இந்திய A அணியை எதிர்கொள்ளும் தென்னாபிரிக்க A குழாம் அறிவிப்பு

22
SuperSport

தென்னாபிரிக்க அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரரான எய்டன் மார்க்ரம் நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரின் அணித்தலைவராகவும், ஒருநாள் தொடரின் அணித்தலைவராக தென்னாபிரிக்க அணியின் மற்றுமொரு துடுப்பாட்ட வீரரான டெம்பா பவுமாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

தென்னாபிரிக்க A அணியானது ஆகஸ்ட் மாத இறுதியில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய A அணியுடன் உத்தியோகபூர்வற்ற ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் உத்தியோகபூர்வற்ற இரண்டு நான்கு நாள் டெஸ்ட் போட்டிகள் கொண்ட இரு தொடர்களில் விளையாடவுள்ளது. குறித்த சுற்றுப்பயணத்திற்கான தென்னாபிரிக்க A அணியின் இரு குழாம்களும் அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழு தலைவர் லிண்டா ஸொன்டியினால் நேற்று (29) வெளியிடப்பட்டது.

அரையிறுதியை எதிர்பார்த்துள்ள இலங்கை அணிக்கு இறுதி வாய்ப்பு

உலகக் கிண்ணத் தொடரில் தங்களுடைய அரையிறுதி கனவுக்கான இறுதி…

ஒருநாள் தொடருக்கான குழாம்

தென்னாபிரிக்க அணிக்காக 38 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள 29 வயதுடைய டெம்பா பவுமா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள ஒருநாள் குழாமில், உலகக்கிண்ண தொடருக்காக தென்னாபிரிக்க அணியின் குழாமில் இடம்பெற்று உபாதை காரணமாக ஒரு போட்டியும் விளையாடாத நிலையில் குழாமிலிருந்து வெளியேறிய பந்துவீச்சாளர் அன்ரிச் நோட்ரி ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய இரு குழாம்களிலும் இடம்பெற்றுள்ளார். 

அதேபோன்று உபாதையால் உலகக்கிண்ண தொடரிலிருந்து பயிற்சிப்போட்டியுடன் வெளியேறிய வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டைனுக்கு பதிலாக மாற்றீடு செய்யப்பட்ட பியூரன் ஹென்ட்ரிக்ஸ் இரு குழாம்களிலும் இடம்பெற்றுள்ளார். 

மேலும் தென்னாபிரிக்க அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள கிஹான் க்ளோட்டே, ஜூனியர் டாலா, தியூனிஸ் டி ப்ரோன், ரீஸா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் க்ளாஸன், ஜெனீமன் மாலன், வியான் முல்டர், லுதோ சிபம்லா, சினிதெம்பா கியூஸிலி ஆகிய ஒன்பது வீரர்கள் ஒருநாள் குழாமில் இடம்பெற்றுள்ளனர். 

15 பேர் கொண்ட ஒருநாள் குழாம்

டெம்பா பவுமா (அணித்தலைவர்), மெத்யூ பிரீட்க்கீ, கிஹான் க்ளோட்டே, ஜூனியர் டாலா, தியூனிஸ் டி ப்ரோன், போர்ஜன் போர்டின், பியூரன் ஹென்ட்ரிக்ஸ், ரீஸா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் க்ளாஸன், ஜோர்ஜ் லின்டி, ஜெனீமன் மாலன், வியான் முல்டர், அண்ரிச் நோட்ரி, சினிதெம்பா கியூஸிலி, லுதோ சிபம்லா    

டெஸ்ட் தொடருக்கான குழாம்

நடப்பு உலகக்கிண்ண தொடரில் தென்னாபிரிக்க அணிக்காக விளையாடிவரும் 24 வயதுடைய இளம் வீரர் எய்டன் மார்க்ரம் தலைமையில் வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் குழாமில் ஒருநாள் அணியின் தலைவர் டெம்பா பவுமா மற்றும் ஒருநாள் குழாமில் இடம்பெற்றுள்ள தியூனிஸ் டி ப்ரோன், பியூரன் ஹென்ட்ரிக்ஸ், ஜோர்ஜ் லின்டி, வியான் முல்டர், அண்ரிச் நோட்ரி, லுதோ சிபம்லா ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

சம்மு அஷான், அஷேன் பண்டாரவின் அதிரடியுடன் இலங்கை வளர்ந்து வரும் அணிக்கு முதல் வெற்றி

தென்னாபிரிக்கா வளர்ந்து வரும் அணிக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரில்…

மேலும் உள்ளூர் தொடர்களில் பிரகாசித்த பல வீரர்களுக்கு இந்திய A அணியுடனான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

15 பேர் கொண்ட டெஸ்ட் குழாம்

எய்டன் மார்க்ரம் (அணித்தலைவர்), டெம்பா பவுமா, தியூனிஸ் டி ப்ரோன், சுபைர் ஹம்ஸா, பியூரன் ஹென்ட்ரிக்ஸ், ஜோர்ஜ் லின்டி, பீட்டர் மாலன், எடி மோர், வியான் முல்டர், செனூரன் முத்துசாமி, அண்ரிச் நோட்ரி, டேன் பைட், ருடி செகன்ட், லுதோ சிபம்லா, காய ஸொன்டோ

போட்டி அட்டவணை

  • 29 ஆகஸ்ட் – முதலாவது ஒருநாள் போட்டி – திரிவந்தரம்
  • 30 ஆகஸ்ட் – இரண்டாவது ஒருநாள் போட்டி – திரிவந்தரம்
  • 02 செப்டம்பர் – மூன்றாவது ஒருநாள் போட்டி – திரிவந்தரம்
  • 04 செப்டம்பர் – நான்காவது ஒருநாள் போட்டி – திரிவந்தரம்
  • 06 செப்டம்பர் – ஐந்தாவது ஒருநாள் போட்டி – திரிவந்தரம்
  • 10 – 13 செப்டம்பர் – முதலாவது டெஸ்ட் போட்டி – வைனட்
  • 17 – 20 செப்டம்பர் – இரண்டாவது டெஸ்ட் போட்டி – மைசூர்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<