இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் 2017/18 ஆம் ஆண்டு உள்ளூர் பருவத்திற்கான பிரீமியர் லீக் A நிலை கிரிக்கெட் தொடரின் ஆறு போட்டிகள் ஞாயிற்றுகிழமை (14) நிறைவடைந்தன.

தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம்

பிரிமீயர் லீக் A குழுவில் ஆதிக்கம் செலுத்தும் சிலாபம் மேரியன்ஸ் அணி தனது நான்காவது வெற்றியை பெற்று அதிக புள்ளி இடைவெளியுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இந்த போட்டியில் தோற்ற தமிழ் யூனியன், தனது ஆறு குழுநிலை போட்டிகளும் முடிவுற்ற நிலையில் ஒரு வெற்றியுடன் 3 ஆவது இடத்தில் உள்ளது.

லக்ஷான், கமிந்துவின் அபார ஆட்டத்தால் இலங்கைக்கு முதல் வெற்றி

கொழும்பு பி சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் சிலாபம் மேரியன்ஸ் அணிக்கு 207 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டதோடு 4 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி இலக்கை எட்டியது. ஓஷத பெர்னாண்டோ ஆட்டமிழக்காது 88 ஓட்டங்களை பெற்றார். இந்த தொடரில் மொத்தம் 545 ஓட்டங்களை பெற்றிருக்கும் அவர் அதிக ஓட்டங்களைப் பெற்றவர் வரிசையில் 2 ஆவது இடத்தில் காணப்படுகிறார்.

போட்டியின் சுருக்கம்  

தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 305 (81.2) – தனஞ்சய டி சில்வா 72, யொஹான் மெண்டிஸ் 61, ரங்கன ஹேரத் 45, ஜீவன் மெண்டிஸ் 42, ரமித் ரம்புக்வெல்ல 22, அசித பெர்னாண்டோ 4/51, சச்சித்ர சேரசிங்க 3/68, ஷெஹான் ஜயசூரிய 2/76

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 296 (67.1) – ஓஷத பெர்னாண்டோ 81, சச்சித்ர சேரசிங்க 65, இசுரு உதான 44, ரங்கன ஹேரத் 3/62, ஜீவன் மெண்டிஸ் 3/80

தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 197 (58.1) – மனோஜ் சரத்சந்திர 63, சிதார கிம்ஹான 61, மலிந்த புஷ்பகுமார 4/86, சச்சித்ர சேரசிங்க 2/09

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 207/4 (31.4) – ஷெஹான் ஜயசூரிய 62, ஓஷத பெர்னாண்டோ 88*, ரங்கன ஹேரத் 2/51, தஞ்சய டி சில்வா 2/60

முடிவு – சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 6 விக்கெட்டுகளால் வெற்றி


NCC எதிர் இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம்

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் NCC அணி நிர்ணயித்த 220 ஓட்ட வெற்றி இலக்கை எட்டி இலங்கை துறைமுக அதிகாரசபை அணி 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

இதன்படி வெற்றிபெற மேலும் 91 ஓட்டங்கள் மாத்தரம் தேவைப்படும் நிலையில் கடைசி நாளில் தனது இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த துறைமுக அதிகாரசபை அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து அந்த இலக்கை எட்டியது.

B குழுவில் ஆடும் துறைமுக அதிகாரசபை அணி பெறும் இரண்டாவது வெற்றி இதுவாகும்.

போட்டியின் சுருக்கம்

NCC (முதல் இன்னிங்ஸ்) – 220 (55.1) – மஹேல உடவத்த 54, லஹிரு குமார 47, அஞ்செலோ பெரேரா 42, மாலிங்க அமரசிங்க 29, லசித் அம்புல்தெனிய 24*, மதுக லியனபதிரனகே 5/52, சானக்க கோமசாரு 3/78  

இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 121 (40.5) – அகலங்க கனேகம 24*, லஹிரு குமார 2/28, லசித் அம்புல்தெனிய 2/28

NCC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 120 (30.5) – சச்சிந்த பீரிஸ் 27*, சானக்க கோமசாரு 7/49, நலீன் பிரியதர்ஷன 3/48

இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 220/6 (76.1) – இஷான் ரங்கன 51, கயான் மனீஷன் 46, மதுக லியனபதிரணகே 45, சச்சிந்த பீரிஸ் 2/48, லஹிரு குமார 2/35

முடிவு – இலங்கை துறைமுக அதிகாரசபை கிரிக்கெட் கழகம் 4 விக்கெட்டுகளால் வெற்றி


கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் செரசன்ஸ் விளையாட்டுக் கழகம்

அணித்தலைவர் டில்ருவன் பெரேரா மற்றும் பிரபாத் ஜயசூரியவின் சிறப்பான பந்துவீச்சின் மூலம் செரசன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக கோல்ட்ஸ் கழகம் 226 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் செரசன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு 372 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டபோதும் அந்த அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 145 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன்போது டில்ருவன் பெரேரா 5 விக்கெட்டுகளையும், பிரபாத் ஜயசூரிய 4 விக்கெட்டுகளையும் பதம்பார்த்தனர்.

இன்னிங்ஸ் வெற்றியை சுவைத்த புனித அந்தோனியார், திரித்துவக் கல்லூரிகள்

இந்த வெற்றியுடன் A குழுவில் 6 ஆவது இடத்தில் இருந்த கோல்ட்ஸ் அணி முன்னேற்றம் கண்டுள்ளது.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 246 (79.3) – பிரியமால் பெரேரா 92, அவிஷ்க பெர்னாண்டோ 72, சதீர சமரவிக்ரம 31, ரொஷான் ஜயதிஸ்ஸ 5/51, சதுர ரந்துனு 3/78, சச்சித்ர பெரேரா 2/48

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 152 (55) – பிரமோத் மதுவந்த 38, கவிஷ்க அஞ்சுல 4/38, பிரபாத் ஜயசூரிய 3/42, மொஹமட் ஷிராஸ் 2/28   

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 277 (85.5) – டில்ருவன் பெரேரா 52, விஷாத் ரந்திக்க 50, சதீர சமரவிக்ரம 35, சங்கீத் குரே 34, கவிஷ்க அஞ்சுல 35, சதுர ரந்துனு 5/107, ரொஷான் ஜயதிஸ்ஸ 3/56

செரசன்ஸ் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 145 (44.1) – தனுக்க தாபரே 52, ஹர்ஷ குரே 27, டில்ருவன் பெரேரா 5/46, பிரபாத் ஜயசூரிய 4/63

முடிவு – கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 226 ஓட்டங்களால் வெற்றி


இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம் எதிர் பதுரெலிய விளையாட்டுக் கழகம்

இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகத்தை 6 விக்கெட்டுகளால் வெற்யீட்டிய பதுரெலிய விளையாட்டுக் கழகம் பிரீமியர் லீக் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. B குழுவில் 5 ஆவது இடத்திற்கு முன்னேறிய பதுரெலிய விளையாட்டுக் கழகம் முன்னர் விளையாடிய நான்கு போட்டிகளில் இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் மக்கொன சர்ரே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் பதுரெலிய அணிக்கு 126 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டபோதும் ஆட்டம் மழையால் சற்று நேரம் தடைப்பட்டது. எனினும் பதுரெலிய விளையாட்டுக் கழகம் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

போட்டியின் சுருக்கம்     

இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 152 (51) – அஷான் ரந்திக்க 30, ஜனித் சில்வா 27*, டில்ஷான் டி சொய்சா 24, நட்ராஸ் பிரசாத் 5/41, டிலேஷ் குணரத்ன 4/36

பதுரெலிய விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 248 (82) – சன்ஜய சதுரங்க 69, ரமிந்து டி சில்வா 65, பதும் நிஸ்ஸங்க 49, டில்ஹான் குரே 31, மல்க மதுஷங்க 5/41, ஜானக்க சம்பத் 3/49

இலங்கை இராணுவப்படை விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 221 (65) – துஷான் விமுக்தி 46, ஜானக்க சம்பத் 39, ஜனித் சில்வா 37, அலங்கார அசங்க 4/91, நட்ராஸ் பிரசாத் 3/54

பதுரெலிய விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 126/4 (39.2) – பதும் நிஸ்ஸங்க 60*, ஷிரான் ரத்னாயக்க 29, மல்க மதுஷங்க 2/37

முடிவு – பதுரெலிய விளையாட்டுக் கழகம் 6 விக்கெட்டுகளால் வெற்றி


ராகம கிரிக்கெட் கழகம் எதிர் சோனகர் விளையாட்டுக் கழகம்

ராகம கிரிக்கெட் கழகம் நிர்ணயித்த சவாலான வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்சை ஆடிய சோனகர் விளையாட்டுக் கழகம் விக்கெட்டுகளை காத்துக் கொண்டு போட்டியை வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடித்தது.

தனது சொந்த மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் சோனகர் அணிக்கு 457 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிணயிக்கப்பட்ட நிலையில் கடைசி நாள் ஆட்டநேர முடிவின் போது அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களை பெற்றிருந்தது.

கட்புலனற்றோர் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி புதிய உலக சாதனை

தனது இரண்டாவது இன்னிங்சிலும் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ராகம கிரிக்கெட் கழகத்திற்கு லஹிரு மிலந்த ஆட்டமிழக்காது 150 ஓட்டங்களை பெற்றார்.

போட்டியின் சுருக்கம்

ராகம கிரிக்கெட் கழகம (முதல் இன்னிங்ஸ்) – 380 (83) – லஹிரு மிலந்த 112, ஜனித் லியனகே 97, இஷான் ஜயரத்ன 63, ரொஷேன் சில்வா 37, தரிந்து ரத்னாயக்க 3/93, கோசல குலசேகர 2/32, சஜீவ வீரகோன் 2/95

சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 241 (60) – சாமர சில்வா 121, பபசர வடுகே 29, அமில அபொன்சோ 6/79, நிஷான் பீரிஸ் 2/41

ராகம கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 317/5d (70) – லஹிரு மிலந்த 150*, உதார ஜயசுந்தர 44, ரொஷேன் சில்வா 38, சமிந்த பெர்னாண்டோ 36, நிலங்க சந்தகன் 3/103, தரிந்து ரத்னாயக்க 2/69

சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 132/7 (36) –  பபசர வடுகே 69, சஹான் நாணயக்கார 3/42

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது  


கொழும்பு கிரிக்கெட் கழகம் (CCC) எதிர் ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம்  

முதல் இன்னிங்சில் இரு அணிகளும் துடுப்பாட்டத்தில் சோபித்ததால் கொழும்பு கிரிக்கெட் கழகம் மற்றும் ப்ளூம்பீல்ட் அணிகளுக்கு இடையிலான போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றது.

கொழும்பு ப்ளூம்பீல்ட் கழக மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் கடைசி நாளில் தனது முதல் இன்னிங்சைத் தொடர்ந்த ப்ளூம்பீல்ட் 334 ஓட்டங்களை பெற்றது. தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த கொழும்பு கிரிக்கெட் கழகம் ஆட்ட நேர முடிவின் போது 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 310 ஓட்டங்களை குவித்தது.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 445 (90.3) – சச்சித் பத்திரண 168, மாதவ வர்ணபுர 85, மலித் டி சில்வா 5/116, ரமேஷ் மெண்டிஸ் 2/84

ப்ளூம்பீல்ட் கிரிக்கெட் மற்றும் மெய்வல்லுனர் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 334 (100.3) – பிரமுத் ஹெட்டிவத்த 78, நிசல் பிரான்சிஸ்கோ 72, நிபுன் கருனநாயக்க 54, ரமேஷ் மெண்டிஸ் 46, சச்சித் பதிரண 4/91, அஷான் பிரியஞ்சன் 3/49

கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 310/8 (58.2) – கவீன் பண்டார 85, சச்சித் பதிரண 84, லஹிரு மதுஷங்க 52*, லஹிரு சமரகோன் 4/75, மலித் டி சில்வா 3/56

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது