சத்யா தலைமையில் SLC தலைவர் மகளிர் பதினொருவர் அணி

Bangladesh Women tour of Sri Lanka 2023

173
Bangladesh Women tour of Sri Lanka 2023

பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் பயிற்சிப் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் மகளிர் பதினொருவர் குழாம் (SLC XI) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பங்களாதேஷ் மகளிர் அணிக்கும், இலங்கை மகளிர் அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் T20i தொடர் இம்மாதம் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், பங்களாதேஷ் மகளிர் அணிக்கும், இலங்கை கிரிக்கெட் சபை மகளிர் பதினொருவர் அணிக்கும் இடையிலான ஒருநாள் பயிற்சிப் போட்டி நாளை (27) கொழும்பு CCC மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் சபை பெயரிட்டுள்ள இலங்கை கிரிக்கெட் சபை மகளிர் பதினொருவர அணியின் தலைவியாக சத்யா சந்தீபனி செயல்படவுள்ளதுடன், பல இளம் வீராங்கனைகளுக்கு இந்த குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

இலங்கை கிரிக்கெட் சபை மகளிர் பதினொருவர் குழாம்

சத்யா சந்தீபனி (அணித்தலைவி), கௌஷினி நுத்யங்கனா (உதவி தலைவி), உமேஷா திமாஷினி, பியூமி வத்சலா, தெவ்மி விஹங்கா, சச்சினி நிசன்சலா, மதுஷிகா மெத்தானந்த, நெத்மி சேனாரத்ன, தாருகா ஷெஹானி, நிமேஷா மதுஷானி, மல்கி மதாரா, அமாதி விஜேசிங்க, சந்துனி நிசன்சலா, நிலக்ஷனா சந்தமானி, நவோத்யா நெத்மி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<