7 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

முடிவுகண்டி SC 27-22 பொலிஸ் SC

அபார வெற்றிகளுடன் வருடத்தை ஆரம்பித்துள்ள கண்டி, ஹெவ்லொக் அணிகள்

இலங்கையில் உள்ள முதற்தர றக்பி அணிகளுக்கு..

கடற்படை SC எதிர் இராணுவப்படை SC

கடற்படை மற்றும் இராணுவப்படை அணிகளுக்கு இடையில் வெலிசறை மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில், 27-25 என்ற புள்ளிகள் கணக்கில் இராணுவப்படை அணி வெற்றிபெற்றது.

போட்டியின் முதற்பாதியில் 17-14 என்ற மூன்று புள்ளிகள் முன்னிலையில், கடற்படை அணி தங்களுடைய சொந்த மைதானத்தில் முன்னிலை வகித்த போதும், இரண்டாவது பாதியில் சிறப்பாக ஆடிய இராணுவப்படை அணி, போட்டியை 27-25 என நிறைவு செய்து 2 புள்ளிகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.

இது இராணுவப்படை அணி அடுத்தடுத்து தொடர்ச்சியாகப் பெற்ற மூன்றாவது வெற்றியாகும். ஏற்கனவே, இவர்கள் தொடர்ந்து 2 வருடங்களாக தோல்வியை சந்திக்காத கண்டி விளையாட்டுக் கழகத்தையும் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

முடிவுகடற்படை SC 25-27 இராணுவப்படை SC

ஹெவ்லொக் SC எதிர் CR&FC

தங்களுடைய சொந்த மைதானத்தில், CR&FC அணியை எதிர்கொண்ட ஹெவ்லொக் அணி, 31-24 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.

போட்டியின் முதற்பாதியில் இருந்து ஆதிக்கம் செலுத்திய ஹெவ்லொக் அணி, 2 ட்ரைகள் மற்றும் 2 கன்வேர்சன்கள் ஊடாக 14 புள்ளிகளை பெற, CR&FC அணி, ஒரு ட்ரை மற்றும் ஒரு கன்வேர்சன்கள் ஊடாக 7 புள்ளிகளை பெற்றது. தொடர்ந்து இரண்டாவது பாதியில் ஹெவ்லொக் அணி மேலதிகமாக 3 ட்ரைகள் மற்றும் 1 கன்வேர்சன்கள் அடங்கலாக 31 புள்ளிகளை குவிக்க, CR&FC அணி மொத்தமாக 24 புள்ளிகளை பெற்று தோல்வியடைந்தது.

முடிவுஹெவ்லொக் SC 31-24 CR&FC

>> மேலும் பல சுவையான செய்திsகளைப் படிக்க <<