இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்த புளூஸ் அணி

146

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) ஒழுங்கு செய்திருக்கும், அழைப்பு T20 தொடரில் SLC கிரேஸ் அணிக்கு எதிராக 4 விக்கெட்டுக்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ள சரித் அசலன்க தலைமையிலான புளூஸ் அணி தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

தொடரில் முதல் வெற்றியினைப் பதிவு செய்த கீரின்ஸ் அணி

புதன்கிழமை (11) கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய கிரேஸ் அணி தொடக்கத்தில் இருந்து தடுமாற்றம் காட்டியதோடு 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 115 ஓட்டங்கள் மாத்திரமே பெற்றது.

கிரேஸ் அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக தனுக தாபரே 30 பந்துகளை எதிர்கொண்டு 33 ஓட்டங்கள் பெற, புளூஸ் அணி பந்துவீச்சில் பிரவீன் ஜயவிக்ரம 3 விக்கெட்டுக்களையும், சாமிக்க கருணாரட்ன 2 விக்கெட்டுக்களையும் சுருட்டினர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கை அடைய பதிலுக்கு துடுப்பாடிய புளூஸ் அணி போட்டியின் வெற்றி இலக்கை 18.3 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 119 ஓட்டங்களுடன் அடைந்தது.

புளூஸ் அணி துடுப்பாட்டத்தில் அதன் வெற்றிக்கு பங்களிப்பு வழங்கிய அதன் தலைவர் சரித் அசலன்க 20 பந்துகளுக்கு 29 ஓட்டங்கள் எடுக்க, அஷேன பண்டார ஆட்டமிழக்காமல் 23 பந்துகளில் 27 ஓட்டங்கள் எடுத்தார்.

முதல் போட்டியில் ஷானகவின் அணிக்கு தோல்வி

இதேநேரம் கிரேஸ் அணியின் பந்துவீச்சில் மிலான் ரத்நாயக்க 3 விக்கெட்டுக்களை சாய்த்த போதும் அவரின் பந்துவீச்சு வீணாகியது.

போட்டியின் சுருக்கம்

முடிவு – புளூஸ் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<