முவர்ஸ் கழகத்துக்காக சகலதுறையிலும் பிரகாசித்த ரமேஷ் மெண்டிஸ்

SLC Major League Tournament 2022

157

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் மூன்று நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரின் 12ஆவது வாரத்துக்கான 12 போட்டிகளின் 2ஆவது நாள் ஆட்டங்கள் நேற்று (04) நிறைவுக்கு வந்தன.

நாட்டில் பெய்து வருகின்ற மழை காரணமாக பெரும்பாலான போட்டிகள் தடைப்பட்டாலும், ஒருசில போட்டிகள் நடைபெற்றன.

முவர்ஸ் கழகத்துக்காக சகலதுறையிலும் பிரகாசித்து வருகின்ற அதன் தலைவர் ரமேஷ் மெண்டிஸ், செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சில் 62 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் துடுப்பாட்டத்திலும் ஜொலித்த அவர் நேற்றைய இரண்டாவது நாள் நிறைவுக்கு வரும் போது ஆட்டமிழக்காமல் 49 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

இம்முறை மேஜர் பிரீமியர் லீக்கில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள ரமேஷ் மெண்டிஸ், 2 சதங்கள் மற்றும் 3 அரைச் சதங்களையும், பந்துவீச்சில் 3 தடவைகள் 5 விக்கெட் குவியலையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

ட்டுக் கழகத்துக்காக விளையாடி வருகின்ற சீக்குகே பிரசன்ன, விமானப்படை விளையாட்டுக் கழகத்துக்கு எதிரான போட்டியில் 71 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முன்னதாக கடந்த வாரம் நடைபெற்ற சிலாபம் மேரியன்ஸ் கழகத்துடனான போட்டியிலும் அவர் 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கடற்படை கழகத்துக்கு எதிரான போட்டியில் அரைச் சதமடித்த சரசென்ஸ் விளையாட்டுக் கழகத்தின் அணித்தலைவர் மிலிந்த சிறிவர்தன முதல்தரப் போட்டிகளில் 8 ஆயிரம் ஓட்டங்கள் மைல்கல்லை எட்டினார்.

இது இவ்வாறிருக்க, ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகத்தின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் யொஹான் டி சில்வா (111 ஓட்டங்கள்) பதுரெலிய கழகத்துடனான போட்டியில் சதமடித்தார். அத்துடன், முவர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் சொஹான் டி லிவேரா (125) மற்றும் NCC கழகத்தின் லஹிரு உதார (100) ஆகிய 2 வீரர்களும்  சதங்களைக் குவித்தனர்.

அதுமாத்திரமின்றி, போட்டிகளின் முதல் இரண்டு நாட்களில் 23 அரைச் சதங்கள் குவிக்கப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேவேளை, பந்துவீச்சைப் பொறுத்தமட்டில் கண்டி சுங்க விளையாட்டு கழகத்தின் சச்சித்ர பெரேரா (5/61), பொலிஸ் விளையாட்டுக் கழகத்தின் நளின் ப்ரியதர்ஷன (6/72), Ace capitals கிரிக்கெட் கழகத்தின் ரொஷான் ஜயதிஸ்ஸ (5/21), லங்கன் கிரிக்கெட் கழகத்தின் மிரங்க விக்ரமகே (7/65) மற்றும் விமானப்படை விளையாட்டுக் கழகத்தின் மொவின் சுபசிங்க (5/78) ஆகியோர் 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்தனர்.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகம் மற்றும் BRC கழகத்துக்கு இடையிலான போட்டியும், பாணந்துறை விளையாட்டுக் கழகம் மற்றும் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகத்துக்கு இடையிலான போட்டியும் இரண்டாவது நாளாக ஒரு பந்து கூட வீசப்படவில்லை.

அனைத்துப் போட்டிகளினதும் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று (06) நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் முவர்ஸ் விளையாட்டுக் கழகம்

  • செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் – 197 (52.3) – தரூஷ பெர்னாண்டோ 44, லொஹான் டி சொய்சா 39, சந்துன் பெர்னாண்டோ 36, ரமேஷ் மெண்டிஸ் 5/62, திலங்க உதேஷன 3/35, தீசன் விதுஷன் 2/32
  • முவர்ஸ் விளையாட்டுக் கழகம் – 325/6 (87) – சொஹான் டி லிவேரா 125, பசிந்து சூரியபண்டார 62, ரமேஷ் மெண்டிஸ் 49*, மொஹமட் சமாஸ் 26, தரிந்து ரத்நாயக 3/127

லங்கன் கிரிக்கெட் கழகம் எதிர் கண்டி சுங்க விளையாட்டுக் கழகம்

  • லங்கன் கிரிக்கெட் கழகம் – 210 (89) – இஷிவர திஸாநாயக 85, பிரசன்ன ஜயமான்ன 45, கீத் குமார 37, சச்சித்ர பெரேரா 5/61, சஹன் அதீஷ 2/30
  • கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 236/9 (64.1) – இயென் தேவ் சிங் 66, மிதுன் ஜயுவிக்ரம 63, சானக விஜேசிங்க 42*, இமேஷ் உதயங்க 22, மிரங்க விக்ரமகே 7/65

SSC கழகம் எதிர் காலி கிரிக்கெட் கழகம்

  • SSC கழகம் – 247/4 (71) – நுவனிது பெர்னாண்டோ 67, க்ரிஷான் சன்ஜுல 63, நிபுன் தனன்ஜய 60, கவிந்து எதிரிவீர 2/17

கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

  • கொழும்பு கிரிக்கெட் கழகம் – 191 (58.2) – சமிந்து விஜேசிங்க 68, பவன் பத்திரன 51, சொனால் தினூஷ 24, மினோத் பானுக 22, நளின் ப்ரியதர்ஷன 6/72, மன்ஜுல ஜயவர்தன 4/29
  • பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 116 (38.5) – நதீர பாலசூரிய 25, நிபுன காரியவசம் 23, மாலிந்த புஷ்பகுமார 5/53
  • கொழும்பு கிரிக்கெட் கழகம் – 224/5 (57) – பவன் பதிராஜ 71, சமிந்து விஜேசிங்க 64*, மினோத் பானுக 31, நிமேஷ குணசிங்க 25, சதுர ரன்துனு 3/68

ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் எதிர் பதுரெலிய கிரிக்கெட் கழகம்

  • ப்ளும்பீல்ட் கிரிக்கெட் கழகம் – 400/9d (116.3) – யொஹான் டி சில்வா 111, மதுக லியனபத்திரனகே 56*, கஜித கொடுவேகொட 42, ஹஸ்னைன் பொக்ஹாரி 40, சரித குமாரசிங்க 31, நிர்மல ரத்நாயக 2/60, புத்திக சன்ஜீவ 2/66, சலன டி சில்வா 2/110
  • பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 31/0 (6) – மலிந்து மதுரங்க 23*

விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் இராணுவ விளையாட்டுக் கழகம்

  • விமானப்படை விளையாட்டுக் கழகம் – 204 (48.1) – கசுன் ஏகநாயக 33, சுபேஷல ஜயதிலக 48, மொவின் சுபசிங்க 24, ரொஸ்கோ தட்டில் 21, சீக்குகே பிரசன்ன 6/71
  • இராணுவ விளையாட்டுக் கழகம் – 309 (83) – அசேல குணரட்ன 72, ஹிமாஷ லியனகே 54, மஹேஷ் குமார 52, அஷான் ரன்திக 25, மொவின் சுபசிங்க 5/78, கயான் சிறிசோம 2/81

NCC கழகம் எதிர் Ace Capitals கிரிக்கெட் கழகம்

  • NCC கழகம் – 183 (41) – சஹன் ஆரச்சிகே 67, அஹான் விக்ரமசிங்க 34, கவின் பண்டார 32, ரொஷான் ஜயதிஸ்ஸ 5/21, வனுஜ சஹன் 3/39
  • Ace Capitals கிரிக்கெட் கழகம் – 151 (46.4) – ஹர்ஷ குரே 34, ப்ரமோத் ஹெட்டிவத்த 31, லசித் க்ரூஸ்புள்ளே 30, அம்ஷி டி சில்வா 3/20, லசித் எம்புல்தெனிய 3/41, டில்ஷான் நிபுனஜித் 3/43
  • NCC கழகம் – 198/1 (29) – லஹிரு உதார 100*, கவின் பண்டார 56, சந்துன் வீரக்கொடி 38*

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் நுகேகொட விளையாட்டுக் கழகம்

  • நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 284 (94.4) – ஜடின் சக்சேனா 97, பசிந்து லக்சங்க 64, அஞ்சலோ ஜயசிங்க 20, ரனித லியனாரச்சி 3/39, அரவிந்த ப்ரேமரத்ன 2/31
  • நுகேகொட விளையாட்டுக் கழகம் – 56/0 (18) – அபிஷேக் லியனாரச்சி 46*
  • சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம்
  • சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் – 278 (97) – நவிந்து விதானகே 89, ஹஷேன் ராமநாயக 55, மிலிந்த சிறிவர்தன 51, யுரான் நிமாஷ 4/90, வினோத் பெரேரா 3/34, நவின் கவிகார 3/86
  • கடற்படை விளையாட்டுக் கழகம் – 152/4 (51) – வினோத் பெரேரா 61*, மாலிங்க மாலிகஸ்பே 52

களுத்துறை நகர கழகம் எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

  • களுத்துறை நகர கழகம் – 5/4 (22.5) – அகில தனன்ஜய 3/28

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<