2022 கட்டார் உலகக் கிண்ண கால்பந்து தொடரின் திகதி அறிவிப்பு

1142

எதிர்வரும் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 22ஆவது பிஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியை நடத்தும் பொறுப்பு ரஷ்யாவில் நடைபெற்ற எளிமையான நிகழ்ச்சியில் வைத்து, மத்திய கிழக்கு நாடான கட்டாரிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.  

மத்திய கிழக்கு நாடொன்றில் முதல்முறையாக அரங்கேறும் இந்த உலகக் கிண்ணப் போட்டிகள் வழக்கமான மே, ஜூன், ஜூலை மாதங்களில் இல்லாமல் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளமை சிறப்பம்சமாகும்.

2026 பிஃபா உலகக் கிண்ணம் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில்

எதிர்வரும் 2026ஆம் ஆண்டிற்கான பிஃபா உலகக்…

விளையாட்டு உலகின் மிகவும் பிரபல்யமிக்க விளையாட்டாக விளங்குகின்ற பிஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளின் 21ஆவது அத்தியாயம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) இரவு ரஷ்யாவில் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.

இந்த நிலையில், இன்னும் நான்கு வருடங்களில் நடைபெறவுள்ள அடுத்த உலகக் கிண்ண கால்பந்து திருவிழா எதிர்வரும் 2022ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளும் தற்போது மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.  

இதுஇவ்வாறிருக்க, மொஸ்கோவின் லுஸ்னிகி மைதானத்தில் நடைபெற்ற இம்முறை உலகக் கிண்ணத் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னர் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த உலகக் கிண்ணப் போட்டியை நடத்தும் பொறுப்பை கட்டாரிடம் ஒப்படைக்கும் வைபவம் ரஷ்ய ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.  

இந்த வைபவத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், கட்டார் நாட்டு அமீர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல்தானி, பிஃபா தலைவர் ஜியானி இன்பான்டினோ ஆகியோர் பங்கேற்றனர்.  

குரோஷியாவை வீழ்த்தி இரண்டாவது தடவையாக உலகக் கிண்ணத்தை வென்ற பிரான்ஸ்

குரோஷிய அணியுடனான விறுவிறுப்பான இறுதிப் …

இதில் ரஷ்ய ஜனாதிபதி புடின், கட்டாரின் அமீர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல்தானியிடம் கால்பந்து ஒன்றை வழங்கி, அடுத்த உலகக் கிண்ணத்தை நடத்துவதற்கான பொறுப்பை உத்தியோகபூர்வமாக ஒப்படைத்தார்.  

இதன்படி, போட்டியை நடத்துவதற்கான முழு ஏற்பாடுகளை கட்டார் இனி மேற்கொள்ள உள்ளது. அத்துடன், 2022 உலகக் கிண்ணப் போட்டிகளை 12 மைதானங்களில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் 8 மைதானங்கள் புதிதாக அமைக்கவும், ஏனைய 4 மைதானங்களை புனர்நிர்மாணிக்கவும் ஏற்பாட்டுக் குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அத்துடன், இந்த அனைத்து மைதானங்களும் கட்டாரில் நிலவுகின்ற அதிக உஷ்ணத்தை கட்டுப்படுத்தும் வகையில் நிர்மானிக்கப்படவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந்த நிலையில், உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளுக்காக மாத்திரம் கட்டார் அரசாங்கத்தினால் 5 பில்லியன் பவுண்கள் (கிட்டத்தட்ட 1000 பில்லியன் ரூபா) செலவிடப்படவுள்ளது. அத்துடன், அனைத்து விளையாட்டு மைதானங்களினதும் நிர்மாணப் பணிகளையும் எதிர்வரும் 2021ஆம் ஆண்டிற்குள் நிறைவு செய்யவும் போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  

காணொளிகளைப் பார்வையிட…   

இதேநேரம், 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி வரை உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் நடைபெற உள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 32 அணிகள் பங்கேற்கும் கடைசி உலகக் கிண்ணத் தொடரை கட்டார் நடத்த உள்ளது.

இதுதொடர்பில் நடைபெற்ற விசேட வைபவத்தில் பிஃபா தலைவர் ஜியானி இன்பான்டினோ கருத்து வெளியிடுகையில், கோடைக்காலத்தில் கட்டாரில் உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்துவது பொருத்தமாக இருக்காது. இதனால், அங்குள்ள காலநிலையை கருத்திற்கொண்டு குளிர் காலத்தில் போட்டியை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். எனவே, அனைத்து உலக கால்பந்து அமைப்புகளும் தங்களது லீக் போட்டிகளின் திகதிகளை 2022இல் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்.

அத்துடன், 2022 உலகக் கிண்ணத்தில் தற்போதுள்ள 32 அணிகளை 48ஆக உயர்த்துவது குறித்து கட்டார் கால்பந்து நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளேன்எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, 2026ஆம் ஆண்டு அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடாத்தவுள்ள உலகக் கிண்ண கால்பந்து தொடரில் அணிகளின் பங்கேற்பை 48 ஆக உயர்த்துவதற்கு பிஃபா ஏற்கனவே அனுமதியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க…