உள்ளூர் லீக் தொடரில் திறமையினை வெளிப்படுத்திய மலிந்த புஷ்பகுமார

768

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) உள்ளூர் கழக அணிகள் இடையே நடாத்தும் மேஜர் லீக் மூன்று நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இன்று (23) மொத்தமாக 7 போட்டிகள் நடைபெற்றிருந்தன.

மழையினால் பாதிக்கப்பட்ட SLC மேஜர் கழக தொடரின் முதல் நாள் போட்டிகள்

இன்று இடம்பெற்ற போட்டிகளில் பொலிஸ் விளையாட்டுக் கழக அணிக்காக ஆடியிருந்த இலங்கை கிரிக்கெட் அணியின் இடதுகை சுழல்வீரரான மலிந்த புஷ்பகுமார புளூம்பீல்ட் அணிக்கு எதிராக மிகச் சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்தியிருந்ததோடு, மொத்தமாக 64 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி சிறப்பாகச் செயற்பட்டிருந்தார்.

இதேநேரம் துடுப்பாட்டத்தினை எடுத்து நோக்கும் போது BRC அணியின் லக்ஷான் கமகே, ரிசிர வீரசூரிய மற்றும் நிமன்த சுபாசிங்க ஆகியோர் அரைச்சதங்களை விளாசியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதேநேரம் தமிழ் யூனியன் அணிக்காக ஆடியிருந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் 46 ஓட்டங்களைப் பெற்று சிறப்பாக செயற்பட்டிருந்தார்.

போட்டிகளின் சுருக்கம்

கண்டி சுங்க கிரிக்கெட் கழகம் – 117 (34) சஹான் கோசல 51, நிஷான் பீரிஸ் 3/24, சனுர பெர்னாண்டோ 3/28 & 221 (57) சதீஷ் ஜயவர்தன 45, உபுல் இந்திரசிறி 4/67, நிஷான் பீரிஸ் 3/63

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 131 (54.5) ஹிமாஷ லியனகே 30, கயான் சிறிசோம 4/34, புத்திக சஞ்சீவ 4/38 & 11/2 (3.2)

சிலாபம் மேரியன்ஸ் – 210/3 (47.1) கசுன் விதுர 82*, விஷ்வ சத்துரங்க  53, தரிந்து அமரசிங்க 53

BRC  – 382/7 (111) லக்ஷான் கமகே 77, றிசிர வீரசூரிய 74, நிமன்த சுபாசிங்க 58*, துலாஷ் உதயங்க 50, சஹான் அதீஷ 3/96

விமானப்படை வி.க. – 205 (90) பிரவீன் டி சில்வா 68, தருஷ பெர்னாண்டோ 4/44

செபஸ்டினையட்ஸ் வி.க. – 16/0 (12)

குருநாகல் இளையோர் – 257 (71.4) சனோஜ் தர்ஷிக்க 58, தமித் பெரேரா 57, சஹான குமார 4/101

ஏஸ் கெபிடல் – 123/6 (39) பவன்த வீரசிங்க 58*

புளூம்பீல்ட் – 131 (43.5) செய்யத் ஹூஸைன் புகாரி  52, மலிந்த புஷ்பகுமார 6/64,

பொலிஸ் வி.க. – 16/1 (6)

தமிழ் யூனியன் – 171/4 (42.1) ரொன் சந்தரகுப்தா 58, விஜயகாந்த் வியாஸ்காந்த் 46

அனைத்துப் போட்டிகளினதும் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<