அபார வெற்றியினைப் பதிவு செய்த கண்டி சுங்க கழக அணி

134

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) உள்ளூர் முன்னணி கிரிக்கெட் கழகங்கள் இடையே நடாத்தும் மேஜர் லீக் தொடரில் இன்று (24) மொத்தமாக 9 போட்டிகள் நிறைவுக்கு வந்தன.

இன்று நிறைவுக்கு வந்த போட்டிகளில் கண்டி சுங்க கிரிக்கெட் கழக அணிக்காக ஆடியிருந்த கயான் சிறிசோம தனது சுழல் பந்துவீச்சின் உதவியோடு தனது தரப்பு நீர்கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்கு எதிராக 35 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்ய உதவியிருந்தார். கயான் சிறிசோம நீர்கொழும்பு அணிக்கு எதிராக மொத்தமாக 8 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>உள்ளூர் லீக் தொடரில் திறமையினை வெளிப்படுத்திய மலிந்த புஷ்பகுமார

இதேநேரம் இன்று இடம்பெற்ற ஏனைய போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த வீரர்களில் சிலாபம் மேரியன்ஸ் அணியின் கசுன் விதுர, BRC அணியின் நிமன்த சுபாசிங்க மற்றும் தமிழ் யூனியன் அணியின் லசித் அபேய்ரத்ன ஆகியோர் சதங்களை விளாசியிருந்தனர். இவர்கள் ஒருபக்கமிருக்க தேசிய அணி வீரர்களில் நிரோஷன் டிக்வெல்ல NCC அணிக்காக அதிரடி அரைச்சதம் பெற்றதோடு 54 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 68 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

போட்டிகளின் சுருக்கம்

கண்டி சுங்க கிரிக்கெட் கழகம் – 117 (34) சஹான் கோசல 51, நிஷான் பீரிஸ் 3/24, சனுர பெர்னாண்டோ 3/28 & 221 (57) சதீஷ் ஜயவர்தன 45, உபுல் இந்திரசிறி 4/67, நிஷான் பீரிஸ் 3/63

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 131 (54.5) ஹிமாஷ லியனகே 30, கயான் சிறிசோம 4/34, புத்திக சஞ்சீவ 4/38 & 172 (59.5) ஹிமாஷ லியனகே 68, கயான் சிறிசோம 4/75

முடிவு போட்டி சமநிலை அடைந்தது 

சிலாபம் மேரியன்ஸ் – 321 (83.5) கசுன் விதுர 116, விஷ்வ சதுரங்க 53, தரிந்து அமரசிங்க 53, பிரவீன் ஜயவிக்ரம 4/76

மூர்ஸ் கிரிக்கெட் கழகம் – 195/4 (42.4) ஜனிஷ்க பெரேரா 96, பசிந்து சூரியபண்டார 74 

முடிவு போட்டி சமநிலை அடைந்தது 

BRC – 460/8d (124.2) நிமன்த சுபாசிங்க 100*, லக்ஷான் கமகே 77, றிசிர வீரசூரிய 74, சஹான் அதீஷ 3/101

கோல் கிரிக்கெட் கழகம் – 324/4 (83) புத்திக்க ஹஸரங்க 67, ஹர்ஷ விதான 64*

முடிவு போட்டி சமநிலை அடைந்தது

 

விமானப்படை வி.. – 205 (90) பிரவீன் டி சில்வா 68, தருஷ பெர்னாண்டோ 4/44

செபஸ்டினையட்ஸ் வி.. – 235/6 (85) நவின்து நிர்மால் 66, கீத் குமார 2/33

முடிவு போட்டி சமநிலை அடைந்தது

குருநாகல் இளையோர் – 257 (71.4) சனோஜ் தர்ஷிக்க 58, தமித் பெரேரா 57, சஹான குமார 4/101 & 79/2 (23) சமிட் கோஹேல் 31*, நிம்சார அத்தரகல 2/4

ஏஸ் கெபிடல் – 245 (83.2) பவன்த வீரசிங்க 91, அரவிந்த பிரேமரட்ன 3/24, தினுஷ்க மலான் 3/39, சானுக்க டில்சான் 3/5

முடிவு போட்டி சமநிலை அடைந்தது

புளூம்பீல்ட் – 131 (43.5) செய்யத் ஹூஸைன் புகாரி  52, மலிந்த புஷ்பகுமார 6/64

பொலிஸ் வி.. – 156 (41.1) அஷேன் பண்டார 42, சந்துன் வீரக்கொடி 4/32, சஹான் நாணயக்கார 4/48

முடிவு போட்டி சமநிலை அடைந்தது

தமிழ் யூனியன் – 339/8d (86.4) லசித் அபேய்ரத்ன 100*, ரொன் சந்திரகுப்தா 58, ரவிந்து பெர்னாண்டோ 56, விஜயகாந்த் வியாஸ்காந்த் 46, லசித் எம்புல்தெனிய 113/4

NCC – 130/2 (16.1) நிரோஷன் டிக்வெல்ல 68, லஹிரு உதார 53

முடிவு போட்டி சமநிலை அடைந்தது

இராணுவப்படை வி.க. – 330/7 (82.4) அசேல குணரட்ன 89, பெதும் குமார 77, கவிஷ்க அஞ்சுல 2/44

முடிவு போட்டி சமநிலை அடைந்தது

நுகேகொட வி.க. – 47/2 (15) சந்துஷ் குணத்திலக்க 2/24

முடிவு போட்டி சமநிலை அடைந்தது

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<