இலங்கை சபை பதினொரு பேர் அணிக்குப் படுதோல்வி

219
Sri Lankan XI v Australians

இலங்கை அவுஸ்திரேலிய அணிகள் மோதும் நீண்ட தொடர் ஆரம்பமாக முன் அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை சபை பதினொரு பேர் அணிகளுக்கு இடையிலான 3 நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டி கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.

போட்டியின் முதல் நாள்(18)  நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை சபை பதினொரு பேர் அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது. இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை சபை பதினொரு பேர் அணி தமது முதல்இனிங்ஸில்  சகல விக்கட்டுகளையும் இழந்து 229 ஓட்டங்களைப் பெற்றது. இதில் அசேல குணரத்ன 58 ஓட்டங்களையும், மிலிந்த சிறிவர்தன 53 ஓட்டங்களையும், சதுரங்க டி சில்வா 49 ஓட்டங்களையும் மற்றும் சகலதுறை வீரர் தசுன் ஷானக 39 ஓட்டங்களையும் பெற்றனர்.

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் ஸ்டீபன் கீஃப் 43 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளையும் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜெக்சன் பேர்ட் ஆகியோர் தலா 2 விக்கட்டுகள் வீதமும் வீழ்த்தினர்.

பின் தமது முதலாவது இனிங்ஸிற்காகத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி தமது முதல்இனிங்ஸில்  சகல விக்கட்டுகளையும் இழந்து 474 ஓட்டங்களைப் பெற்றது. அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டத்தில் ஜோ பர்ன்ஸ் 72 ஓட்டங்களையும் , ஸ்டீவன் ஸ்மித் 57 ஓட்டங்களையும், மிச்சல் ஸ்டார்க் 45 ஓட்டங்களையும்   மற்றும் ஸ்டீபன் கீஃப் 78 ஓட்டங்களை ஆட்டம் இழக்காமலும் பெற்றனர்.

Photos Album – Sri Lankan XI vs Australia – Tour Game Day – 3

இலங்கை அணியின் பந்துவீச்சில் ஷெஹான் ஜயசூரிய 110 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளையும் விமுக்தி பெரேரா 45 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளையும், நிசல தாரக, தசுன் ஷானக மற்றும் சதுரங்க டி சில்வா ஆகியோர் தலா ஒரு விக்கட் வீதமும் வீழ்த்தினர்.

பின்னர் 245 ஓட்டங்கள் பின்னிலையில்  இலங்கை சபை பதினொரு பேர் அணி தமது  2ஆவது இனிங்ஸை ஆரம்பித்தது. ஆரம்பம் முதலே இலங்கை சபை பதினொரு பேர் அணியின் விக்கட்டுகள் வேகமாக வீழ்ந்தன. இன்று பகல் போசணை இடைவேளைக்கு முன்னதாகவே இலங்கை சபை பதினொரு பேர் அணி 83 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன் மூலம் அவுஸ்திரேலிய அணி ஒரு இனிங்ஸ் மற்றும் 162 ஓட்டங்களால் அபார வெற்றியைப் பதிவு செய்தது. இலங்கை அணியின் 2ஆவது இனிங்ஸில் அதிகபட்சமாக ஷெஹான் ஜயசூரிய 29 ஓட்டங்களையும், அசேல குணரத்தன 23 ஓட்டங்களையும் டில்ஹார பெர்னாண்டோ 15 ஓட்டங்களையும் பெற்றனர். இவர்களைத் தவிர ஏனைய வீரர்கள் 6 ஓட்டங்களுக்கும் குறைவான ஓட்டங்களையே பெற்றார்கள். 2ஆவது இனிங்ஸில் அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் முதல் இனிங்ஸில் கலக்கிய கீஃப்  மீண்டும் ஒருமுறை அசத்தி 21 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளையும் மிட்செல் ஸ்டார்க் மற்றும் நேதன் லியொன் ஆகியோர் தலா 2 விக்கட்டுகள் வீதமும் வீழ்த்தினர்.

போட்டியின் சுருக்கம்

இலங்கை சபை அணி : 229/10

அசேல குணரத்ன 58, மிலிந்த சிறிவர்தன 53, சதுரங்க டி சில்வா 49, தசுன் ஷானக 39

ஸ்டீபன் கீஃப் 43/5, மிட்செல் ஸ்டார்க் 39/2, ஜெக்சன் பேர்ட், 26/2

அவுஸ்திரேலிய அணி : 474/10

ஜோ பர்ன்ஸ் 72, ஸ்டீபன் கீஃப் 78*, ஸ்டீவன் ஸ்மித் 57, மிச்சல் ஸ்டார்க் 45

ஷெஹான் ஜயசூரிய 110/5, விமுக்தி பெரேரா 45/2, நிசல தாரக 76/1

இலங்கை சபை அணி : 83/10

ஷெஹான் ஜயசூரிய 29, அசேல குணரத்தன 23, டில்ஹார பெர்னாண்டோ 15

ஸ்டீபன் கீஃப் 21/5, மிட்செல் ஸ்டார்க் 21/2, நேதன் லியொன் 14/2