தென் கொரிய அணியிடம் வீழ்ந்த இலங்கை ரக்பி அணி

164

ஆசிய விளையாட்டு விழாவில் தான் பங்குபற்றிய இரண்டாவது போட்டியில் 31-24 என தென் கொரிய அணியிடம்  இலங்கை ரக்பி அணி தோல்வியுற்றது. பங்குபற்றிய முதல் போட்டியில் 68-0 என்ற புள்ளிகள் கணக்கில் ஐக்கிய அரபு இராச்சியத்தை இலங்கை அணி வென்றது குறிப்பிடத்தக்கது.

இலங்கை எதிர் தென் கொரியா

ஐக்கிய அரபு இராச்சியத்தை 68-0 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்த இலங்கை அணி, அதே திறமையை வெளிக்காட்டும் நோக்கில் போட்டியில் களமிறங்கியது. எனினும் போட்டியின் முதல் நிமிடத்திலேயே கொரிய அணி   ட்ரை வைத்து அழுத்தம் கொடுத்தது. தொடர்ந்து இரண்டாவது ட்ரை வைய்த்த கொரிய அணி 10-0 என முன்னிலை அடைந்தது.

ஆசிய விளையாட்டில் இலங்கை அஞ்சலோட்ட அணிக்கு நான்காமிடம்

இலங்கையின் நட்சத்திர வீரர் ஸ்ரீநாத் சூரியபண்டார இலங்கை அணி சார்பாக முதல் ட்ரை வைத்து அணிக்கு நம்பிக்கை கொடுத்தார்.தொடர்ந்து அவரே கொன்வெர்சனை பூர்த்தி செய்ய இலங்கை வெறும் 3 புள்ளிகளால் பின்னிலையில் காணப்பட்டது. எனினும் முதல் பாதி நிறைவடைய முன்னர் மற்றுமொரு ட்ரை வைத்து கொரிய அணி மேலும் 7 புள்ளிகளை பெற்றுக்கொண்டது.

முதல் பாதி: தென் கொரியா 17 – 7 இலங்கை

இலங்கை அணி ரசிகர்களுக்கு இரண்டாவது பாதியிலும் ஏமாற்றமே காத்திருந்தது. தென் கொரிய அணி மற்றுமொரு ட்ரை வைத்து 24 புள்ளிகளுக்கு முன்னேறியது. இலங்கை ரீசா றபாய்தீன் மூலமாக ட்ரை வைத்து புள்ளி வித்தியாசத்தை குறைத்தது. இலங்கை தொடர்ந்து புத்திம பிரியரத்ன மூலமாக ட்ரை வைத்து அசத்திய பொழுதும், லீ ஜேபுக் தென் கொரிய அணி சார்பாக தனது 3ஆவது ட்ரை வைத்து கொரிய அணியின் வெற்றியை உறுதி செய்தார். இலங்கை சுதம் சூரியாராச்சி மூலமாக ட்ரை வைத்தாலும், அது ஆறுதல் ட்ரையாகவே அமைந்தது.

முழு நேரம்: தென் கொரியா 31 (5T, 3C) – 26 (4T, 3C) இலங்கை

அடுத்த சுற்றுக்கு தெரிவாக இலங்கை அணி ஆப்கானிஸ்தானுடன் நடைபெறும் அடுத்த போட்டியில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும்

புள்ளிகள் பெற்றோர்

இலங்கை – ஸ்ரீநாத் சூரியபண்டார (1T, 2C), ரீசா றபாய்தீன் 1T, புத்திம பிரியரத்ன 1T, சுதம் சூரியாராச்சி 1T

இலங்கை எதிர் ஐக்கிய அரபு இராச்சியம்

ஆசிய விளையாட்டு விழாவில் தனது முதலாவது போட்டியில் ஐக்கிய அரபு இராச்சிய அணியை எதிர் கொண்ட இலங்கை ரக்பி அணி, 68-00 என்ற புள்ளிகள் கணக்கில் பாரிய வெற்றியீட்டியது.

ஆசிய விளையாட்டில் இலங்கை பளுதூக்கல் வீரர்களுக்கு ஏமாற்றம்

போட்டியின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இலங்கை அணி முதலாவது நிமிடத்திலேயே ஸ்ரீநாத் சூரியபண்டார மூலமாக ட்ரை வைத்து ட்ரை மழையை ஆரம்பித்து வைத்தது. அடுத்தடுத்து தொடர்ந்து ட்ரை வைத்த இலங்கை அணி முதல் பாதியில் 4 ட்ரைகளை வைத்து அசத்தியது

முதல் பாதி: இலங்கை 28 – 00 ஐக்கிய அரபு இராச்சியம்

இரண்டாம் பாதியிலும் ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கு எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் வழங்காத இலங்கை அணி ட்ரை மழையை தொடர்ந்து பொழிந்தது. இரண்டாம் பாதியில் 6 ட்ரைகளை வைத்து அசத்திய இலங்கை அணி போட்டியில் மொத்தமாக 10 ட்ரைகளை வைத்து அனைவரையும் அசர வைத்தது.

முழு நேரம்: இலங்கை 68 (10T, 8C ) – 00 ஐக்கிய அரபு இராச்சியம்

புள்ளிகள் பெற்றோர்

கவிந்து பெரேரா 3T, ஸ்ரீநாத் சூரியபண்டார 2 T 2C, தனுஷ் தயான் 2T, சுதர்ஷன முததந்திரி 1T, சுதம் சூரியாராச்சி 1T 1C, புத்திம பிரியரத்ன 1T 1C, தரிந்த ரத்வத்த 5C

>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<