பிக் பேஷ் லீக் (BBL) வீரர்கள் ஏலத்தில் ஐந்து இலங்கை வீரர்கள்

1674

இந்த ஆண்டு (2022) நடைபெறவுள்ள அவுஸ்திரேலியாவின் பிக் பேஷ் லீக் (BBL) T20 தொடரின் ஏலத்தில் மொத்தம் 15 நாடுகளைச் சேர்ந்த 169 வீரர்கள் இதுவரை தங்கள் பெயர்களை பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்துக்கான ICCயின் சிறந்த வீரர்களுக்கான பட்டியலில் பிரபாத்!

பிக் பேஷ் லீக் (BBL) ஏலத்தின் வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவுகள் இம்மாதம் 21ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், இந்த வீரர்கள் ஏலத்திற்காக இலங்கை, பங்களாதேஷ், அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், தென்னாபிரிக்கா மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் ஏலத்திற்காக இலங்கை அணியினைப் பொறுத்தவரை அதிரடி சகலதுறை வீரரான பானுக்க ராஜபக்ஷ, பிரபாத் ஜயசூரிய, தினேஷ் சந்திமால், லக்ஷான் சந்தகன் மற்றும் மகீஷ் தீக்ஷன ஆகியோர் தங்களது பெயர்களை பதிவு செய்திருக்கின்றனர். இதில் 30 வயது நிரம்பிய பிரபாத் ஜயசூரிய அண்மையில் நடைபெற்று முடிந்த இலங்கை – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரில் 12 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்ததோடு, அதனை அடுத்து நடைபெற்ற பாகிஸ்தான் டெஸ்ட் தொடரிலும் திறமையினை வெளிப்படுத்தியிருந்தார்.

அதேநேரம் பிரபாத் ஜயசூரிய இதுவரை மொத்தமாக 56 உள்ளூர் T20 போட்டிகளில் ஆடி 73 விக்கெட்டுக்களைச் சாய்த்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர மொஹமட் செஹ்ஷாத், ரஷீட் கான், மணிக்கட்டு சுழல் நட்சத்திரம் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரும் வீரர்கள் ஏலத்திற்காக தங்களது பெயர்களை பதிவு செய்திருப்பதோடு, பங்களாதேஷ் அணியின் வலதுகை வேகப் பந்துவீச்சாளர் சபியுல் இஸ்லாமும் ஏலத்தில் காணப்படுகின்றார்.

இதேநேரம், தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர வீரர்களான பெப் டூ பிளேசிஸ், இம்ரான் தாஹிர் மற்றும் ரில்லி ரூசோ ஆகியோரும் ஏலத்தில் காணப்படுவதோடு, மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திரம் கீய்ரோன் பொலார்ட், டுவேய்ன் பிராவோ இங்கிலாந்தின் அதிரடி நாயகன் லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோரும் ஏலத்தில் இருக்கின்றனர்.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு அடுத்த தோல்வி

இவர்கள் தவிர நேபாள நட்சத்திரம் சந்தீப் லமிச்சானே, வளர்ந்து வரும் வீரர்களான அயர்லாந்து அணியின் ஹர்ரி டெக்டர், ஐக்கிய அமெரிக்க அணியின் அலி கான் மற்றும் ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ரஷா ஆகிய வீரர்களும் தங்களது பெயர்களை ஏலத்திற்காக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<