தமிழ் யூனியன் கழகத்துக்காக சதமடித்த சதீர, நவோத்

SLC Major League Tournament 2022

136

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் மூன்று நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரின் 13ஆவது வாரத்துக்கான 12 போட்டிகள் இன்று (11) ஆரம்பமாகின.

இதில் நுகேகொட விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான போட்டியில் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்தின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான நவோத் பரணவிதான (147 ஓட்டங்கள்) மற்றும் அணித்தலைவர் சதீர சமரவிக்ரம (151 ஓட்டங்கள்) ஆகிய இருவரும் சதமடித்து அசத்தியிருந்தனர்.

இலங்கை தேசிய அணி வீரரான சதீர சமரவிக்ரம இம்முறை மேஜர் லீக்கில் குவித்த 4ஆவது சதம் இதுவாகும். அத்துடன், இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 942 ஓட்டங்களைக் குவித்து அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இதுதவிர, 20 வயது இடது கை துடுப்பாட்ட வீரரான நவோத் பரணவிதான, தன்னுடைய 2ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார். இம்முறை மேஜர் பிரீமியர் லீக்கில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 4 அரைச் சதங்கள் உள்ளடங்கலாக 846 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

இதனிடையே, பொலிஸ் விளையாட்டுக் கழகத்துடனான போட்டியில் கண்டி சுங்க விளையாட்டுக் கழகத்தின் இரோஷ் சமரசூரிய (103 ஓட்டங்கள்) சதமடித்தார். முதல்தரப் போட்டிகளில் அவரது 9ஆவது சதம் இதுவாகும்.

இந்த நிலையில், போட்டிகளின் முதல் நாளான இன்றைய தினம் 11 அரைச் சதங்கள் குவிக்கப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அனைத்துப் போட்டிகளினதும் இரண்டாவது நாள் ஆட்டம் நாளை (12) நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் நுகேகொட விளையாட்டுக் கழகம்

  • தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 395/5 (90) – சதீர சமரவிக்ரம 151, நவோத் பரணவிதான 147, சந்தூஷ் குணதிலக 28*, கரன் கைலா 3/114

ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் எதிர் Ace Capitals விளையாட்டுக் கழகம்

  • ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 182/6 (58) – ஹஸ்னைன் பொக்ஹாரி 41, லஹிரு மதுஷங்க 38, ஹர்ஷ விதான 32*, மலித் டி சில்வா 2/64

பதுரெலிய கிரிக்கெட் கழகம் எதிர் பாணந்துறை விளையாட்டுக் கழகம்

  • பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 254/8 (80.2) – துனித் ஜயதுங்க 77, ரனேஷ் சில்வா 58, அனுக் பெர்னாண்டோ 46, நிமேஷ் விமுக்தி 4/95, கோஷான் தனுஷ்க 2/41

BRC கழகம் எதிர் களுத்துறை நகர கழகம்

  • BRC கழகம் – 237 (54) – துஷான் ஹேமன்த 53, லஹிரு சமரகோன் 46, திலகரடன் சம்பத் 42, தேமால் பண்டார 4/68, சாரங்க ராஜகுரு 2/44, இஷான் அபேசேகர 2/51
  • களுத்துறை நகர கழகம் – 118/6 (40) – சவன் கன்கானம்கே 32, சதுர பீரிஸ் 29*, மாதவ நிமேஷ் 20, திலகரட்ன சம்பத் 3/34, சச்சின்த பீரிஸ் 2/41

முவர்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம்

  • முவர்ஸ் விளையாட்டுக் கழகம் – 280/3 (73) – சொஹான் டி லிவேரா 88, தினுக டில்ஷான் 77, பசிந்து சூரியபண்டார 74, ரமேஷ் மெண்டிஸ் 39*

லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்

  • லங்கன் கிரிக்கெட் கழகம் – 167/9 (90) – இசிவர திஸாநாயக 48*, கீத் குமார 31, ரகு சர்மா 4/53, சதுர லக்ஷான் 3/46

கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம்

  • கடற்படை விளையாட்டுக் கழகம் – 14/1 (4.3)

NCC கழகம் எதிர் சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட்

  • NCC கழகம் – 304 (64.5) – ஜொஹான்னே டி சில்வா 60, சந்துன் வீரக்கொடி 51, லசித் எம்புல்தெனிய 46, அஹான் விக்ரமசிங்க 31, லசித் லக்ஷான் 4/135, ரஜிந்த புன்சிஹேவா 3/23, புலின தரங்க 2/45
  • சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 70/4 (24) – கசுன் விதுர 34*

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்

  • சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் – 17/2 (7.1)

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

  • கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 295/6 (90) – இரோஷ் சமரசூரிய 103, ஹர்ஷ ராஜபக்ஷ 79, சானக விஜேசிங்க 33*, சுபுன் மதுசங்க 2/42

ராகம கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம்

  • ராகம கிரிக்கெட் கழகம் – 112 (37.4) – தெவிந்து டிக்வெல்ல 26, ஜனித் லியனகே 21, டெல்லோன் பீரிஸ் 18, சொனால் தினூஷ 4/44, அசித பெர்னாண்டோ 3/16
  • கொழும்பு கிரிக்கெட் கழகம் – 119/4 (42.2) – லசித் அபேரட்ன 53, சமிந்து விஜேசிங்க 41, சஷிக துலான் 4/37

செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் SSC கழகம்

  • செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 314/5 (82) – சச்சித ஜயதிலக 98*, இஷான் ரங்கன 79*, நிசல தாரக 3/74

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<