Home Tamil திமுத், ஓசதவின் அரைச்சதங்களோடு வலுப்பெறும் இலங்கை கிரிக்கெட் அணி

திமுத், ஓசதவின் அரைச்சதங்களோடு வலுப்பெறும் இலங்கை கிரிக்கெட் அணி

135
Sri Lanka tour of Bangladesh 2022 - 2nd Test Day 2

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நிறைவில், இலங்கை அணி திமுத் கருணாரட்ன மற்றும் ஓசத பெர்னாண்டோ ஆகியோரின் அரைச்சதங்களுடன் வலுவான நிலை ஒன்றினை நோக்கி நகர்கின்றது.

>> பங்களாதேஷை சரிவில் இருந்து மீட்ட தாஸ் – ரஹீம் ஜோடி

நேற்று (23) டாக்காவில் ஆரம்பித்த இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்திருந்த பங்களாதேஷ் அணி, முதல் நாள் ஆட்டநிறைவில் லிடன் தாஸ் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் ஆகியோரின் அபார சதங்களோடு 277 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காது நின்ற லிடன் தாஸ் 135 ஓட்டங்களையும், முஷ்பிகுர் ரஹீம் 115 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

இன்று போட்டியின் இரண்டாம் நாளில் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை முன்னெடுத்த பங்களாதேஷ் அணிக்கு ஆரம்பத்திலேயே கசுன் ராஜித நெருக்கடி உருவாக்க லிடன் தாஸ் தனது விக்கெட்டினைப் பறிகொடுத்தார். அதன்படி பங்களாதேஷ் அணியின் ஆறாம் விக்கெட்டாக பிடியெடுப்பில் ஆட்டமிழந்த லிடன் தாஸ் 16 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 141 ஓட்டங்களை எடுத்திருந்ததோடு, பங்களாதேஷ் அணியின் ஆறாம் விக்கெட்டுக்காக 272 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

லிடன் தாஸின் விக்கெட்டின் பின்னர் பங்களாதேஷ் அணி சடுதியாக விக்கெட்டுக்களைப் பறிகொடுத்த போதும் முஷ்பிகுர் ரஹீம் தனது தரப்பிற்கு பெறுமதி சேர்த்தார். தொடர்ந்து இரண்டாம் நாளின் மதிய போசண இடைவேளையின் பின்னர் பங்களாதேஷ் அணி 116.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து, 365 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்ஸிற்காகப் பெற்றது.

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் இறுதிவரை ஆட்டமிழக்காது காணப்பட்ட முஷ்பிகுர் ரஹீம் 21 பௌண்டரிகள் அடங்கலாக 175 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

>> IPL தொடரிலிருந்து நேரடியாக இலங்கை வந்து சதமடித்த பானுக

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் கசுன் ராஜித 64 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி டெஸ்ட் போட்டிகளில் தனது சிறந்த பந்துவீச்சு பிரதியினைப் பதிவு செய்திருக்க, அசித பெர்னாண்டோ 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த இலங்கை அணிக்கு ஓசத பெர்னாண்டோ மற்றும் திமுத் கருணாரட்ன ஆகியோர் இரண்டாம் நாளின் தேநீர் இடைவேளை வைர சிறந்த ஆரம்பத்தினை வழங்கினர்.

இதனையடுத்து இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக இபாடொட் ஹொசைனின் பந்துவீச்சில் பிடியெடுப்பு மூலமாக ஆட்டமிழந்த ஓசத பெர்னாண்டோ தன்னுடைய 5ஆவது டெஸ்ட் அரைச்சதத்துடன் ஒரு சிக்ஸர் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 57 ஓட்டங்கள் எடுத்தார். அத்துடன் ஓசத பெர்னாண்டோ இலங்கை அணியின் முதல் விக்கெட்டுக்காக 95 ஓட்டங்களை திமுத் கருணாரட்னவுடன் இணைப்பாட்டமாக பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து புதிய துடுப்பாட்டவீரராக வந்த குசல் மெண்டிஸ் 11 ஓட்டங்கள் மாத்திரம் எடுத்து ஆட்டமிழந்த போதும், திமுத் கருணாரட்ன மறுமுனையில் அரைச்சதம் பெற்று இலங்கைத் தரப்பினை வலுப்படுத்தினார்.

திமுத் கருணாரத்னவின் அரைச்சதத்தோடு இலங்கை அணி போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது 143 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது.

இலங்கை அணி தற்போது பங்களாதேஷினை விட 222 ஓட்டங்கள் பின்தங்கியிருக்க களத்தில் ஆட்டமிழக்காது நிற்கும் திமுத் கருணாரட்ன 70 ஓட்டங்களுடனும், Night Watchman ஆக துடுப்பாட வந்திருக்கும் கசுன் ராஜித ஓட்டமேதுமின்றியும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் இபடொட் ஹொசைன் மற்றும் சகீப் அல் ஹஸன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.

போட்டியின் சுருக்கம்


Result


Sri Lanka
506/10 (165.1) & 28/0 (3)

Bangladesh
365/9 (116.2) & 162/10 (55.3)

Batsmen R B 4s 6s SR
Mahmudul Hasan Joy  b Kasun Rajitha 0 2 0 0 0.00
Tamim Iqbal c Praveen Jayawickrama b Asitha Fernando  0 4 0 0 0.00
Najmul Hossain Shanto b Kasun Rajitha 8 21 1 0 38.10
Mominul Haque c Niroshan Dickwella b Asitha Fernando  9 9 2 0 100.00
Mushfiqur Rahim not out 175 355 21 0 49.30
Shakib Al Hasan (vc) lbw b Kasun Rajitha 0 1 0 0 0.00
Liton Das c Kusal Mendis b Kasun Rajitha 141 246 16 1 57.32
Mosaddek Hossain c Niroshan Dickwella b Kasun Rajitha 0 3 0 0 0.00
Taijul Islam c Niroshan Dickwella b Asitha Fernando  15 37 0 0 40.54
Khaled Ahmed c Niroshan Dickwella b Asitha Fernando  0 2 0 0 0.00
Ebadot Hossain not out 0 20 0 0 0.00


Extras 17 (b 9 , lb 3 , nb 2, w 3, pen 0)
Total 365/9 (116.2 Overs, RR: 3.14)
Fall of Wickets 1-1 (0.2) Mahmudul Hasan Joy , 2-6 (1.4) Tamim Iqbal, 3-16 (5.1) Mominul Haque, 4-24 (6.4) Najmul Hossain Shanto, 5-24 (6.5) Shakib Al Hasan (vc), 6-296 (92.1) Liton Das, 7-296 (92.4) Taijul Islam, 8-349 (107.1) Khaled Ahmed,

Bowling O M R W Econ
Kasun Rajitha 28.2 7 64 5 2.27
Asitha Fernando  26 2 93 4 3.58
Praveen Jayawickrama 38 9 108 0 2.84
Ramesh Mendis 14 0 53 0 3.79
Dhananjaya de Silva 6 0 27 0 4.50
Dimuth Karunarathne 4 1 8 0 2.00
Batsmen R B 4s 6s SR
Oshada Fernando c Najmul Hossain Shanto b Ebadot Hossain 57 91 8 1 62.64
Dimuth Karunarathne b Shakib Al Hasan (vc) 80 155 9 0 51.61
Kusal Mendis lbw b Shakib Al Hasan (vc) 11 49 0 0 22.45
Kasun Rajitha b Ebadot Hossain 0 12 0 0 0.00
Angelo Mathews not out 145 342 12 2 42.40
Dhananjaya de Silva c Liton Das b Shakib Al Hasan (vc) 58 95 9 0 61.05
Dinesh Chandimal c Tamim Iqbal b Ebadot Hossain 124 219 11 1 56.62
Niroshan Dickwella c Liton Das b Shakib Al Hasan (vc) 9 10 1 0 90.00
Ramesh Mendis lbw b Ebadot Hossain 10 11 2 0 90.91
Praveen Jayawickrama c Liton Das b Shakib Al Hasan (vc) 0 3 0 0 0.00
Asitha Fernando  run out (Shakib Al Hasan (vc)) 2 6 0 0 33.33


Extras 10 (b 0 , lb 8 , nb 2, w 0, pen 0)
Total 506/10 (165.1 Overs, RR: 3.06)
Fall of Wickets 1-95 (25.5) Oshada Fernando, 2-139 (43.1) Kusal Mendis, 3-144 (46.2) Kasun Rajitha, 4-164 (55.6) Dimuth Karunarathne, 5-266 (87.5) Dhananjaya de Silva, 6-465 (156.6) Dinesh Chandimal, 7-501 (162.5) Ramesh Mendis, 8-502 (163.3) Praveen Jayawickrama, 9-506 (165.1) Asitha Fernando , 10-482 (192.5) Niroshan Dickwella,

Bowling O M R W Econ
Khaled Ahmed 23 1 85 0 3.70
Ebadot Hossain 38 4 148 4 3.89
Shakib Al Hasan 40.1 11 96 5 2.39
Mosaddek Hossain 12 1 38 0 3.17
Taijul Islam 49 10 124 0 2.53
Mominul Haque 3 0 7 0 2.33
Batsmen R B 4s 6s SR
Mahmudul Hasan Joy  c Kusal Mendis b Asitha Fernando  15 27 3 0 55.56
Tamim Iqbal c Kusal Mendis b Asitha Fernando  0 11 0 0 0.00
Najmul Hossain Shanto run out (Praveen Jayawickrama) 2 11 0 0 18.18
Mominul Haque c Niroshan Dickwella b Kasun Rajitha 0 2 0 0 0.00
Mushfiqur Rahim b Kasun Rajitha 23 39 4 0 58.97
Liton Das c & b Asitha Fernando  52 135 3 0 38.52
Shakib Al Hasan (vc) c Niroshan Dickwella b Asitha Fernando  58 72 7 0 80.56
Mosaddek Hossain lbw b Ramesh Mendis 9 22 1 0 40.91
Taijul Islam lbw b Asitha Fernando  1 10 0 0 10.00
Ebadot Hossain not out 0 5 0 0 0.00
Khaled Ahmed b Asitha Fernando  0 1 0 0 0.00


Extras 2 (b 0 , lb 1 , nb 0, w 1, pen 0)
Total 162/10 (55.3 Overs, RR: 2.92)
Fall of Wickets 1-19 (3.2) Mominul Haque, 2-15 (5.1) Tamim Iqbal, 3-19 (7.2) Najmul Hossain Shanto, 4-23 (9.1) Mahmudul Hasan Joy , 5-53 (20.3) Mushfiqur Rahim, 6-156 (47.5) Liton Das, 7-163 (51.1) Shakib Al Hasan (vc), 8-169 (52.2) Taijul Islam, 9-169 (54.1) Mosaddek Hossain, 10-169 (55.3) Khaled Ahmed,

Bowling O M R W Econ
Kasun Rajitha 12 5 40 2 3.33
Asitha Fernando  17.3 5 51 6 2.95
Praveen Jayawickrama 13 0 47 6 3.62
Ramesh Mendis 11 2 20 1 1.82
Dhananjaya de Silva 2 0 10 0 5.00


Batsmen R B 4s 6s SR
Oshada Fernando not out 21 9 3 1 233.33
Dimuth Karunaratne not out 7 9 1 0 77.78


Extras 0 (b 0 , lb 0 , nb 0, w 0, pen 0)
Total 28/0 (3 Overs, RR: 9.33)
Bowling O M R W Econ
Taijul Islam 1 0 16 0 16.00
Shakib Al Hasan 1 0 7 0 7.00
Ebadot Hossain 1 0 5 0 5.00



போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க  <<